தஞ்சாவூர், ஏப். 14-
தஞ்சையை அடுத்த கள்ள பெரம்பூர் அருகேயுள்ள தென்னங்குடி கிராமத்தில் அரசு ஆரம்ப நிலையம் உள்ளது. இங்கு தஞ்சை மருத்துவ கல்லூரி சாலை சுந்தரம் நகர் மகேஸ்வரி நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரது மகள் காயத்ரி (வயது 24) நர்சாக பணியாற்றி வருகிறார். கள்ளபெரம்பூரை சேர்ந்த ராஜகோபால் (50) காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு 11.30 மணிக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் கொண்ட கும்பல், ஆரம்ப சுகாதார நிலையத் துக்கு வந்தனர். அவர்கள் அனைவரும் முகமூடி அணிந் திருந்தனர். பின்னர் 3 பேரும், அங்கு நின்ற காவலாளி ராஜகோபாலை தாக்கினர். இதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.
அப்போது சத்தம் கேட்டு வந்த நர்சு காயத்ரியை , கும்பல், கைகளால் தாக்கியது. பின்னர் அவர்கள், நர்சு காய்த்ரி வாயை பொத்தி, அவர் அணிந்திருந்த நகைகளை பறித்தனர். இதில் 4 பவுன் நகையை கும்பல் கொள்ளை யடித்தனர். பின்னர் 3 பேர் கும்பல், மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.
கும்பல் தாக்குதல் காயமடைந்த நர்சு காயத்ரி, காவலாளி ராஜகோபால் ஆகியோர் தஞ்சை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த துணுகர சம்பவம் பற்றி கள்ளபெரம்பூர் போலீசில் நர்சு காயத்ரி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, முகமூடி கொள் ளையர்களை தேடி வருகின்றனர். தஞ்சையில் நர்சு-காவ லாளியை தாக்கி மர்ம கும்பல் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.