உலகின் அதிவேக மனிதராக புகழப்பெறும் உசேன் போல்ட் பெயரில் சிறப்பு பதிப்பு ஜிடி-ஆர் ஸ்போர்ட்ஸ் காரை நிசான் கடந்த ஆண்டு வடிவமைத்தது. தங்க நிறத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த கார் சமீபத்தில் ஏலத்தில் விடப்பட்டது. ரூ.1.01 கோடிக்கும் இந்த கார் ஏலம் போனது. ஏலம் எடுத்தவரிடம் இந்த கார் விரைவில் ஒப்படைக்கப்பட உள்ளது. ஏலத்தில் கிடைத்தை தொகை உசேன் போல்ட் பவுண்டேசன் மூலம் ஜமைக்காவை சேர்ந்த ஆதரவற்ற குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட இதர பணிகளுக்கு செலவிடப்பட உள்ளது.
இந்த நிலையில், ஜிடி-ஆர் காரின் விளம்பர தூதராக உசேன் போல்ட் இருந்து வருகிறார். எனவே, அவருக்காகவே ஒரு புதிய தங்க நிற ஜிடி-ஆர் காரை நிசான் வடிவமைத்தது. உசேன் போல்ட்டின் டிரைவிங் மற்றும் இதர விருப்பத்திற்கேற்ப இந்த கார் கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளது. கருப்பு, வெள்ளை இன்டியருடன் தங்க நிறத்தில் ஜொலிக்கும் இந்த காரில் போஸ் ஆடியோ சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கிறது. 10 ஸ்போக் ஹைப்பர் டைட்டானியம் ரேஸ் -போர்ஜ்டு அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கடந்த ஞாயிற்றுக் கிழமை ஜமைக்காவிலுள்ள உசேன் போல்ட் பயிற்சி மையத்தில் நடந்த விழாவில் இந்த சிறப்பு பதிப்பு காரை உசேன் போல்ட்டிடம் நிசான் வழங்கியது.
நிசான் ஜிடிஆர்






