சென்னை : தங்கம் விலை, நேற்று சவரனுக்கு, 152 ரூபாய் குறைந்து, 20,744 ரூபாய்க்கு விற்பனையானது. சென்னையில், சென்ற மாதம் துவக்கத்தில், தங்கம் விலை, கடும் வீழ்ச்சி கண்டது. இருப்பினும், கடந்த வாரம் முதல், இதன் விலை, தொடர்ந்து உயர்ந்து வந்தது.
நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், 1 கிராம், 2,612 ரூபாய்க்கும், 1 சவரன், 20,896 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 27,935 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று தங்கம் விலை, கிராமுக்கு, 19 ரூபாய் குறைந்து, 2,593 ரூபாய்க்கும்; சவரனுக்கு, 152 ரூபாய் சரிவடைந்து, 20,744 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 10 கிராம் சுத்த தங்கம், 200 ரூபாய் குறைந்து, 27,735 ரூபாய்க்கு விற்பனையானது.
அதேசமயம், ஒரு கிராம் வெள்ளி, 20 பைசா உயர்ந்து, 49.20 லிருந்து, 49.40 ரூபாயாகவும்; ஒரு கிலோ பார் வெள்ளி, 195 ரூபாய் அதிகரித்து, 45,935 லிருந்து, 46,130 ரூபாயாகவும் உயர்ந்திருந்தது.