சான்பிரான்சிஸ்கோ: 'அழகா இருக்கீங்களே அட்டர்னி ஜெனரல்' என்று பெண் அட்டர்னி ஜெனரலைப் பார்த்து கூறியதற்காக அமெரிக்கா அதிபர் பாரக் ஒபாமா சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
சான்பிரான்சிஸ்கோவில் நடந்த நல நிதிசேகரிப்பபு நிகழ்ச்சியில்கலந்து கொண்ட ஒபாமா பேசுகையில், சான்பிரான்சிஸ்கோ அட்டர்னி ஜெனரரல், மிகவும் கண்டிப்பானவர்.திறமையானவர். அதேசமயம் அழகானவரும் கூட என்றார்.இதுதான் சூட்டைக்கிளப்பியுள்ளதாம்.
இந்தியப் பெண்..

அந்த அட்டர்னி ஜெனரல்இந்திய வம்சாவளியைச்சேர்ந்தவர் என்பதுதான் விசேஷமே. பெயர் கமலா ஹாரிஸ். 48 வயதாகும்கமலா குறித்து நிகழ்ச்சியில் ஒபாம பேசுகையில்,மேற்கண்டவாறு சொன்ன ஒபாமா, நான் சொல்வது உண்மைதான் என்றும் கூறினார்.
அத்துடன் நில்லாமல் கமலாவின் கண்களையும் வர்ணித்து புகழ்ந்து பேசினார் ஒபாமா.
இது அங்கு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஒபாமாவின் பேச்சி மரியாதைக்குறைவானது,கண்ணியக்குறைவானது என்று பலரும் கூறியுள்ளனர்.
கமலா ஹாரிஸின் தாயார் இந்தியர், தந்தை ஜமைக்க அமெரிக்கர். இந்த விவகாரம் குறித்து இதுவரை மிஷல் கருத்து தெரிவிக்கவில்லை.
கட்டுப்பாடானவர் ஒபாமா என்று பேசப்பட்டுவரும் நிலையில் அவரது இந்த கருத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.