கணக்கில் 29905, அறிவியலில் 38154, சமூக அறிவியலில் 19680 மாணவர்கள் நூற்றுக்கு நூறு!

சென்னை: பத்தாம் வகுப்பில் கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு மாணவ மாணவிகள் அதிக அளவில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். 

கணக்கில் மட்டும் 29905 பேர் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர். 

அறிவியலில் 38154 பேர் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர். 

வழக்கமாக கணக்கில்தான் அதிகம்பேர் சென்ட்டம் அடிப்பார்கள். ஆனால் இந்த முறை அறிவியலில் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது. 

சமூக அறிவியல் பாடத்தில் 19680 பேர் நூற்றுக்கு நூறு பெற்று சாதனை படைத்துள்ளனர். 

எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்: கலக்கிய மாணவிகள்... 498 மதிப்பெண்களுடன் 9 மாணவிகள் முதலிடம்!

 Sslc Results Namakkal Girl Tops சென்னை: தமிழகம் முழுவதும் 10.50 லட்சம் மாணவ மாணவிகள் எழுதிய எஸ்எஸ்எல்சி (10-ம் வகுப்பு) தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. 

ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த கொங்கு வேளாளர் பள்ளி மாணவி அனுஷா 498 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். இதேபோல மேலும் 8 மாணவிகள் 498 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். முதலிடம் பெற்ற 9 பேருமே மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

மாணவி 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மொத்தம் 52 மாணவ மாணவிகள் மாநிலத்தில் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். 496 மதிப்பெண்கள் பெற்று 137 மாணவர்கள் மூன்றாம் இடம் பிடித்துள்ளனர். 

இலவசமாக... 

பிளஸ்-2 தேர்வு முடிவை ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேசிய தகவலியல் மையத்திலும் (நிக் சென்டர்), அனைத்து மாவட்ட மைய நூலகங்களிலும், கிளை நூலகங்களிலும் மாணவ-மாணவிகள் இலவசமாக தெரிந்துகொள்ள தேர்வுத்துறை ஏற்பாடு செய்யப்பட்டது. அதேபோல, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவையும் எவ்வித கட்டணமும் இல்லாமல் இலவசமாக தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மதிப்பெண் பட்டியல் 

மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் ஜூன் 20ம் தேதி வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பள்ளி மாணவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களிடமும், தனி ‌தேர்வர்கள் தேர்வெழுதிய மையங்கள் மூலமாகவும் மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம். 

மோசடி... ஆம்வே நிறுவன இந்திய சிஇஓ, 2 இயக்குநர்கள் கைது!


திருவனந்தபுரம்: அமெரிக்க மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனமான ஆம்வேயின் இந்திய தலைமை செயல் அதிகாரி ஸ்காட் பின்க்னே மற்றும் 2 நிர்வாக இயக்குநர்கள் மோசடிப் புகாரில் கேரள மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த விசாலாட்சி என்பவர் தாம் ஆம்வே பொருட்களை விற்பனை செய்ததில் சுமார் ரூ3 லட்சம் நட்டம் ஏற்பட்டது என்று போலீசில் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். ரூ37 மதிப்புள்ள பொருளை ரூ395க்கு ஆம்வே நிறுவனம் விற்பனை செய்ததும் இந்த விசாரணையில் தெரியவந்தது. ஆம்வே நிறுவனத்தின் மோசடிகள் தொடர்பாக வழக்குகளில் ஆம்வே தலைமை செயல் அதிகாரி ஸ்காட் முன்ஜாமின் பெற்றிருந்தார்.
இந்நிலையில் இரு மோசடி வழக்குகளில் கேரள மாநிலம் வயநாட்டில் ஸ்காட் மற்றும் அந்நிறுவன இயக்குநர்கள் சஞ்சய் மல்கோத்ரா மற்றும் அஞ்சு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ரூ. 2.5 கோடி மதிப்பிலான ஆம்வே பொருட்கள் குடோன்களில் இருந்தும் பறிமுதல் செய்யபட்டன. ஆம்வே நிறுவனத்தின் இன்சூரன்ஸ் திட்டம் தொடர்பாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாகவும் கேரள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

மியான்மரில் முஸ்லிம்கள் 2க்கு மேல் குழந்தை பெறக் கூடாது! மியான்மர் அரசின் உத்தரவு!


மியான்மரில் முஸ்லிம்கள் 2-க்கு மேல் குழந்தை பெறக்கூடாது என்று மியான்மர் அரசு உத்தரவிட்டுள்ளது. ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும், ராக்கேன் புத்தர்களுக்கும் இடையே மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்காக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்களாம் மியான்மர் அதிகாரிகள்.
95 சதவீத முஸ்லிம் மக்கள் தொகையைக் கொண்ட புத்திதவ்க், முன்தாவ் ஆகிய மாநிலங்களில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் கூடாது என்ற சட்டம் அமலுக்கு வந்துள்ளதாக அசோசியேட் ப்ரஸ் கூறுகிறது.
புத்தர்களின் மக்கள் தொகை அதிகரிப்பை விட பத்து மடங்கு ரோஹிங்கியா முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக ராக்கேன் மாநில அரசுச் செய்தி தொடர்பாளர் வின் மியாங் கூறுகிறார்.
கடந்த ஆண்டு மியான்மரில் புத்த தீவிரவாதிகள் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

ஸ்கைப்பின் மிகப்பெரும் அபாயங்கள் உஷார்

வெளிநாட்டில் இருக்கும் ஒருவருடன் நாம் எளிதில் பேச இன்று பலரும் பயன்படுத்துவது ஸ்கைப் நெட்வோர்க்கை தான். 

இதில் இருக்கும் ஆபத்துகள் உண்மையில் பலருக்கு தெரிவதில்லை ஸ்கைப்பில் நீங்கள் உரையாடுவது பதிவு செய்யபடுகின்றது அது தெரியுமா உங்களுக்கு. 

மேலும் ஸ்கைப்பில் இருக்கும் வைரஸ் தான் இணையத்திலேயே மிக கொடுமையான வைரஸ். 

இந்தியாவில் ஸ்கைப் பயன்படுத்துவோர் பெற்று வரும், கெடுதல் விளைவிக்கும் ஸ்பாம் மெயில் குறித்து எச்சரிக்கை கொடுத்து வந்தது. தற்போது இந்த ஸ்பாம் வேகமாகப் பரவி வருவதாக அறிவித்துள்ளது. 

இந்த வைரஸ் உங்கள் கணிப்பொறியை என்னென்ன செய்யும் என்பதை கீழே பாருங்கள் சற்று அதிர்ந்தே போய்விடுவீர்கள்...

ஸ்கைப்பின் அபாயங்கள்:

இந்தியாவில் மட்டுமே இது வேகமாக இயங்கி வருகிறது. ஸ்கைப் பயன்படுத்துவோரின் காண்டாக்ட் முகவரி எளிதாக அவர்களைச் சென்றடையும்.

இதில் ஏதேனும் ஒரு லிங்க் தரப்பட்டிருக்கும். இதில் கிளிக் செய்தால், கெடுதல் விளைவிக்கும் வைரஸ் புரோகிராம், கம்ப்யூட்டரில் வந்து விடும்.

பின்னர் இந்த புரோகிராம், கம்ப்யூட்டரில் தரப்படும் பெர்சனல் தகவல்களை, இணையம் மற்றும் வங்கி அக்கவுண்ட்களுக்கான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களை, தொலைவில் உள்ள இன்னொரு சர்வருக்கு அனுப்பிக்கொண்டே இருக்கிறது.

அதனை இயக்குபவர், அங்கிருந்தே, உங்கள் கம்ப்யூட்டரைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வகையில் இந்த வைரஸ் புரோகிராம் செயல்படும்.

இதனைத் தவிர்க்க, ஸ்கைப் காண்டாக்ட் முகவரியில் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து வரும் இன்ஸ்டண்ட் மெசேஜில் உள்ள லிங்க்கில் கிளிக் செய்திடக் கூடாது.



ஈரோட்டில் குவியும் கோவா விவசாயிகள்: ஒரே வியாபாரி 100 மாடுகளை வாங்கினார்

ஈரோடு: கோவா விவசாயிகள் அதிகளவில் ஈரோடு மாட்டு சந்தையில் கறவை மாடுகளை வாங்கிச் செல்கின்றனர். குறிப்பாக அதிக பட்சமாக ஒரு விவசாயி மட்டும் 100 மாடுகளை வாங்கினார். 

ஈரோடு கருங்கல்பாளையத்தில் வியாழன்தோறும் மாட்டு சந்தை நடப்பது வழக்கம். அப்போது சுற்றுவட்டாரத்தில் உள்ள ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து கறவை மாடுகள், எருமை மாடுகள் போன்றவை விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. 

இதனால், வெளிமாநிலங்களில் இருந்து கறவை மாடுகள், எருமை மாடுகளை வாங்க பெருமளவில் இங்கு வருகின்ரனர். வழக்கம்போல், இன்று காலை நடந்த சந்தையில் கோவா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகளும், நுகர்வோரும் வந்திருந்தனர். இங்கு செவலை மற்றும் கிராஸ் சிந்து மாடுகள் ரூ.16 ஆயிரம் முதல் 33 ஆயிரம் வரை கறவை திறனுக்கு ஏற்ப விலை வைத்து விற்கப்படுகிறது. 

கோவா மாநில வியாபாரி ஒருவர் மட்டும் 100 கறவை மாடுகளை வாங்கியது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மாட்டு சந்தை மேலாளர் முருகன் கூறுகையில், 'கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கோவா அரசு ஈரோடு பகுதியில் இருந்து வாங்கி சென்ற கறவை மாடுகள் கோவா பகுதி சீதோஷ்ண நிலையை தாங்குகின்றன. 

கூடுதல் கறவை திறனுடன் மாடுகள் பால் தருகிறது. இதையடுத்து ஈரோட்டில் இருந்து 6 ஆயிரம் கறவை மாடுகள் வாங்க கால்நடை வளர்ப்போருக்கு லோன் வழங்குவதாக கோவா அரசு அறிவித்திருந்தது. அதன்படி தற்போது கோவா மாநிலத்தில் இருந்து அதிகளவில் வியாபாரிகளும், நுகர்வோரும் ஈரோடு சந்தைக்கு வந்துள்ளனர். 

ஒரே வியாபாரி 100 செவலை மற்றும் சிந்து கிராஸ் மாடுகளை வாங்கியுள்ளார் என முருகன் தெரிவித்தார். 

ஸ்ரீசாந்த் வீசிய பந்தில் கிளீன் போல்ட் ஆன நடிகைகள்…

கிரிக்கெட் வீரர்களுக்கு எப்போதுமே ஒரு கிரேஸ் இருக்கும். சினிமா நடிகர்களும், நடிகைகளுமே அவர்களுக்கு ரசிகர்களாகிவிடுவார்கள். அந்த புகழைவைத்து நடிகைகளுடன் நட்பு பாராட்டுவார்கள் கிரிக்கெட் வீரர்கள். 

சிலர் நட்போடு நிறுத்திவிடுவார்கள். சிலர் திருமணம் வரை போய் குடும்பம், குழந்தை என்று செட்டில் ஆகிவிடுவார்கள். வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் இதில் வேறொரு ரகம். 

விளம்பரம், ரியாலிட்டி ஷோ என உடன் நடித்த நடிகைகள் அனைவருடனும் ரொமான்ஸ் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் நடிகைகளுக்கு இடையே குடிமிப்பிடி சண்டையே நடந்துள்ளதாம்.


லட்சுமி ராய் இவர் கேப்டன் டோணியுடன் கிசுகிசுக்கப்பட்டவர். பின்னர் டோணிக்கு மணமான உடன் ஸ்ரீ சாந்த் நட்பு வட்டத்தில் இணைந்து விட்டார்.


நிஷா படேல் உடன் அதிக நெருக்கம் காட்டியவர் ஸ்ரீ சாந்த் சிசிஎல் போட்டியின் போது உடன் சுற்றிக் கொண்டிருப்பார்.


ஸ்ரீசாந்த் யாருக்கு பாய்ஃபிரண்ட் என்பதில் லட்சுமி ராய்க்கும், நிஷா படேலுக்கும் கடும் சண்டையே நடந்துள்ளது. இதை மலையாள ஊடகங்கள் கவர் ஸ்டேரியே வெளியிட்டன.


டிவி ரியாலிட்டி ஷோவில் உடன் ஆடியா சுர்வீன் சாவ்லா உடன் கொஞ்ச காலம் டேட்டிங் போனார் ஸ்ரீசாந்த்.


ரீமா சென்னுடன் ஒரு விளம்பரத்தில் ஜோடியாக நடித்தார் பரபரப்பு பற்றிக் கொண்டது.


பிரியங்கா சோப்ரா உடன் காதல், டேட்டிங் என்றும் கிசுகிசு பாலிவுட் உலகை கலக்கியது.


ஸ்ரீசாந்த் அதிக அளவில் கிசுகிசுக்கப்பட்டது மினிசா லம்பா என்ற பாலிவுட் நடிகையுடன் டேட்டிங் போனதாகத்தான்.

காயின் போடுங்க! தங்கத்தை அள்ளுங்க!

vending machinesநம் ஊரில் எடை போட்டு பார்க்கும் மெஷின் இருக்கிறதல்லவா அதே போல் வெளிநாட்டில் பல பொருட்களை வாங்க மெஷின்கள் உள்ளன.இவற்றின் பெயர் தான் வெண்டிங் மெஷின்கள். 

அங்குள்ள வெண்டிங் மெஷின்கள் மூலம் மக்கள் தங்கத்தையே வாங்குகிறார்கள். ஆம்! அந்த அளவிற்க்கு தொழில்நுட்பம் முன்னேறி உள்ளது, டாலர்களை போட்டால் போதும்(முருகன் டாலரா என்று கேட்காதீர்கள்) தங்கம் வெள்ளி எதை வேண்டுமானாலும் வாங்கலாம். 

இதோ அந்த வெண்டிங் மெஷின்கள் மூலம் எதை எதை எல்லாம் மக்கள் வாங்குகிறார்கள் என்று பாருங்கள்....


இதுதான் தங்கத்தை வாங்கும் வெண்டிங் மெஷின். இதனுள் டாலர்களை போட்டால் தங்க கட்டிகளை பெற்றுக்கொள்ளலாம்.


இதுதான் சைக்கிள் வாங்கும் வெண்டிங் மெஷின். இதனுள் டாலர்களை போட்டால் சைக்கிளை பெற்றுக்கொள்ளலாம்.


இதுதான் சைக்கிள் பார்ட்ஸ் வாங்கும் வெண்டிங் மெஷின். இதனுள் டாலர்களை போட்டால் சைக்கிள் பார்ட்ஸை பெற்றுக்கொள்ளலாம்.


இதுதான் மருந்துகள் வாங்கும் வெண்டிங் மெஷின். இதனுள் டாலர்களை போட்டால் மருந்துகளை பெற்றுக்கொள்ளலாம்.


இதுதான் கூல்டிரிங்ஸ் வாங்கும் வெண்டிங் மெஷின். இதனுள் டாலர்களை போட்டால் ஜில் என கூல்டிரிங்ஸை பெற்றுக்கொள்ளலாம்.


இதுதான் நண்டுகள் வாங்கும் வெண்டிங் மெஷின். இதனுள் டாலர்களை போட்டால் உயிருடன் நண்டுகளை பெற்றுக்கொள்ளலாம்....


இதுதான் ப்ளேட்ஸ் வாங்கும் வெண்டிங் மெஷின். இதனுள் டாலர்களை போட்டால் ப்ளேட்ஸை பெற்றுக்கொள்ளலாம்.


இதுதான் ஷூ வாங்கும் வெண்டிங் மெஷின். இதனுள் டாலர்களை போட்டு உங்கள் பாத அளவை சொன்னால் ஷூக்களை பெற்றுக்கொள்ளலாம்.


இதுதான் பாப்கார்ன்ஸ் வாங்கும் வெண்டிங் மெஷின். இதனுள் டாலர்களை போட்டால் பாப்கார்னை பெற்றுக்கொள்ளலாம்.


இதுதான் சாக்லெட்ஸ் வாங்கும் வெண்டிங் மெஷின். இதனுள் டாலர்களை போட்டால் சாக்லெட்ஸை பெற்றுக்கொள்ளலாம்.

தேனி போலீஸ் ஸ்டேசனில் பெண்ணை அடைத்து வைத்து பலாத்காரம்: போலீஸ்காரர்கள் மீது வழக்குப் பதிவு

தேனி: தேனி அருகே போலீஸ் ஸ்டேசனில் 3 நாட்கள் அடைத்து வைத்து பெண்ணை பலாத்காரம் செய்த போலீஸ்காரர்கள் மீது, சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

தேனி மாவட்டம், கடமலைகுண்டு காவல்நிலைய போலீசார் வசந்தி என்ற பெண்ணை கற்பழித்ததோடு, நடந்த சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது என 3 நாட்கள் காவல் நிலையத்திலேயே வைத்து சித்திரவதை செய்ததனர். அதோடு மட்டுமல்லாது போலீஸ் இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் ராஜ்குமார் மற்றும் உதவி ஆய்வளர் அமுதன் ஆகியோர், அந்த பெண் மீதே பொய் வழக்கு போட்டனர். இந்த சம்பவம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்றது. 

பாதிக்கப்பட்ட வசந்தி, தனக்கு நேர்ந்த கொடுமையை தமிழக முதல்வர், டி.ஜி.பி, எஸ்.பி. உள்ளிட்ட மேலதிகாரிகளிடம் புகார் கொடுத்தார். ஆனாலும் வசந்தி அலைக்கழிக்கப்பட்டார். வசந்தியின் புகாரை தமிழக காவல்துறை கண்டு கொள்ளவில்லை. எனவே நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் வசந்தி. 

வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம், சம்பவம் நடந்து பதினைந்து மாதங்களாகியும், எப்.ஐ.ஆர். கூட போடாத தேனி மாவட்ட போலீசார் இந்த வழக்கை விசாரிக்க கூடாது எனக்கூறி, வழக்கை சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க உத்தரவிட்டது. 

சி.ஐ.டி. டி.எஸ்.பி. ராசாத்தி தலைமையிலான போலீஸார் கடந்த ஒரு மாதமாதத்திற்குள் தங்கள் விசாரணையை முடித்திருக்கின்றனர். பாதிக்கப்பட்ட பெண் வசந்தியிடம் நேரில் விசாரித்தபிறகு, சம்மந்தப்பட்ட காவல்துறையினர் மீது, கற்பழித்தல், அதிகார துஷ்பிரயோகம் செய்தல், பெண்ணை சித்தரவதை செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும், மொத்தம் 16 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் தேனி மாவட்ட காவல்துறையையே தலை குனிய வைத்திருக்கிறது. 

காட்பரீஸ் சாக்லேட்டில் இரும்பு ஆணி: ரூ 30000 நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

 Cadbury Ordered Pay Rs 30 000 Compensation அகர்தலா: சாக்லேட்டில் ஆணி இருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் காட்பரீஸ் நிறுவனம் பாதிக்கப்பட்ட நபருக்கு 30000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவுப் பொருட்களில் சாக்லேட்டும் ஒன்று. ஆரோக்கியமானதாக, சுகாதாரமானதாக இருக்க வேண்டிய இத்தகைய உணவுப் பொருட்களில் ஏதேனும் முறைபாடுகள் சிலநேரங்களில் கண்டறியப்படுவதும் உண்டு. 

திரிபுரா மாநிலத்தின் அகர்தலாவைச் சேர்ந்த ஒருவர், தன்னுடைய மூன்று வயதுக் குழந்தைக்கு வாங்கிக் கொடுத்த காட்பரிஸ் சாக்லேட்டில் ஒரு இரும்பு ஆணி இருந்ததை கண்டு பிடிக்கப்பட்டு நுகர்வோர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

பால் சாக்லேட்... இங்கிலாந்தில் 1905 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது காட்பரிஸ் நிறுவனம். பாலிலேயே செய்யப்படும் இந்நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் உலக பிரசித்தி பெற்ற சுவையும், தரமும் உடையவை.. 

சாக்லேட்டில் ஆணி... 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி திரிபுரா மாநிலத்தின் அகர்தலாவைச் சேர்ந்த ஒருவர், தன்னுடைய மூன்று வயதுக் குழந்தைக்கு வாங்கிக் கொடுத்தார். அந்த காட்பரிஸ் சாக்லேட்டில் ஒரு இரும்பு ஆணி இருந்ததை கண்டு பிடிக்கப்பட்டு அவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தார். 

நஷ்ட ஈடு... வழக்கை விசாரித்த திரிபுரா நுகர்வோர் நீதிமன்றம், சாக்லேட்டில் ஆணி இருப்பது நிரூபிக்கப்பட்டதால், காட்பரிஸ் நிறுவனம் பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ.30,000 நஷ்ட ஈடாக வழங்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 

வழக்குச் செலவு... மேலும் வழக்கிற்கு ஆகும் செலவுத் தொகையான ரூபாய் ஆயிரத்தையும் காட்பரிஸ் நிறுவனமே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

ஸ்பாட் ஃபிக்சிங்சில் சிக்கிய ஸ்ரீசாந்த்… உடன் சுற்றிய நடிகை சுர்வீன் சாவ்லா அதிர்ச்சி

மும்பை: ஐ.பி.எல் ஸ்பாட் ஃபிக்சிங் புகாரில் ஸ்ரீசாந்த் கைது செய்யப்பட்டு சிறை சென்றதற்கு பாலிவுட் நடிகை சுர்வீன் சாவ்லா அதிர்ச்சியடைந்துள்ளார். 

வசந்த் இயக்கத்தில் வெளியான மூன்று பேர் மூன்று காதல் படத்தில் நடித்தவர் சுர்வீன் சாவ்லா. இவர் பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். டிவி ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உடன் இணைந்து நடனமாடியுள்ளார். இதனால் இருவருக்கும் காதல் அரும்பியதாகவும் செய்திகள் உலா வந்தன. இந்த நிலையில் ஐ.பி.எல் சூதாட்டப் புகாரில் சிக்கை கைதானார் ஸ்ரீசாந்த்.

இந்த சம்பவம் பற்றி செய்தியாளர்கள் சுர்வீன் சாவ்லாவிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது: கிரிக்கெட் சூதாட்டத்தில் ஸ்ரீசாந்த் கைதான தகவல் வந்தபோது நான் கேன்ஸ் படவிழாவில் இருந்தேன். அவர் மீதான குற்றச்சாட்டுகள் எனக்கு அதிர்ச்சி அளித்தன.

ஸ்ரீசாந்தும் நானும் நண்பர்களாக இருந்தோம். ஆனால் சமீபகாலமாக அவருடன் நான் தொடர்பில் இல்லை.

ஸ்ரீசாந்த் கேரள மக்களை கிரிக்கெட்டுக்கு கொண்டுவர ஒரு உந்துதலாக இருந்தார். பணத்தாசை மனிதர்களை எப்படியெல்லாமோ குப்புற தள்ளிவிடுகிறது. இந்த சம்பவம் எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என்று கூறியுள்ளார் சுர்வீன் சாவ்லா.

அதிகமாகி வரும் பெண் கைதிகள்: கவலையில் ஆப்கனிஸ்தான் - ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

காபூல்: கட்டாயத் திருமணம், கற்பழிப்பு போன்றவற்றினால் வீட்டைவிட்டு ஓடிப்போவது போன்ற குற்றங்களினால் தற்போது 600க்கும் மேற்பட்ட பெண்கள் ஆப்கன் சிறையில் உள்ளதாக மனித உரிமைக் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. 

தலிபான்களின் ஆட்சி கவிழ்ந்தபின் கடந்த 12 வருடங்களில் இந்த வருடம் அதிகப்படியான எண்ணிக்கையில், அதாவது கிட்டத்தட்ட 600 பெண்களும், சிறுமிகளும் சிறையில் உள்ளனராம். 

இதில் பெரும்பான்மையான பெண்கள் கட்டாயத் திருமணம், கற்பழிப்பு மற்றும் வீட்டைவிட்டு ஓடிப்போவது போன்ற குற்றங்களினால் சிறையில் உள்ளனராம். இது கடந்த 18 மாதங்களில் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. 

ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் அதற்கு உதவி புரியும் நாடுகளின் அரசியல் தோல்வியே இதற்கு முழு காரணம் என ஆசியக் கிளையின் துணை இயக்குனர் பெலிம் கினே குற்றம் தெரிவித்துள்ளார். 

இதற்கிடையே, நேட்டோ படைகள் அடுத்த வருடம் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும்போது தங்களுடைய தங்களுடைய கல்வி மற்றும் வேலை குறித்த உரிமைகள் மீண்டும் பறிக்கப்படலாம் என்ற அச்சம் மக்களிடையே உள்ளது. 

மேலும் அதிபர் ஹமீத் கர்சாய் பெண்களின் பாதுகாப்பு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. ஆனால், இதனை மறுக்கிறது ஆப்கன் அரசு. 

இது குறித்து கருத்து தெரிவித்த ஆராய்ச்சியாளர் ஹீதர் பார் , ‘பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் அதாவது கட்டாயத் திருமணம், சிறுவயதுத் திருமணம், கற்பழிப்பு, பெண்களை துன்புறுத்தல் போன்றவற்றிற்கு எதிராக 2009ல் அதிபர் கொண்டுவந்த தீர்மானத்தினை உறுதிப்படுத்த, தற்போதைய அரசு தவறிவிட்டது. இந்த சட்டத்தினை அவர்கள் சரிசெய்யாவிட்டால், எதிர்காலத்தில் அதன் பாதிப்புகள் அதிகமாக இருக்கும்' என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க க்ரீன்கார்டு, விசா சீர்திருத்த மசோதாவுக்கு சட்ட கமிட்டி அங்கீகாரம்!

வாஷிங்டன்(யு.எஸ்): அமெரிக்க விசா, க்ரீன்கார்டு சீர்திருத்த மசோதா செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டு சட்ட கமிட்டியில் விவாதிக்கப் பட்டு வந்த்து. 

கேங்க் ஆஃப் எய்ட் (Gang of Eight) என்று சொல்லப்பட்ட இரு கட்சிகளையும் சார்ந்த எட்டு செனட்டர்களால் வடிவமைக்கப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருத்தங்கள் சமர்ப்பித்து, விவாதிக்கப்ப்ட்ட பின் 300 திருத்தங்கள் ஏற்கப்பட்டுள்ளன. 

செனட் சபை வாக்கெடுப்பு 

முக்கியமாக 11 மில்லியன் சட்டபூர்வமற்ற குடிமக்களுக்கு குடியுரிமை (வாக்குரிமை உட்பட) வழங்கும் மசோதாவை நிறைவேற்ற அதிபர் ஒபாமா உறுதியாக இருக்கிறார். 

சட்ட கமிட்டியால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள மசோதா, ஜூன் முதல் வாரம் வாக்கில் செனட் சபையில் வாக்கெடுப்பிற்கு விடப்படும் என தெரிகிறது. அடுத்ததாக காங்கிரஸ் சபையில் மசோதா வெற்றி பெறுமா என்ற கேள்விகளும் கூடவே எழுந்துள்ளன. 

குடியரசுக் கட்சி பெரும்பான்மையாக உள்ள காங்கிரஸ் சபையில் சட்டபூர்வமற்ற முறையில் குடியேறிவர்களுக்கு குடியுரிமை வழஙகக் கூடாது என பெருவாரியான கருத்துக்கள் நிலவுகின்றன. மசோதாவின் முக்கிய அம்சம் என்பதால் இறுதியில் நிறைவேறுமா அல்லது காங்கிரஸ் சபையில் தோற்கடிக்கப்பட்டு விடுமா என்ற சந்தேகம் நிலவுகிறது. 

ஹெச் 1 விசா அதிகரிப்பு 

இந்த மசோதா நிறைவேறும் பட்சத்தில் 65 ஆயிரம் என உள்ள ஹெச்1 பி விசா எண்ணிக்கை 110 ஆயிரமாகவும், தேவை அதிகமாக இருக்கும் ஆண்டுகளில் 180 ஆயிரம் வரையும் உயர வகை செய்யப்படுகிறது. 

மேலும் க்ரீன்கார்டு என்றழைக்கப்படும் நிரந்தர விசா வழங்கும் முறையிலும் ஏராளமான மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. 

சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் க்ரீன் கார்டுகளுக்காக விண்ணப்பித்து பத்து வருடம் வரையிலும் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிட்த்தக்கது. 

பரிந்துரைக்கப்பட்டுள்ள மாற்றங்கள் நிறைவேறினால் அது பெரும்பாலான இந்தியர்களுக்கு சாதகமாக அமைய வாய்ப்புள்ளது. 

அதே வேளையில் கெடுபிடியான ஹெச் 1 பி கட்டுப்பாடுகளினால் டிசிஎஸ், விப்ரோ, இன்ஃபோஸிஸ், காக்னிசண்ட் உட்பட்ட் பெரும் ஐடி நிறுவனங்களுக்கு பல சோதனைகள் காத்திருக்கின்றன. 

ஊழியர்களுக்கு அதிக ஊதியம் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் இந்த நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது. 

சவுதி அரேபியாவில் பொதுமக்கள் முன்னிலையில் ஏமன் குற்றவாளிகள் 5 பேருக்கு தூக்கு

ரியாத்: சவுதி அரேபியாவில் பொது மக்கள் முன்னிலையில், ஏமனை சேர்ந்த 5 பேர் தூக்கிலிடபட்டனர். 

கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, ஏமனை சேர்ந்த 5 பேரை கைது செய்து அவர்கள் மீது வழக்கு தொடர்ந்தது சவுதி அரேபிய அரசு. விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டு கோர்ட்டில் அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 

குற்றவாளிகள் அனைவரும் பொது மக்கள் முன்னிலையில் தூக்கிலிடபட்டனர். இவர்களையும் சேர்த்து இந்த ஆண்டில் மட்டும், இதுவரை 46 பேர் சவுதி அரேபியாவில் தூக்கிலிடபட்டுள்ளனர்..

சுகாதாரமற்ற உணவு விற்ற சொந்த தாய்க்கே அபராதம் விதித்த சவூதி நீதியரசர்!

ரியாத்: சவூதியில் ஒரு அதிகாரி, உணவு தரமற்றதாக இருந்ததாகக் கூறி, பாராபட்சம் பாராமல் தன் தாயின் உணவு விடுதிக்கே அபராதம் விதித்துள்ளார்.

வடக்கு சவூதி அரேபியாவில் உள்ள அவிக்கிலா நகரில் உள்ள உணவு விடுதியில் சாப்பிடச் சென்ற வாடிக்கையாளர் ஒருவருக்கு ரிமாறப்பட்ட 'சாண்ட் விச்'சில் செத்த ஈ கிடந்ததாம். அதைக் கண்டு திகைப்படைந்த அவர், நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.

விசாரணை நடத்திய நகராட்சி தலைமை அதிகாரி ஜமால் அல் எனேசி, சுகாதாரமற்ற உணவை விற்ற உணவகத்தின் உரிமையாளரான பெண்ணுக்கு பெரிய தொகையை அபராதமாக விதித்தார்.

இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் அந்த உணவகம் ஜமாலின் தாயாருக்கு சொந்தமானது என்பது தான். அவர் அபராதம் விதித்ததும் தன் சொந்த தாயாருக்கே.

சொந்த தாயாரின் உணவகம் என்று தெரிந்தும் உடனடி நடவடிக்கை எடுத்த ஜமாலை அவிக்கிலா மேயர் பாராட்டியுள்ளார். இந்த செய்தியை கேள்விப்பட்ட பலரும் 'பேஸ் புக்' மற்றும் 'டுவிட்டரில்' அந்த அதிகாரியை புகழ்ந்து தள்ளியபடி உள்ளனர்.

லண்டனில் இன்று ஏலம் விடப்படும் மகாத்மா காந்தியின் ரத்தம், சால்வை, செருப்பு

லண்டன்: மகாத்மா காந்தியின் ரத்த மாதிரி, அவரது செருப்பு, சால்வை உள்ளிட்டவை இன்று லண்டனில் ஏலத்திற்கு விடப்படுகிறது.

உலகப் புகழ்பெற்ற ஏல நிறுவனமான முல்லக்ஸ் மகாத்மா காந்தி எழுதி வைத்த உயிலின் நகல், பழைய செருப்பு, அவர் அணிந்திருந்த சால்வை, பதிவு செய்யப்பட்ட உரைகள், மைக்ரோஸ்கோப் ஸ்லைடில் உள்ள அவரது ஒரு சொட்டு ரத்தம் ஆகியவற்றை லண்டனில் இன்று ஏலத்திற்கு விடுகிறது. லண்டனில் உள்ள லட்லோ ரேஸ்கோர்ஸில் உள்ள முல்லக்ஸ் மகாத்மா காந்தியின் பொருட்களை ஏலத்தில் விடுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

காந்தியின் பொருட்களை அவரின் ஆதரவாளர்களான ஓய்வு பெற்ற ஆசிரியரான அந்தோணி சிட்டட்டுகாரா உள்ளிட்டோர் தான் ஏலத்தில் விட கொடுத்துள்ளனர் என்று கூறப்படுகிறது. சிட்டட்டுகாரா இந்த பொருட்களை சுமார் 20 ஆண்டுகளாக வங்கி லாக்கரில் பத்திரமாக வைத்திருந்திருக்கிறார். காந்தியின் ரத்தம் படிந்த மண்ணை சுபேதார் பி.பி. நம்பியார் என்பவர் எடுத்து அதை பத்திரமாக பல காலம் வைத்திருந்திருந்தார் என்று சிட்டட்டுகாரா தெரிவித்துள்ளார். காந்தி சுட்டுக் கொல்லப்படும் முன்பு பிர்லா ஹவுஸுக்கு வெளியே நின்ற பாதுகாவலர்களில் ஒருவர் தான் இந்த நம்பியார்.

காந்தியின் ரத்தம் படிந்த மண்ணை பாதுகாக்க விரும்புபவருக்கு அதை தர தயாராக இருப்பதாக நம்பியார் கேரளாவில் உள்ள செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுத்தார். இதைப் பார்த்த சிட்டட்டுகாரா அவரிடம் இருந்த ரத்தக் கரை படிந்த மண்ணை வாங்கிக் கொண்டார்.

கால் சென்டர் ஊழியர் கல்லூரி மாணவியை பிளாக்மெயில்.! சர்ச்சையை கிளப்பி உள்ளது

call centre employee held uploading இந்தூரில் கால் சென்டர் ஊழியர் ஒருவர் பேஸ்புக்கில் பழக்கமான பெண்னை ஆபாச படம் எடுத்து மிரட்டியது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

ஆம்! 24 வயதான அந்த கால் சென்டர் ஊழியர் பேஸ்புக்கில் அந்த பெண்ணிடம் பேசி பழகியுள்ளார்.

21 வயதான அந்த பெண்ணும் அவரிடம் நன்றாக பேசியுள்ளார்,இதை பயன்படுத்திக்கொண்ட அந்த நபர் அந்த பெண்ணை ஆபாசமாக வீடியோ பிடித்துவிட்டார்.

அதை வைத்து அந்த பெண்னை பிளாக்மெயில் செய்துள்ளார்.

இதனால் பயந்து போன அந்த பெண் போலீசில் புகார் கொடுத்துவிட்டார், தற்போது அந்த நபர் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார்.

பெண்களே சமுக வலைத்தளங்களில் மிக கவனமாக இருங்கள்.

இல்லையெனில் இப்படி பட்ட ஆட்களின் பிடியில் மாட்டிக்கொண்டு உங்கள் வாழ்க்கை தான் சீரழியும்.






சென்னை சேப்பாக்கம் கேலரிகளுக்கு சீல்- சுப்ரீம் கோர்ட்டில் கிரிக்கெட் சங்கம் முறையீடு!

Chepauk Stands Sealed Yet Again சென்னை: சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் 3 கேலரிகளுக்கு சென்னை மாநகராட்சி அதிரடியாக சீல் வைத்தது. இந்த சீல் வைப்பு நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கிரிக்கெட் சங்கம் மேல்முறையீடு செய்திருக்கிறது. 

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 3 கேலரிகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 3 கேலரிகளையும் நிரந்தரமாக பயன்படுத்தலாம் என உத்தரவிட்டிருந்தது. 

இதனை எதிர்த்து சென்னை மாநகராட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம், சேப்பாக்கம் மைதானத்தின் 3 புதிய கேலரிகளையும் பயன்படுத்த இடைக்கால தடை விதித்தது. இதைத் தொடர்ந்து 3 கேலரிகளுக்கும் சென்னை மாநகராட்சி சீல் வைத்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கிரிக்கெட் சங்கம் மேல்முறையீடு செய்திருக்கிறது. 

நாளை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை ஏர்போர்ட்டின் புதிய உள்நாட்டு முனைய மேற்கூரை இடிந்து விபத்து: 3 பேர் காயம்

 False Ceiling Panels Collapse Chennai Domestic Terminal சென்னை: சென்னை விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட உள்நாட்டு முனைய மேற்கூரை இடிந்து விழுந்தது. 

சென்னையில் நேற்று இரவு பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இந்நிலையில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கடந்த மாதம் திறக்கப்பட்ட உள்நாட்டு முனையத்தின் மேற்கூரை இன்று அதிகாலை 4 மணிக்கு இடிந்து விழுந்தது. அந்த நேரம் எந்த விமானமும் தரையிறங்காததால், புறப்படாததால் பயணிகள் தப்பினர். ஆனால் ஒப்பந்த தொழிலாளர்கள் 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. 

இந்த விபத்தை அடுத்து ஹெச்1 மற்றும் ஹெச்2 நுழைவாயில்கள் மூடப்பட்டுள்ளன. சென்னையின் மோசமான வானிலை காரணமாக சண்டிகர் செல்ல வேண்டிய ஜெட் ஏர்வேஸ் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேற்கூரை இடிந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக விமான நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஒபாமா வேண்டும்- பிணமாக மட்டும்... பத்திரிகை விளம்பரத்தால் பரபரப்பு

 islamist magazine wants mass murderer obama dead only வாஷிங்டன்: புதிதாக தோன்றியுள்ள ஒரு ஆங்கிலப் பத்திரிக்கையில், பல ஆயிரம் உயிர்களைக் கொன்ற ஒபாமா வேண்டும்- பிணமாக மட்டும் என்று முழுப்பக்க விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்காவை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. 

Azan - A Call to Jihad என்பது அந்தப் பத்திரிக்கையின் பெயராகும். இதன் ஆன்லைன் பதிப்பில்தான் இந்த விளம்பரம் இடம் பெற்றுள்ளது. அதில், ஒபாமாவின் படத்தைப் போட்டு பிணமாக மட்டும் தேவை. பராக் ஒபாமா கொலைகாரன் - பரிசு - பின்னர். என்று விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பத்திரிக்கை 80 பக்கங்களைக் கொண்டதாகும். இந்தப் பத்திரிக்கை அல் கொய்தாவினரால் மறைமுகமாக தொடங்கப்பட்டிருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். 

மேலும் இந்தப் பத்திரிக்கையின் பின்னணியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் தலிபான்கள் இரு்க்கலாம் என்றும் கூறப்படுகிறது.

 islamist magazine wants mass murderer obama dead only

காடுவெட்டி குரு மீது மீண்டும் பாய்ந்தது தேசிய பாதுகாப்பு சட்டம்!

 Kaduvetti Guru Arrest Under Nsa சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ.வும் வன்னியர் சங்கத்தின் தலைவருமான காடுவெட்டி ஜெ. குரு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். 

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடலூரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து பழைய வழக்கு ஒன்றில் தேடப்படும் குற்றவாளி என அறிவித்து சென்னை எம்.எல்.ஏ. விடுதியில் பாமகவின் காடுவெட்டி குரு கைது செய்யப்பட்டார். அவர் மீது வன்முறையைத் தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் அடுத்தடுத்து போடப்பட்டது. அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.பின்னர் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணியும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 

அன்புமணிக்கு அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்து நேற்று வெளியே வந்தார். இன்று ஆளுநரை நேரில் சந்தித்து எங்கள் மீது தொடர்ந்தும் வழக்குப் போடுகிறார்கள் என்று புகார் மனு கொடுத்துவிட்டு வந்தார். அதே நேரத்தில் ராமதாஸுக்கும் அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்ததால் அவர் நாளை விடுதலையாகக் கூடும் என்று கூறப்பட்டது. 

இந்நிலையில் காடுவெட்டி குரு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவு சென்னை புழல் சிறையில் உள்ள குருவிடம் இன்று வழங்கப்பட்டது. கடந்த 2008ம் ஆண்டும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காடுவெட்டி குரு கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

டாக்காவில்...தலை மேல் விழுந்த கட்டடம்... .உலகை உலுக்கிய படம்!

டாக்கா: வங்கதேச தலைநகர் டாக்காவில் நடந்த கட்டட விபத்தை விட அந்த விபத்தின்போது உள்ளே சிக்கிபிணமாக மீட்கப்பட்ட ஒரு கணவன், மனைவியின் படம்தான் உலகையே உலுக்கி விட்டது. 

கட்டடம் இடிந்து விழுந்தபோது மனைவியை விட்டுப் பிரியாமல், அவரைக் கட்டிப் பிடித்தபடி காணப்படுகிறார் அந்த கணவர். இந்தப் படம்தான் அனைவரையும் உலுக்கி விட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் பிரியாமல், தப்பித்து்ப போக முயலாமல், கட்டிப் பிடித்தபடி பிணமாகியுள்ளனர்.


வங்கதேசத்தில் கட்டட விபத்துக்கள் குறிப்பாக கார்மென்ட் பேக்டரி கட்டடங்கள் இடிந்து பல நூறு பேர் சாவது இயல்பாகி வருகிறது. கிட்டத்தட்ட தினசரி ஒரு விபத்து என்று நடந்து வருகிறது.


இந்த விபத்துக்களால் நூற்றுக்கணக்கான உயிர்கள் பறிபோய் வருகின்றனர். அவர்களில் பலர் பெண்கள், இளம் வயதினர்என்பதுதான் கொடுமையானதாக உள்ளது.


கடந்த மாதம் டாக்கா அருகே 8 மாடிகளைக் கொண்ட ராணா பிளாசா என்ற கார்மெண்ட் ஆலையின் கட்டடம் சரிந்து விழுந்தது. இதில் இதுவரை 900 பேர் உயிரிழந்துள்ளனர்.2000 பேர் வரை காயமடைந்துள்ளனர்.


இந்த கட்டட இடிபாடுகள் இன்னும் கூட முழுமையாக அகற்றப்படவில்லை. இந்த நிலையில் அந்த இடிபாடுகளில் ஒரு தம்பதியின் உடல்கள் சிக்கியுள்ளன. அதைப் பார்த்த அத்தனை பேரும் அதிர்ந்து போய் விட்டனர். கணவனும், மனைவியும் ஒருவர் பிரியாமல் இறுக்கி அணைத்தபடி காணப்பட்டனர்.


இருவரும் தப்பித்துப் போக முயலவில்லை. மாறாக மரணத்தின் கடைசி நொடி வரை இணை பிரியாமல் இருக்க முடிவு செய்து இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி இருந்துள்ளனர். இந்தக் காட்சியைக் கண்ட அனைவரும் கலங்கிப் போய் விட்டனர்.


அந்தத் தம்பதியினரின் உடல்களின் கீழ்ப் பகுதி கீழே புதைந்து விட்டன. மேல் பகுதி மட்டுமே தெரிகிறது. அந்த ஆணின் கண்களில் கண்ணீர் போல ரத்தம் ஓடி உறைந்து போயிருந்தது. இந்தப் புகைப்படத்தை தஸ்லிமா அக்தர் என்பவர் எடுத்து வெளியிட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள்









+2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாயின., இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 184 பள்ளிகளில் 27181 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 24471 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 90.03

தஞ்சாவூர் மாவட்டத்தில் முதலிடம்:
கும்பகோணம் கிறிஸ்ட் கிங் மெட்ரிக் பள்ளி - ஸ்ரீவிஷ்ணு - 1180

இரண்டாமிடம்:

கும்பகோணம் டவுன் மேல்நிலைப்பள்ளி  - என் சத்யா - 1178

கும்பகோணம் கிறிஸ்ட் கிங் மெட்ரிக் பள்ளி - சூர்யா - 1178

மூன்றாமிடம்

பள்ளிகொண்டான் லாரல் பள்ளி - எல் மாரிமுத்து - 1177


 

வன்முறையாளர்கள் மீது தே.பா., சட்டம்...அரசின் அதிரடியால் பா.ம.க.,வினர் பீதி








தர்மபுரி மாவட்டத்தில், தரை பாலத்தை, வெடிகுண்டு வைத்து சேதப்படுத்திய வழக்கில், பா.ம.க.,வைச் சேர்ந்த இரண்டு பேரை, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். இது, பா.ம.க.,வினருக்கு பீதியை ஏற்படுத்தி உள்ளது.மரக்காணம் கலவரத்துக்கு நீதி விசாரணை கோரி, விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தலைவர் மணி உள்ளிட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு, அன்புமணி உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து, வடமாவட்டங்களில், பஸ்கள் மீது கல்வீச்சு, தீ வைப்பு, பெட்ரோல் குண்டுகள் வீச்சு போன்ற வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. கண்டெய்னர் லாரி மீது, பெட்ரோல் குண்டு வீசியதில், அரியானாவைச் சேர்ந்த டிரைவர் செகர்கான் என்பவர் பலியானார்.
வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில், டாஸ்மாக் கடைகள் பெட்ரோல் குண்டு வீசி எரிக்கப்பட்டன. தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த கர்த்தாங்குளம் அருகே கடந்த, 3ம் தேதி, தரை பாலம், வெடிகுண்டு வைத்து தகர்த்தப்பட்டது. இதில், அந்த பகுதியில் உள்ள குடிநீர் குழாய் சேதம் அடைந்தது. 

தே.பா., சட்டம்

விசாரணையில், மொரப்பூர் அடுத்த, மூக்கனூர் பட்டி கிராமத்தை சேர்ந்த சுரேந்தர், 36, தீர்த்தலிங்கம், 24, ஆகியோர் பாலத்துக்கு வெடி குண்டு வைத்தது தெரிய வந்தது. இருவரும், பா.ம.க.,வை சேர்ந்தவர்கள். இவர்கள், மொரப்பூர் பகுதியில், அரசு பஸ் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய வழக்கில் இம்மாதம், 5ம் தேதி கைது செய்யப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்ட, சுரேந்தர், தீர்த்தலிங்கம் ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க, தர்மபுரி கலெக்டர் லில்லிக்கு, எஸ்.பி., ஆஸ்ரா கர்க் பரிந்துரை செய்தார். இருவரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க, கலெக்டர் உத்தரவிட்டார். இருவரும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட உத்தரவை, சேலம் சிறை அதிகாரிகள் மூலம் போலீசார், இருவரிடமும் வழங்கினர்.

பீதி

பா.ம.க.,வினர் இருவர், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது, வன்முறையாளர்களிடையே, பீதியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த, 20 ஆண்டுகளுக்குப் பின், தர்மபுரிமாவட்டத்தில் தற்போது தான், இரண்டு பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில், சிறை பிடிக்கப்பட்டிருப்பதாக போலீசார், தெரிவித்தனர்.இதே போல், அரூர் அடுத்த கம்பைநல்லூர் - வெதரம்பட்டி சாலையில், சின்மல்லிப்பட்டியில் உள்ள சிறு பாலத்தை கடந்த, 5ம் தேதி மர்ம நபர்கள் வெடி வைத்து தகர்த்தனர். இது தொடர்பாக, கம்பைநல்லூர் போலீசார், நேற்று, நான்கு பேரை பிடித்து, விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில், இவர்கள் மீதும் தே.பா., சட்டம் பாயும் என தெரிகிறது.

தொடரும் மிரட்டல் 

நேற்று முன்தினம், பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கத்தை சேர்ந்தவர்கள், "தர்மபுரியில் நாளை (நேற்று) கடைகள் முழு அடைப்பு; ஆட்டோக்கள் ஓடாது' என, பிட் நோட்டீஸ்களை வினியோகம் செய்து, "கடைகளை அடைக்க வேண்டும்' என, வியாபாரிகளை மிரட்டினர்.மிரட்டல் விடுத்த, ஆறு ஆட்டோ டிரைவர்களை, போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். பா.ம.க.,வினர் மிரட்டலால், பீதியடைந்த பெரும்பாலான வியாபாரிகள் நேற்று கடைகளை திறக்க வில்லை. சில கடைகள் வழக்கம் போல் திறந்திருந்தன.நேற்று காலை,டூவீலர்களில் வந்த பா.ம.க., வினர் திறந்திருந்த கடைகளையும் அடைக்கச் சொல்லி மிரட்டினர். வியாபாரிகளும், மிரட்டலுக்கு பயந்து அடுத்தடுத்து கடைகளை அடைத்தனர். பஸ் நிலையத்தில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டதால், வெளியூர் பயணிகள், உணவு மற்றும் குடிநீர், குழந்தைகளுக்கு பால் போன்றவை கிடைக்காமல் அவதிப்பட்டனர்.

தர்மபுரியை அடுத்த எ.கொல்லஹள்ளி அரசு துவக்கபள்ளி வளாகத்தில், 
வி.ஏ.ஓ., அலுவலகம் உள்ளது. இவ்வலுவலகத்திற்கு, மர்ம நபர்கள் நேற்று காலை தீ வைத்தனர். அரூர் பகுதியில் அரசு பஸ்கள் மீது கல்வீசி சேதப்படுத்திய அரூர் பழையபேட்டையை சேர்ந்த ரகு, 26, சேட்டு, 25 ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

குண்டாசும் பாயும்!

வன்முறையில், தொடர்ந்து ஈடுபடுவோர் மீது, குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, போலீசார் முடிவெடுத்துள்ளனர். போலீஸ் அதிகாரி, ஒருவர் கூறியதாவது:வடமாவட்டங்களில், கண்காணிப்பை பலப்படுத்தி உள்ளோம். ஜாமினில் வெளியே வரும், பா.ம.க.,வினரை முன்னெச்சரிக்கையாக கைது செய்ய உத்தரவிட்டுள்ளோம். பல மாவட்டங்களில் கைது நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அரசு பஸ்கள், டெப்போக்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மீறி, தாக்குதலில் ஈடுபடுபவர்களை, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்வது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

குண்டர் சட்டம்: 

குண்டர் சட்டத்தை பொறுத்தவரை, மாநிலங்களுக்கிடையில் வேறுபடுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை, தொடர் திருட்டு, மதுபானங்கள் கடத்துதல், உணவுப் பொருட்கள் கடத்துதல், விபசார குற்றங்களில் ஈடுபடுவார், பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுவோர் மீது, குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இதற்கான அடிப்படை ஆதாரங்களுடன் ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, போலீஸ் கமிஷனர் அல்லது மாவட்ட எஸ்.பி.,யின் உத்தரவுப்படி, குண்டர் சட்டத்தின் கீழ், சம்பந்தப்பட்டவர் சிறையில் அடைக்கப்படுவார். இதன்படி, ஓராண்டுகாலத்திற்கு அந்த நபர், சிறையில் இருந்து வெளியில் வரமுடியாது.குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டவர் குறித்த விவரங்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய, அறிவுரைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு, அக்குழு, முகாந்திரம் இருந்தால் உறுதி செய்யப்படலாம்; இல்லாவிட்டால், விடுவிக்கவும் வாய்ப்புள்ளது.

தேசிய பாதுகாப்பு சட்டம்: 

தேசிய பாதுகாப்பு சட்டத்தை பொறுத்தவரை, இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படுபவர்கள், பேசுபவர்கள் மீது அமல்படுத்தப்படுகிறது. குறிப்பாக, மதக்கலவரத்தை தூண்டுதல், வெடிகுண்டு வைத்தல், அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்டவற்றில் ஈடுபடுபவர்கள் மீது, மத்திய அரசோ, மாநில அரசோ, தே.பா., சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கலாம்.போலீஸ் அதிகாரிகள் பரிந்துரைப்படி, மாவட்ட கலெக்டர் இதற்கான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். இந்த சட்ட அடிப்படையில், ஒருவர் மீது ஒரு வழக்கு இருந்தாலே, நடவடிக்கை எடுக்க முடியும். இந்த சட்டத்தின் கீழ், சிறையில் அடைக்கப்பட்டவர், ஓராண்டு சிறையில் இருக்க வேண்டும்.இதிலும், அறிவுரைக் குழுவின் விசாரணைக்கு,சம்பந்தப்பட்ட நபர் உட்படுத்தப்படுவார். 
அப்போது, தே.பா., சட்டத்தின் கீழ், அந்த நபரை கைது செய்ததற்கான, ஆவணங்களை போலீசார் சமர்ப்பிக்க வேண்டும்.ஆதார ஆவணங்கள், அடிப்படையில், அறிவுரைக்குழு உறுதி செய்யும். -

பிளஸ் 2 தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்துள்ள மாணவர்கள்

சென்னை: பிளஸ் 2 தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்துள்ள மாணவர்கள் தங்களது வெற்றியின் ரகசியங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் நாமக்கல் வித்யா விகாஸ் பள்ளி மாணவர் ஜெயசூர்யா மற்றும் நாமக்கல் கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி மாணவர் அபினேஷ் ஆகியோர் 1189 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தனர். இதே போல், நாமக்கல் வித்யா விகாஸ் பள்ளி மாணவர் பழனிராஜ், மற்றும் ஓசூர் ஸ்ரீ விஜய் வித் மெட்ரிக் பள்ளி மாணவி அகல்யா ஆகியோர் 1188 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளனர். மூன்றாவது இடத்தை நாமக்கல் மாணவர்கள் 4 பேர் உட்பட 9 பேர் பெற்றனர்.

இந்நிலையில், தங்களது வெற்றிக்கான ரகசியங்கள் குறித்து மாணவர்கள் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் இதோ:

ஜெயசூர்யா: நான் அதிக மதிப்பெண் பெற்று மாநில அளவில் இடம் பிடிப்பேன் என எதிர்பார்த்தேன். அதற்கு பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் ஊக்குவிப்பே காரணம். அன்றைய பாடத்தை அன்றே படிப்பேன். ஆர்வத்துடன் படிக்க வேண்டும்.
மேலும், படிக்கின்ற பாடத்தை மனதில் பதிய வைத்துக்கொண்டால், 200க்கு 200 மதிப்பெண் பெற்று சாதனை படைக்கலாம். நான் மூன்றாவது படிக்கும்போது, ஒரு விபத்தில், என் தந்தை பாதிக்கப்பட்டு, படுத்தப் படுக்கையாக இருந்து வருகிறார். அதை தொடர்ந்து நன்றாக படித்து டாக்டராக வேண்டும் என நினைத்தேன். அதன்படி, எலும்பு மூட்டு மருத்துவராகி மக்களுக்கு சேவை செய்ய விரும்புகின்றேன். இவ்வாறு அவர் கூறினார்.


அபினேஷ்: வகுப்பில் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்து கொள்வேன். இதன் காரணமாக என்னால் எளிதில் பாடங்களை மனிதில் பதிய வைத்துக்கொள்ள முடிந்தது. இதுவே மதிப்பெண்கள் அதிகம் பெற காரணம். அதே போல், காலை 4 மணிக்கே எழுந்து படிக்க ஆரம்பித்து விடுவேன். கடந்த ஓராண்டாக டி.வி.,பக்கமே சென்றதில்லை. கிரிக்கெட் என்றால் எனக்கு மிகவும் உயிர். ஓய்வு நேரங்களில் கிரிக்கெட் விளையாடி ரிலாக்ஸ் ஆவேன். அபினேஷ் தந்தை சேகர் இந்தியன் வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிகிறார். அவரது தாயார் லதா, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிகிறார். இவர்களது சொந்த ஊர் திண்டுக்கல் அருகேயுள்ள குள்ளனம்பட்டி.

அகல்யா: மாநில அளவில் 2வது இடம் பிடித்தது தனது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. எனது வெற்றிக்கு, நான் படித்த பள்ளியின் தாளாளர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் எனது பெற்றோர் மிகுந்த ஊக்கம் அளித்தனர். அவர்களுக்கு எனது நன்றி. 

பழனிராஜ்: நெல்லையை சேர்ந்த மாணவன், பிளஸ் டூ தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்தார். திருநெல்வேலியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் பாங்கின் மண்டல அலுவலகத்தில் மேலாளராக பணியாற்றுபவர் சுரேஷ்குமார். இவரது மகன் பழனிராஜ். திருச்செங்கோடு, வித்ய விகாஷ் பள்ளியில் பிளஸ் டூ பயின்றார். ஆயிரத்து 188 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்தார். நெல்லை கொக்கிரகுளத்தில் வசிக்கும் சுரேஷ்குமார், தாயார் சுகந்தி, அக்காள் திவ்யா ஆகியோர் பழனிராஜை பாராட்டினர்.

தமது வெற்றி குறித்து பழனிராஜ் கூறியதாவது: திருச்செங்கோடு பள்ளியில், அனைத்து பாடங்களையும் நன்றாக சொல்லிக்கொடுத்தார்கள். நானும் புரிந்துபடித்தேன். காலையில் ஐந்து மணிக்கு எழுந்து படிப்பேன். தினமும் குறைந்தபட்சம் ஐந்து மணிநேரம் படிப்பேன். மருத்துவ கல்லூரியில் சீட் பெற வேண்டும் என்பதற்காக, நான்கு பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு படித்தேன். அதே போல தற்போது மதிப்பெண் பெற்றுள்ளேன். சென்னை மருத்துவ கல்லூரியில், இதயநோய் டாக்டருக்கு படிப்பேன் என்றார். இவரது சொந்த ஊர் விருதுநகர். அங்குள்ள சுலோசனா நாடார் தெருவில், காமராஜர் வீட்டிற்கு அருகில்தான் எங்கள் என வீடு என மகிழ்ச்சியோடு தெரிவித்த அவர், தந்தை திருச்செங்கோட்டில் வங்கியில் பணியாற்றிதால், அங்கு படித்ததாக தெரிவித்தார்.