டெல்லி: பாலிவுட் நடிகைகளுடன் இணைந்து ராணுவ வீரர்கள் விளம்பரம் வெளியிட்டதற்கு ராணுவ தலைமையகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
ராணுவத்துக்கு ஆட்தேர்வு செய்யும் மையம் ஷில்லாங்கில் உள்ளது. இந்த மையம் சார்பில் வெளியிடப்பட்ட விளம்பரத்தில், அழகான மற்றும் வெற்றிகரமான பெண் குழந்தைகள் வேண்டுமா? இந்திய ராணுவத்தில் சேருங்கள் என்ற குறியிடப்பட்டிருந்தது.
பாலிவுட் நடிகைகள் குல் பனாக், பிரியங்கா சோப்ரா, சுஷ்மிதா சென், செலினா ஜெட்லி உள்ளிட்ட நடிகைகளின் படங்களுடன் வெளியான இந்த விளம்பரம் பற்றி சமூக ஊடகங்களில் வெளியாகி கடும் விமர்சனத்துக்குள்ளானது. விளம்பரத்தில் உள்ள நடிகைகளின் தந்தைகள் இந்திய ராணுவத்தின் 3 படைகளில் பணியாற்றியுள்ளனர் எனவேதான் இந்த நடிகைகள் விளம்பரத்தில் பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து இதுபோன்ற விளம்பரம் வெளியானது ராணுவ தலைமையகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்து கருத்து கூறிய ராணுவ அதிகாரிகள், இந்த விளம்பரத்தை வெளியிடுவது குறித்து ஆட்தேர்வு மையம் எந்த அனுமதியும் பெறவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதுபோன்று தவறுகள் எதிர்காலத்தில் நடக்காதவாறு பார்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
