சீனாவில் பரவும் பறவை காய்ச்சல்: 6 பேர் பலி; 20,0000 கோழிகள் அழிப்பு

ஷாங்காய்: சீனாவில் பறவை காய்ச்சல் சாவு எண்ணிக்கை 6 ஆக உயர்ந்ததைத் தொடர்ந்து, 20 ஆயிரம் கோழிகள் அழிக்கப்பட்டன. 

சீனாவின் கிழக்கு மாகாணங்களில் சமீபத்தில் பறவை காய்ச்சல் தாக்கியது. இதற்கு 3 பேர் பலியானார்கள். மேலும் 14 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புறா மூலம் இது பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க கோழி, பறவை பண்ணைகளுக்கு மருத்துவ குழுவினர் சென்று தடுப்பு ஊசிபோட்டு வருகிறார்கள். 

இந்நிலையில் பறவைக்காய்ச்சல் பாதிப்பால் ஏற்பட்ட சாவு எண்ணிக்கை நேற்று 6 ஆக உயர்ந்தது. சீனாவின் முக்கிய தொழில் நகரமான ஷாங்காய் பகுதியில் மட்டும் 4 பேர் பலியாகி உள்ளனர். எனவே அங்கு தீவிர முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அங்குள்ள கோழி, பறவை விற்பனை மார்க்கெட் மூடப்பட்டது. 

பீதியின் காரணமாக சுமார் 20 ஆயிரம் கோழிகளை கொன்று அழித்தனர். அத்துடன் நோய் அறிகுறி தென்படும் ஏராளமான பறவைகளை நிபுணர்கள் பிடித்து சென்றனர். 

இதன் எதிரொலியாக ஜப்பான் நாடு தனது பயணிகள் தகுந்த மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளும்படி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேபோல அமெரிக்காவும் முன் எச்சரிக்கையை மேற்கொண்டுள்ளது.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: