ஒரு ரூபாய் இட்லி: அம்மா கேண்டீன்களில் அலை மோதும் கூட்டம்

சென்னை: ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி திட்டம் வெற்றிகரமாக செயல் பட்டு வருகிறது. 

முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடக்கி வைக்கப்பட்ட ஒரு ரூபாய் இட்லி திட்டம் மூலம் பட்ஜெட் கேண்டீன்ஸ் நாளொன்ருக்கு சுமார் 2இலட்சம் இட்லிகள் விற்பனையாகி வருகின்றனவாம். 

அதுபோலவே, மதிய வேளைகளில் 5ரூபாய் சாம்பார் சாதம், தயிர் சாதம் அதிகளவில் மக்களால் விரும்பி வாங்கப்படுகிறதாம்.

தமிழக முதலமைச்சரால் பெண்கள் சுய உதவிக்குழுக்கள் மூலம் நடத்தப்படும் உணவகங்கள் சென்னையில் திறந்து வைக்கப்பட்டன. ஏழை எளியோர் பயன் பெரும் வகையில் குறைந்த விலையில் தரமான உணவு என்பதே அதன் முக்கிய குறிக்கோளாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பணி புரிபவர்களின் வாடிக்கை உண்வகங்களாக இவை இன்று மாறிவிட்டன.

முன்பெல்லாம் 40, 50 ரூபாய்க்கு சாப்பிட்டு வந்தவர்கள் தற்போது வெறும் எட்டு ரூபாயில் சாப்பாட்டை முடித்து விடுவதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

சுத்தத்துடன், சுவையாக இருப்பதே இத்திட்டம் வெற்றிபெற முக்கிய காரணம் என கூறுகிறார்கள் .

சென்னையில் பெற்றுள்ள வெற்றியைத் தொடர்ந்து வேறு சில மாவட்டங்களிலும் திட்டத்தை விரிவு படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாம்.

பொங்கல், வடை மற்றும் தோசை என மெனுவை விரிவு படுத்தினால் இன்னும் அதிக பயனாளிகள் பயன் பெறுவது நிச்சயம்.

ஆக ஒரு ரூபாய் இட்லியால் அம்மாவின் செல்வாக்கு கூடி வருவது என்னவோ மறுக்க இயலாத உண்மை.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: