ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் அட்டுழியம் பள்ளிவாசல் மீது தாக்குதல்!

உடுப்பி : 35 ஆண்டுகளாக செயல்படும் மதரசாவில் பள்ளிவாசல் கட்ட "காவி பயங்கரவாதிகள்" எதிர்ப்பு; பள்ளிவாசல் மீது தாக்குதல் 

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் "கங்கொல்லி" கிராமத்தில் பள்ளிவாசல் கட்ட, அனைத்து சட்ட நடைமுறைகளையும் பின்பற்றி அனுமதி பெற்ற பின்னரும், பள்ளிவாசலை கட்டவிடமாட்டோம் என ஹிந்துத்துவ தீவிரவாதிகள் தகராறு செய்கின்றனர்,

"மதரசா மிஸ்பாஹுல் உலூம்" என்ற பெயரில் கடந்த 35 ஆண்டுகளாக செயல்படும் மதரசாவின் இட வசதியை விஸ்தரிக்கும் எண்ணத்துடன், பள்ளிவாசல் கட்டும் பணிக்கான ஆயத்த வேளைகளில் ஈடுபட்டு, மாவட்ட நிர்வாகத்திடம் அதற்குரிய முறையான வரைபட அனுமதியும் பெறப்பட்டுள்ளது.

இதற்கிடையில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று (02/04) "Hindu Jagaran Vedike" என்ற ஹிந்துத்துவ அமைப்பு "கங்கொல்லி" கிராம பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் அராஜகத்தில் ஈடுபட்டனர்.

பள்ளிவாசல் கட்டுமானப்பணிகளை தடுத்து நிறுத்தாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் கொக்கரித்தனர்.

இதையடுத்து, "கங்கொல்லி" கிராம பஞ்சாயத்து நிர்வாகம் பள்ளிவாசல் கட்டுமானப்பணிக்கு தடை விதித்துள்ளது.

மாவட்ட நிர்வாகத்தில் கட்டிட வரை படத்தை சமர்ப்பித்து, அதிகாரிகள் நேரில் வந்து "கள ஆய்வு" (Inspection) செய்து, அங்கீகாரம் வழங்கிய கட்டிடப் பணியை தடுத்து நிறுத்திய கிராம நிர்வாகத்தை எதிர்த்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்போவதாக தெரிவித்தார், மதரசாவின் செயலாளர், மவுலானா அப்துல் பாசித் நத்வி.

இதற்கிடையில், புதனன்று, (03/04) மாவட்டத்தின் நேசர் என்ற கிராமத்தில் அமைந்துள்ள ஜும்மா பள்ளிவாசலின் மீதும் ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: