செளதி அரேபியாவில் கனமழை: திடீர் வெள்ளத்தில் 13 பேர் பலி, பலரை காணவில்லை

 flash floods saudi arabia kill 13 ரியாத்: தெற்கு அரேபியாவில் கனமழை பெய்ததால் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலரை தேடும் பணி நடைபெறுகிறது. 

தெற்கு அரேபியாவில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த மழை பெய்துள்ளது. அதன் காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் 13 பேர் பலியாகியுள்ளனர்.

நால்வருக்கும் அதிகமானோர் காணாமல் போனதாக தேடப்பட்டு வருகின்றனர். இதற்கு முன்னர் 2011ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 10 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

தெற்கு அரேபியாவின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மிக மோசமான வெள்ளத்தில் சிக்கிய பலர், மரக் கிளைகளைப் பிடித்துக் கொண்டு தொங்குவதையும், கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதையும் அந்நாட்டு தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோவில் பதிவாகியுள்ளது
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: