ஆணாக மாறிய பெண்ணுக்கும் பெண்ணாக மாறிய ஆணுக்கும் விணோத திருமணம்


லண்டன் நகரில் வசித்தவர் மார்ஃபிட் (56). சிறுவனாக இருந்தபோது பெற்றோர் இவருக்கு இட்ட பெயர், லெஸ்லி. இரண்டு மனைவியின் மூலமாக 5 குழந்தைகளைப் பெற்ற இவருக்கு 50 வயதில் ஓர் விபரீத ஆசை தோன்றியது. 

விபரீதத்தின் விளைவாக பாலின மாற்று அறுவைச் சிகிச்சை செய்துக்கொண்ட இவர், பெண்ணாக மாறி, தனது பெயரை ஹெலன் மார்ஃபிட் என்று மாற்றிக்கொண்டார். 
இதேபோல், கேட்டி என்ற பெயருடன் 5 குழந்தைகளுக்கு தாயாக வாழ்ந்த 46 வயது பெண்ணையும் விபரீத ஆசை உந்தித் தள்ளியதன் விளைவாக அவரும் பாலியல் ஆபரேஷன் மூலம் ஆணாக மாறினார். 

அத்துடன் அவரவர் வேலையை பார்த்துக்கொண்டு இருந்துவிட்டால், இவர்கள் செய்திகளில் இடம்பெற இயலாது அல்லவா? 

'காலத்துக்கும் மாறாதது... மாறிவரும் மாற்றம் மட்டும் தான்' என்ற கோட்பாட்டின் படி, பாலின மாற்றத்திற்கு பிறகு மாறுபட்ட ஓர் தாம்பத்யத்தை சுவைக்க துடித்த இருவரும் விதி வசத்தால் ஒருவரை ஒருவர் சந்தித்து காதல் வயப்பட்டனர். காதல் முற்றி, கல்யாண நிலைக்aகு சென்று விட்ட நிலையில் விரைவில் ஹெலன் மார்ஃபிட் - ஃபெலிக்ஸ் லாஸ் இணையர், தம்பதியராக மோதிரம் மாற்றிக்கொள்ள தீர்மானித்துள்ளனர். 

'இந்த தாம்பத்யமும் சலித்துப்போய் வேறொரு ஆபரேஷனை நாடாத வகையில், காலம்தான் அவர்களுக்கு துணை நிற்க வேண்டும்' என்று இவர்களுக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் கூறுகிறார்
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: