ஒரு இடத்திற்கு சுற்றுலா செல்லும் போது பல அருமையான இடங்கள் இருப்பினும், ஒருசில வெறுக்கத்தக்க விஷயங்களும் இருக்கும். அதுவும் எப்படி நாணயத்தில் இரண்டு பக்கங்கள் உள்ளதோ, அதேப் போல் ஒரு நாட்டிலும் நல்லது, கெட்டது என இரண்டும் இருக்கும். உதாரணமாக, இந்தியாவில் நிறைய வரலாற்று சிறப்புமிக்க இடங்களைப் பார்க்கத் தோன்றும், அதே சமயம், இந்நாட்டில் உள்ள அழுக்கான ரோடுகளையும், மோசமான போக்குவரத்தையும் நினைக்கும் போதே தூக்கிப் போடும்.
எனவே இந்தியாவில் உள்ள எந்த ஒரு மாநிலத்திற்கு செல்ல நினைத்தாலும், அங்கு உள்ள நல்ல விஷயங்கள் நிச்சயம் தெரியும். ஆனால் அங்குள்ள வெறுக்கத்தக்க விஷயங்கள் பற்றி சிலருக்கு தெரியாது. எனவே அத்தகையவர்களுக்காக, இந்ததியாவில் உள்ள ஒருசில வெறுக்கத்தக்க விஷயங்களைப் பட்டியலிட்டுள்ளோம்.
பிச்சைக்காரர்கள்
இந்தியாவில் எந்த ஒரு இடத்திற்கு சென்றாலும், அங்கு பிச்சைக்காரர்கள் இருப்பது.
பைக்கில் மூவர் பயணிப்பது
இந்தியாவில் இருசக்கர வாகனங்களில் மூவர் செல்வது என்பது குற்றம். ஆனால் இன்றும் நிறைய மக்கள் அந்த விதிகளை உடைத்து, அந்த செயலை தொடர்ந்து செய்கின்றனர். அதுமட்டுமின்றி, பயணம் செய்யும் போது ஹெல்மெட் போடாமல் சென்றால், பெரும் ஆபத்து எனத் தெரிந்தும், அதைப் போடாமல் சென்று விபத்து நேரிடும் போது, கோபம் தான் வருமே தவிர, பாவம் வராது. எனவே இதுவும் ஒரு வெறுக்கத்தக்க விஷயங்களுள் ஒன்றாகும்.
ஆடு மாடுகள்
இந்தியாவில் சரியான பராமரிப்புக்கள் இல்லாததாலும் வெறுப்பு ஏற்படுகிறது. அதிலும் சாலைகளில் ஆடு மாடுகள் சென்று, பெரும் போக்குவரத்து நெரிசலை உண்டாக்குவது குறிப்பிடத்தக்கவை.
அளவுக்கு அதிகமான கூட்டம்
இந்தியாவில் இந்த செயலைப் பார்ப்பது அதிசயம் இல்லை. எப்போதுமே பேருந்து, ரயில் மற்றும் ஆட்டோ போன்றவை எப்போதுமே கூட்டமாக, கவிழ்வது போன்று தான் செல்லும். இதைப் பார்க்கும் போதும் வெறுப்பு ஏற்படும்.
அழுக்கான சாலைகள்
இந்தியாவில் ஒருசில இடங்களில் மட்டுமே சாலைகள் சுத்தமாகவும், அழகாகவும் இருக்கும். ஆனால் பெரும்பாலான சாலைகளில் அழுக்குகள், குப்பைகள் போன்றவை சாலைகளிலேயே இருக்கும். மேலும் காதை கிழிக்கும் வகையில் சப்தமானது இருக்கும். இதை நினைக்கும் போதும் மனிதல் ஒருவித வெறுப்பு நேரிடும்.
போக்குவரத்து நெரிசல்
இந்தியாவில் பிடிக்காத ஒன்றில் தான் பயணம் செய்வது. ஏனெனில் இங்கு அளவுக்கு அதிகமாக போக்குவரத்து நெரிசல் இருப்பதால், எதையும் சரியாக செய்ய முடியாது. மேலும் எந்த ஒரு இடத்திற்கு சரியான நேரத்தில் செல்ல முடியாது. இதுவும் இந்தியாவில் வெறுப்பூட்டும் விஷயங்களில் ஒன்றாகும்.
ஆட்டோ டிரைவர்கள்
மிகவும் மரியாதையுடன் நடத்தும் ஆட்டோ டிரைவர்கள் இருக்கும் இந்தியாவில், ஒருசில கடுமையாக நடந்து கொள்ளும் ஆட்டோ டிரைவர்களால், சுற்றுலா வரும் வெளிநாட்டவரும் பயந்து ஓடிவிடுகின்றனர். எனவே இதுவும் வெறுக்கத்தக்க விஷயங்களுள் ஒன்று.
எச்சில் துப்புதல்
இந்தியாவில் பான், பாக்கு போன்றவை மிகவும் பிரபலம். அதிலும் இவற்றை போட்டு விட்டு, பொது இடம் தானே என்று நினைத்து, அவற்றை மூலை முடுக்குகளில் துப்பிவிடுகின்றனர். அதுமட்டுமின்றி, சாலையிலேயே சிலர் துப்புகின்றனர். சிலரோ கண்களை மூடிக்கொண்டது போல், ஆட்கள் இருக்கின்றனரா என்று சிறிதும் பார்க்காமல் துப்புவார்கள்.
சாலையோரக் கடைகள்
ஏற்கனவே பெரும்பாலான சாலைகள் வண்டிகளால் நிரப்பப்பட்டிருக்கிறது. அத்துடன் ஒன்றாக சாலையோரங்களில் கடைகளைப் போட்டு, நடப்பதற்கே இடம் இல்லாமல் செய்வது அதைவிடக் கொடுமை. அதற்காக கடைகளே போட வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் நடைபாதையில் வைத்தால், பின் எப்படி நடப்பது. எனவே இதுவும் வெறுக்கத்தக்க விஷயங்களில் ஒன்றாக உள்ளது.
குப்பைகள்
அனைத்து நாட்டிலும் குப்பைகளைப் போட ஒரு முறை பின்பற்றப்படுகிறது. ஆனால் இந்தியாவில் தான் விதிகளை உடைப்பது எளிதான ஒன்றாயிற்றே. ஆகவே இங்குள்ள மக்கள் சாலைகள் என்று சிறிதும் பாராமல், குப்பைகளை சாலையோரங்களில் குவித்து, பாக்டீரியாக்களை சூப்பராக பரப்புகின்றனர்.