குர்காவ்னில் 3 ஆண்டுகளாக மைனர் மகளை கற்பழித்து வந்த காமக்கொடூரன்

குர்காவ்ன்: குர்காவ்னில் 45 வயது நபர் ஒருவர் தனது மகளையே 3 ஆண்டுகளாக கற்பழித்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குர்காவ்னில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படிக்கும் 17 வயது மாணவி நேற்று தனது தலைமை ஆசிரியையிடம் தெரிவித்த விவரம் அனைவரையும் பேரதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

அம்மாணவியின் தந்தை அவரை கடந்த 3 ஆண்டுகளாக கற்பழித்து வந்துள்ளார். இது குறித்து மாணவியின் தாய்க்கு தெரியாமல் அவர் பார்த்துக் கொண்டுள்ளார். அந்த காமக் கொடூர தந்தை வியாபார விஷயமாக வெளியூர் செல்லும்போதெல்லாம் மனைவி மற்றும் 2 குழந்தைகளை விட்டுவிட்டு மூத்த மகளான மாணவியை மட்டும் அழைத்துச் சென்றுள்ளார். 

அவ்வாறு அவர் மாணவியை மத்திய பிரதேசம், ஹிரத்வார் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று கற்பழித்துள்ளார். நேற்று இரவு அவர் தனது மகளை துபாய்க்கு அழைத்துச் செல்லவிருந்தார். துபாய்க்கு அழைத்துச் சென்று தந்தை மீண்டும் கற்பழிப்பார் என்று பயந்த மாணவி இது குறித்து நேற்று தனது பள்ளி தலைமை ஆசிரியையிடம் தெரிவித்துள்ளார். அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். 

இதையடுத்து போலீசார் அந்த நபர் மீது கற்பழிப்பு வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: