ஹுபே மாகாணத்தின் வூஹான் நகரைச் சேர்ந்த இம்மாணவி சவப்பெட்டியொன்றை வாங்கி அதில் படுத்துக்கொண்டார். தனது உடலானது சடலம் போல் காட்சியளிப்பதற்காக மேக்அப் கலைஞர்கள் குழுவொன்றின் மூலம் உடலை சடலம் போன்று மாற்றிக்கொண்டார். முழுமையான இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை அவர் செய்திருந்தார்.
இந்த முட்டாள்தனமான போலி மரணச்சடங்கு நிகழ்வில் ஸெங் ஜியாவின் குடும்பத்தினரும், நண்பர்களும் கலந்துகொண்டனர். பின் சவப்பெட்டியிலிருந்து எழுந்து அங்கிருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்த ஸெங் ஜியா, அவ்விடத்திலிருந்து நடந்து சென்றார்.


