1200 ஒளி ஆண்டு தூரத்தில் பூமியைப் போன்ற 2 கிரகங்கள்!

 kepler discovers smallest habitable zone planet பாஸடோனா: பூமியிலிருந்து 1200 ஒளி ஆண்டுகள் தூரத்தில் பூமியைப் போன்ற இரு புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளதாக தெரிய வந்துள்ளது. 

அமெரிக்காவின் நாசா மையம் விண்வெளி குறித்து ஆய்வு மேற்கொள்ள கெப்லர் 62 விண்கலத்தை அனுப்பியுள்ளது. அதில் பொருத்தப்பட்டுள்ள அதிசக்தி வாய்ந்த டெலஸ்கோப் விண்வெளியை துல்லியமாக படம் எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது. 

இந்த நிலையில் சமீபத்தில் அனுப்பி வைத்துள்ள போட்டோவில் பூமியை போன்று 2 கிரகங்கள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றில் பாறைகள், கடல்கள் மற்றும் ஈரத் தன்மையுள்ள காற்று போன்றவை தெரிய வந்துள்ளது. இந்த கிரகங்களில் நீர் இருப்பது கூட தெளிவாக தெரிகிறது.

 எனவே, இவை மனிதர்கள் வாழ முற்றிலும் தகுதியானவை என்ற முடிவுக்கு வந்துள்ளனர் விண்வெளி அறிஞர்கள். 

இந்த கிரகங்கள் புதன் கிரகத்தில் இருந்து 3 கோடியே 70 லட்சம் கி.மீட்டர் தூரத்திலும், வியாழன் கிரகத்தில் இருந்து 6 கோடியே 50 லட்சம் கி.மீட்டர் தூரத்திலும் உள்ளன. 

மேலும், அங்கு உயிரினங்கள் வாழ தகுதியுடைய தட்பவெப்ப நிலை நிலவுவதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. சூரியனை விட சிறியதாகவும், மங்கலாகவும் அவை காணப்படுகின்றன. 

இந்த 2 புதிய கிரகங்கள் கண்டு பிடிக்கப்பட்டது குறித்து கெப்லர் விண்கல ஆய்வு திட்ட தலைவர் வில்லியம் போருக்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 'கெப்லர் டெலஸ் கோப் கண்டு பிடித்துள்ள பல கிரகங்களில் இது மிகவும் பயனுள்ளது,' என்றார். 
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: