யங்கூன்: மியான்மரில் இஸ்லாமிய பள்ளி ஒன்றில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 13 குழந்தைகள் உடல் கருகி பலியானார்கள்.
மியான்மர் நாட்டின் யங்கூன் நகரில் இஸ்லாமிய பள்ளி ஒன்று உள்ளது. அங்கு இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 13 குழந்தைகள் உடல் கருகி பலியாகியுள்ளனர்.
பள்ளியை ஒட்டியுள்ள மின்மாற்றி அதிமாக சூடாகியதை அடுத்து அங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.