பாகிஸ்தான் பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து 60 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஹரீப்புரில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் 10 வகுப்பில் படித்து வருபவர் நடஷா ஹபீப் (வயது 16). அவர் நேற்று பரீட்சை எழுதி கொண்டிருக்கும் போது திடீர் என தான் மறைத்துவைத்து இருந்த துப்பாக்கியை எடுத்து தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாணவியை ஆசாத் என்ற வாலிபர் ஒருவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.இதனால் மாண்வி இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமியின் உடலில் பல்வேறு காயங்கள் இருந்ததாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலை செய்துள்ள மாணவி ஹபீப் தனது அம்மாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் என்னை மன்னித்து விடுங்கள். ஆசாத் என்ற வாலிபர் எனக்கு தொந்தரவு கொடுத்து வருகிறான். ஆதலால் எனக்கு உயிருடன் இருக்க பிடிக்கவில்லை என கூறியுள்ளார்.
மேலும், அவனது தொலைபேசி எண்ணையும் மாணவி எழுதி வைத்துள்ளார். போலீஸ் அந்த எண்ணை தொடர்பு கொண்ட போது அது உபயோகத்தில் இல்லை என தகவல் வந்துள்ளது.
இது குறித்து மாணவி படித்துவந்த பள்ளியின் ஆசிரியை கூறுகையில்,
மாணவி, ஆசிட் குடித்து தற்கொலை செய்ய முயற்சி செய்தார். அப்போது மற்ற மாணவிகள் அதனை பார்த்து தடுத்து நிறுத்தினர். இந்நிலையில், துப்பாக்கியை எடுத்து சுட்டு தற்கொலை செய்துள்ளார் என கூறினார்.