'இரும்பு பெண்ணின்' இறுதி ஊர்வலம்: 170 நாட்டு பிரதிநிதிகள் பங்கேற்பு!

லண்டன்: மரணம் அடைந்த இங்கிலாந்து முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சரின் இறுதி ஊர்வலத்தில் 170 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். 

இங்கிலாந்தின் முதல் பெண் பிரதமர் மற்றும் இங்கிலாந்தின் இரும்பு பெண் என்று அழைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சர் உடல்நல குறைவு காரணமாக கடந்த 8-ந் தேதி மரணம் அடைந்தார். 

87 வயதான மார்கரெட் தாட்சரின் இறுதி சடங்கு நிகழ்ச்சி பாரம்பரிய முறைப்படி லண்டனில் நேற்று நடந்தது.

லண்டனில் உள்ள பால் கதீட்ரல் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு இறுதி சடங்கு நிகழ்ச்சி நடந்தது.


இந்தியா சார்பில் மத்திய மந்திரி பரூக் அப்துல்லா உள்பட முக்கிய பிரமுகர்கள் சுமார் 2300 பேர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.


அதன் பின்னர் 4 ஆயிரம் ராணுவ வீரர்கள் அணிவகுப்பு மரியாதையுடன் பாரம்பரிய சாரட் வண்டியில் மார்கரெட் தாட்சரின் உடல் எடுத்து செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.


மார்கரெட் தாட்சர் மறைவுக்கு ராணி எலிசபெத் தலைமையில் நடந்த இந்த இறுதி சடங்கு நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் இருந்து 176 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: