கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் கான்கொஸ்ட் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆர்டரின் பேரில் இந்த எஸ்யூவி கஸ்டமைஸ் செய்து வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்தியாவுக்கான கான்கொஸ்ட் எவேட் எஸ்யூவி மாடல் தற்போது முதன்முறையாக டொரன்ட்டோ நகரில் பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
கான்கொஸ்ட் எக்ஸ்வி கவச வாகனத்தின் அடிப்படையில் தனிநபருக்கான மாடலாக இந்த எவேட் எஸ்யூவி விற்பனைக்கு வந்துள்ளது. டொரன்ட்டோ நகரிலுள்ள ஆலையில் 2 உற்பத்தி பிரிவில் 30 பணியாளர்கள்தான் இந்த எஸ்யூவியை கஸ்டமைஸ் செய்கின்றனர். பார்ப்பதற்கு ராணுவ வாகனம் போன்றே இருக்கும் இந்த எஸ்யூவி குறித்த கூடுதல் தகவல்களை காணலாம்.
கஸ்டமைஸ்

ஃபோர்டு எஃப் 550 சேஸியில்தான் இந்த எஸ்யூவி வடிவமைக்கப்படுகிறது. 4,000 மணிநேர மனித ஆற்றலில் இந்த எஸ்யூவி தயாரிக்கப்படுகிறது.
இன்டிரியர்

இந்த எஸ்யூவியில் காக்பிட்டும், பயணிகள் அறையும் தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளது.
இருக்கை வசதி

இந்த எஸ்யூவியில் 2 2 வரிசையுடன் கிங் சைஸ் லெதர் இருக்கைகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்த இருக்கைகளை எலக்ட்ரிக் கன்ட்ரோல் மூலம் அட்ஜெஸ்ட் செய்யலாம்.
வசதிகள்

லேப்டாப் டிரே, ரீடிங் லைட்டுகள், மினி பார் மற்றும் பிளேஸ்டேஷன் 3 உள்ளிட்ட பயணிகளுக்கு ஏற்ற சிறப்பு வசதிகள் ஏராளமாக இருக்கின்றன.
ஏர் சஸ்பென்ஷன்

இந்த எஸ்யூவியில் ஏர் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டிருப்பதால் எந்தவொரு சாலையிலும் சொகுசான பயண அனுபவத்தை தரும்.
எஞ்சின்

6.7 லிட்டர் வி8 டர்போ டீசல் எஞ்சின் அல்லது 6.8 லிட்டர் வி10 பெட்ரோல் எஞ்சினுடன் கிடைக்கும்.
சேஸிஸ்

இலகு எடையும், அதிக உறுதியும் கொண்ட அலுமினியம் பாடி பேனல்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.
விலை
ரூ.8.5 கோடியில் விற்பனைக்கு கிடைக்கும். இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அதிக விலை கொண்ட எஸ்யூவியாக இது இருக்கிறது.