அஞ்சலியை ரகசிய திருமணம் செய்தாரா இயக்குநர் களஞ்சியம்?

Director Kalangiyam Weds Anjali Secretly அஞ்சலியை இயக்குநர் களஞ்சியம் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார் என செய்திகள் வெளியாக ஆரம்பித்துள்ளன. 

அஞ்சலிக்கும் அவரது சித்திக்கும் ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

தான் நடித்து சம்பாதித்த சொத்துக்களை முழுவதுமாக தனது சித்தியும் இயக்குநர் களஞ்சியமும் அபகரித்துக் கொண்டதாகவும், இருவராலும் தன் உயிருக்கே ஆபத்து என்றும் அஞ்சலி குற்றம்சாட்டியுள்ளார். 

இப்போதைக்கு ஹைதராபாதில் பாதுகாப்பாக இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அஞ்சலி பற்றி பல உண்மைகளைச் சொல்வோம் என்று கிளம்பியுள்ளனர் அஞ்சலியின் சித்தியும் இயக்குநர் களஞ்சியமும். 

அஞ்சலியை ஒரு ரயில் நிலையத்திலிருந்து அழைத்து வந்து சினிமாவில் நடிக்க வைத்தவன் நானே என்று களஞ்சியம் கூறியுள்ளார். இன்னொரு பக்கம் அஞ்சலிக்கும் களஞ்சியத்துக்கும் ரகசிய திருமணம் நடந்துவிட்டதாகவும், இதை வெளியில் சொல்லப் போவதாக மிரட்டித்தான் அஞ்சலியை தன் கட்டுப்பாட்டுக்குள் களஞ்சியம் வைத்திருந்தார் என்றும் கூறப்படுகிறது. 

விரைவில் தங்கள் ரகசிய திருமணத்தை அவர் ஊரறிய சொல்வார் என்றும், அதே போல சித்தி பாரதிதேவியும் அஞ்சலியின் பழைய கதைகளை வெளியிடத் தயாராவதாகவும் கூறப்படுகிறது. 
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: