டெல்லி: டெல்லியில் சுற்றுலா பேருந்தினுள் டிரைவரால் சிறுமி பாலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓடும் பேருந்தில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நடந்தே 4 மாதங்கள் ஆன நிலையில், தலைநகர் டெல்லியில் மீண்டும் அதேப்போன்றதொரு சம்பவம் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தில்லி சுல்தான்புரி பகுதியில், குடிசைப் பகுதிகளுக்கு அருகே சுற்றுலாப் பயணிகள் பேருந்து நிறுத்தப்பட்டிருந்தது. அந்த பேருந்துக்குள் ஏறி விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை டிரைவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
சிறுமி அழுது கொண்டே இருப்பதை அறிந்த பெற்றோர்கள் விசாரணை செய்தபோது நடந்த சம்பவத்தை விவரித்துள்ளார் சிறுமி. இதனையடுத்து குற்றவாளியை கைது செய்யக் கோரி சிறுமியின் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார் டிரைவரை கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.