தேர்தலில் போட்டியிட முஷாரப்புக்கு வாழ்நாள் தடை: பாகிஸ்தான் கோர்ட்டு அதிரடி

 Musharraf Banned From Pakistan Elections For Life இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் முஷாரப் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கி உள்ளது. 

பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் முஷாரப் மீது 2007-ம் ஆண்டில் நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தியது, பெனாசிர் பூட்டோவுக்கு உரிய பாதுகாப்பு வழங்காததால் அவர் படுகொலை செய்யப்பட்டது, சட்டத்துக்கு புறம்பாக 60 நீதிபதிகளை பதவி நீக்கம் செய்து சிறையில் அடைத்தது, 2006-ம் ஆண்டில் ராணுவ தாக்குதலில் பஜோக் இயக்க தலைவர் அக்பர் பக்தி கொல்லப்பட்டது உள்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யபட்டன. கடந்த 4 ஆண்டுகளாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த 69 வயது முஷாரப் தற்போது நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக அண்மையில் பாகிஸ்தானுக்கு திரும்பினார். 4 தொகுதிகளில் போட்டியிட தாக்கல் செய்த அவரது மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.. 

தற்போது 60 நீதிபதிகளை சிறையில் அடைத்தது மற்றும் பெனாசிர் பூட்டோ படுகொலை தொடர்பான வழக்கில் முஷரப் கைது செய்யப்பட்டுள்ளார். வேட்பு மனுக்கள் தள்ளுபடியை எதிர்த்து முஷாரப் சார்பில், பெஷாவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. தலைமை நீதிபதி முகமதுகான் தலைமையிலான 4 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரணை நடத்தியது. முஷாரப்பின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த தலைமை நீதிபதி முகமதுகான், முஷாரப் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதித்து தீர்ப்பு கூறினார். பாகிஸ்தானில் 2 முறை தேர்தல் நடத்த தடை விதித்ததற்கும் 2007-ம் ஆண்டு நெருக்கடி நிலையின்போது நீதிபதிகள் சிறை வைக்கப்பட்டதற்காகவும் இந்த தடை விதிக்கப்படுவதாக தலைமை நீதிபதி தெரிவித்திருக்கிறார்.. 
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: