மதுரை: மதுரையில்வெயில் மண்டையைப் பிளக்க ஆரம்பித்து விட்டது. மக்கள் தலையா இல்லை அடுப்பா என்று புலம்ப ஆரம்பித்துள்ளனர். அப்படி ஒரு வெயில். இந்த நிலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாருக்காக மதுரை காவல்துறை சிறப்புதொப்பிகளை காவலர்களுக்குக் கொடுத்துள்ளது.
கோடை காலம் பிறந்து விட்டது. கொளுத்தும் வெயிலும் கிளம்பி விட்டது. எங்கு பார்த்தாலும் வெள்ளை வெயில். கண் கூசுகிறது, கால் சுடுகிறது.
மதுரையில் இப்போதே 100 டிகிரியைத் தாண்டி விட்டது வெயில். இதனால் மக்கள் வெயிலில் புழுங்க ஆரம்பித்து விட்டனர். கரண்ட் வேறு கிடையாதே. இதனால் டபுள் அட்டாக்காக மாறி மக்கள் டென்ஷனுடன் திரிகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது போலீஸாருக்காக சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
மதுரையில் வெயில் 100 டிகிரியைத் தாண்டி அடிக்க ஆரம்பித்துள்ளால் போக்குவரத்து போலீஸார் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மதுரையில் பணிபுரியும் போக்குவரத்து போலீசார் மற்றும் ரோந்து போலீசார் வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க மதுரை மாநகர போலீஸ் விசேஷ ஏற்பாடுகளை செய்து உள்ளது.
சிறப்பு ஏற்பாடுகள்
நகரில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள 200-க்கும் மேற்பட்ட போலீசாருக்கு தினமும் 5 வேளை குளிர்பானம் அளிக்கப்படுகிறது. அதாவது தினமும் காலை 11, பகல் 1, மாலை 3, 5 உள்பட 5 நேரங்களில் குளிர்பானம் தரப்படுகிறது.
அதேபோல் போக்குவரத்து போலீசார் வெயிலில் நின்று பணிபுரிவதால் அவர்களுக்கு வெப்பம் தாக்குவதை தடுக்கும் வகையில் சிறப்பு தொப்பிகள் வழங்கப்பட்டுள்ளது.
இதுபோக மாநகரில் 45 இடங்களில் துணி குடைகள் போலீஸாருக்காக வைக்கப்பட்டுள்ளது.

18 இடங்களில் ஏசி கூண்டு மேலும் நகரின் 18 இடங்களில் ஏற்கனவே குளிர்சான கூண்டும் அமைக்கப்பட்டுள்ளது. போலீசாருக்கு குளிர்பானம், தொப்பி வழங்கும் பணிகளை போக்குவரத்து துணை கமிஷனர் பெரோஸ்கான் நேரடியா கண்காணித்து வருகிறார்.