'மிஸ் கூவாகமாக' சாயா சிங் தேர்வு.. 2வது இடம் அனுஷ்காவுக்கு!

Miss Koovagam 2013விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. 


இதையொட்டி விழுப்புரம் மாவட்ட அரவாணிகள் நல சங்கம், தர்ம ரக்ஷன சமிதி சார்பில் மிஸ் கூவாகம் என்ற அழகிப் போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.


நேற்றிரவு விழுப்புரத்தில் நடந்த இந்தப் போட்டியில் 60 பேர் கலந்து கொண்டனர். அரவாணிகள் நலச் சங்கத் தலைவி ராதா தலைமை தாங்கினார். கலெக்டர் சம்பத் மிஸ் கூவாகம் போட்டியைத் தொடங்கி வைத்தார்.


உடை அலங்காரப் போட்டி, நடைப் போட்டி என பல்வேறு போட்டிகள் அவர்களுக்கு நடத்தப்பட்டன. இறுதிச் சுற்றுக்கு 10 பேர் தேர்வாயினர். அவர்களிடம் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து பொது அறிவுக் கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு சிறப்பாகப் பதில் கூறிய 3 பேர் தேர்வு செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.  


இதில் தர்மபுரியைச் சேர்ந்த சாயாசிங் முதலிடத்தை பிடித்து மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு பிரபல பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம் கிரீடம் சூட்டி பரிசு வழங்கினார்.


ஆந்திராவைச் சேர்ந்த அனுஷ்கா 2-வது இடத்தையும் இடத்தையும் பிடித்தார்.



சென்னையைச் சேர்ந்த தீபிகா 3-வது இடத்தைப் பிடித்தார். இவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சம்பத், எஸ்.பி மனோகரன், நகரசபை தலைவர் பாஸ்கரன் ஆகியோர் கிரீடம் சூட்டி பரிசுகள் வழங்கினர்.


மிஸ் கூவாகம் பட்டம் வென்ற சாயாசிங் கூறுகையில், சினிமாவில் கதாநாயகியாக நடிக்கின்ற வாய்ப்பை திருநங்கைகளுக்கு கொடுக்க வேண்டும். எங்களுக்கும் திறமை இருக்கின்றது. வேலை வாய்ப்புகளை அரசு உருவாக்கித் தர வேண்டும் என்றார்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: