நியூயார்க்: அமெரிக்கா வாழ் இந்தியரான ஹோட்டல்கள் உரிமையாளர் விக்ரம் சத்வால் போதைப் பொருள் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவில் ட்ரீம் உள்ளிட்ட ஹோட்டல்களை நடத்தி வருபவர் விக்ரம் சத்வால். கடந்த 2-ந் தேதியன்று ஹாலிவுட் சர்வதேச விமான நிலையத்தில் அவரது உடைமைகள் சோதனைக்குள்ளாக்கப்பட்டன. அப்போது கோக்கெயின், ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருட்கள் பெருமளவு அவரிடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு ப்ளோரிடா சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு நேற்று முன் தினம் ஜாமீன் கிடைத்ததைத் தொடர்ந்து ப்ளோரிடா சிறையில் இருந்து விடுதலையானார்.இது போன்ற வழக்குகளில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகளாவது சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பிருக்கிறது
கடந்த 2010-ம் ஆண்டு குடிப் பழக்கத்தில் இருந்து மீள்வதற்காக மும்பையில் விக்ரம் சதால் சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.