லண்டன்: ஆதிகால யானைப்பறவையின் முட்டை 55 லட்சத்துக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.
இந்தியப்பெருங்கடலில் இருக்கும் மடகாஸ்கர் நாடு உலக ஆராய்ச்சியாளர்களின் சொர்க்க பூமியாக கருதப்படுகிறது.
இந்த மதகாஸ்கர் நாட்டில், 17 நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக நம்பப்படும் யானை அளவுள்ள ஒரு பெரியபறவையின் முட்டை கண்டெடுக்கப்பட்டது.
ஒரு சாதரண ஒரு கோழிமுட்டையின் அளவை காட்டிலும் 100 மடங்கு பெரிதான ஒரு அடி நீளமுள்ள இந்த பாதி படிமமான யானை முட்டை லண்டன் கிருஸ்டி ஏலம் மையத்தில் ஏலம் விடப்பட்டது. 30 ஆயிரம் பவுண்டுக்கு ஏலம் விட எதிர்பார்க்கப்பட்ட இந்த முட்டையானது 66,675 பவுண்டுக்கு ஏலம் விடப்பட்டது.
11 அடி நீளத்தில் இறக்கையில்லா யானை அளவிலான ஒரு பறவையின் முட்டையாக இருக்க கருதப்படும் இந்த படிமமான முட்டை இந்திய மதிப்பில் 55 லட்சத்திற்கு மேல் விற்கப்பட்டுள்ளது.