பெல்காமில் கல்லூரி மாணவி கடத்தி கற்பழித்துக் கொலை: குற்றவாளிகளுக்கு வலை

பெல்காம்: கர்நாடகாவில் 20 வயது கல்லூரி மாணவி கடத்தி, கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 

கர்நாடக மாநிலம் பெல்காமில் உள்ள அரசு கல்லூரியில் படித்து வந்தவர் 20 வயது மாணவி ராணி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த வெள்ளிக்கிழமை தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு கிளம்பிய அவரை மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர். கல்லூரிக்குச் சென்றவர் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தார் அவரை பல இடங்களில் தேடியும் பலனில்லை. இதையடுத்து அவர்கள் நேற்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். 

இந்நிலையில் பெல்காமில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள சுலேபாவி கிராமத்தில் நிர்வாண கோலத்தில் ராணியின் உடல் கிடந்தது கண்டிபிடிக்கப்பட்டது. அவர் பலரால் கற்பழித்து கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது. குற்றவாளிகள் அவரைக் கொன்று அவரது முகத்தை கல்லால் சிதைத்து உடலில் மராதா என்று தேவனகிரியில் எழுதி வைத்துள்ளனர். 

ராணியின் ஆடை மற்றும் காலணிகளை வைத்து இறந்தது அவர் தான் என்பதை அவரது தந்தை உறுதி செய்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்துள்ளனர். இதற்கிடையே இந்த சம்பவத்தைக் கண்டித்து சுலேபாவி கிராம பேருந்து நிலையம் அருகில் உள்ள ரோட்டில் கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று எஸ்.பி,.ற்றும் துணை கமிஷனர் உறுதியளித்த பிறகே அவர்கள் கலைந்து சென்றனர். 

பெல்காம் மாவட்டத்தில் கல்லூரி மாணவி கற்பழித்து கொல்லப்பட்டுள்ளது கடந்த 3 மாதத்தில் இது 2வது முறையாகும். கடந்த ஜனவரி மாதத்தில் அதானியில் ப்ரீ யூனிவர்சிட்டி மாணவி பலரால் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகள் மாணவியின் உடலை எரித்துவிட்டனர். குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவின் அழகிய ரயில் வழித்தடங்கள்!

Amazing Rail Routesரயில் பயணங்கள் என்றாலே பலருக்கு மறக்க முடியா அனுபவங்களை மனதில் பதித்து விடும். அதிலும், சில வழித்தடங்கள் இயற்கையின் எழிலோடு இணைந்து செல்லும். 

அதுபோன்று இந்திய ரயில்வே வழித்தடங்கள் சிலவற்றை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். ரசித்து எடுக்கப்பட்ட ரயில் வழித் தடங்களின் புகைப்படங்கள் மற்றும் தகவல்களை காணலாம். 

ஜம்மு-உதம்பூர் 

காஷ்மீர் பள்ளத்தாக்கில் சாலை, ரயில்வே என எந்தவொரு கட்டுமான திட்டங்களையும் செயல்படுத்துவது பொறியியல் துறைக்கு சவாலான காரியமாகவே உள்ளது. அதன் நில அமைப்பு அப்படி. இந்த நிலையில், உலகின் அழகான பள்ளத்தாக்கு பகுதியாக புகழப்பெறும் காஷ்மீரில் ஜம்மு-உதம்பூர் இடையிலான 53 கிமீ தூரம் கொண்ட ரயில்வே பாதையும் இயற்கை எழிலை ரசித்துக் கொண்டே பயணம் செய்யும் வாய்ப்பை அளிக்கிறது.

ஜம்மு-காஸிகுண்ட்

ஜம்மு-காஸிகுண்ட் இடையில் அமைக்கப்பட்டு வரும் இந்த வழித்தடத்தில் ரயில் சேவை இயக்கப்படும் போது அது நிச்சயம் சுற்றுலாப் பயணிகளை புதிய உலகத்துக்கு அழைத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை. குளிர்காலங்களில் முழுவதும் எங்கு காணினும் வெண் போர்வையாக பரந்து கிடக்கும் பனிப் படலங்களை கண்டு ரசித்துக் கொண்டே செல்லலாம்.

பதான்கோட்-ஜோகிந்தர்நகர்

இமாச்சலப் பிரதேசம் கங்ரா பள்ளாத்தாக்கு பகுதியில் உள்ள ஜோகிந்தர் நகரையும், பஞ்சாப் மாநிலம் பதான் கோட்டையும் இணைக்கும் 165கிமீ தூரம் கொண்ட இந்த ரயில் வழித்தடம் கணவாய்கள், சுரங்கப் பாதைகள், ஆறுகள் என ஓர் இயற்கை அழகில் குளிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.

ரத்னகிரி-மங்களூர்

வியக்க வைக்கும் இயற்கை அழகை கண்டு ரசித்துக் கொண்டே செல்வதற்கான மற்றொரு வழித்தடம் ரத்னகிரி-மங்களூர் இடையிலான ரயில் வழித்தடம். கொங்கன் ரயில் மண்டலத்தில் இருக்கும் இந்த ரயில் வழித்தடம் ஏராளமான ஆறுகள் மற்றும் நீர்ப்பகுதிகளை கடந்து சென்று நம் கண்களையும், மனதையும் ஈரப்படுத்தும்.

வாஸ்கோடகாமா-லோண்டா

நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலமாக திகழும் கோவாவின் வாஸ்கோடகாமா மற்றும் லோண்டா சந்திப்புக்கு இடையிலான இந்த வழித்தடம் நிச்சயம் ஒரு முறை செல்ல வேண்டிய ரயில் பயணமாக இருக்கும். ஆர்ப்பரித்து விழும் அருவிகள், அடர்ந்த வனம் என ஒரு த்ரில் பயண அனுபவத்தை வழங்கும்.

ஊட்டி மலை ரயில் 

110 ஆண்டுகளுக்கும் மேலாக சேவை அளித்து வரும் ஊட்டி மலை ரயில் தனது பயணத்தின் மூலம் லட்சோபலட்சம் மக்களின் கண்களுக்கு நித்தமும் விருந்தளித்து வருகிறது. தென் இந்தியாவுக்கு சுற்றுலா வருபவர்களின் தாகத்தை தீர்ப்பதில் இந்த ரயிலுக்கு முக்கிய பங்கு உண்டு.

கல்கா-சிம்லா

மலை ரயில் ஊட்டி மலை ரயில் போன்றே கல்கா-சிம்லா இடையிலான மலை ரயிலும் வட இந்திய சுற்றுலா செல்வோரை கவர்ந்த ஒன்று. கல்லூரியின் கல்விச் சுற்றுலாவின்போது இந்த ரயிலில் பயணித்த அனுபவம்  மனதில் பசுமையாய் நிலைத்திருக்கிறது. அன்று ரயில் பயணத்தின்போது பெய்த பனிக் கட்டி மழையும், அந்த நடுங்க வைத்த குளிரும், அதள பாதாளத்திலிருந்து எழுந்த கோபுரத்தில் கட்டிய பாலத்தில் யூ டர்ன் போட்டு செல்லும் ரயிலின் அழகை கண்டு சிலிர்த்த அனுபவம் இன்று நினைத்தாலும் மனதில் ஜிலீரென்று இருக்கிறது.  ஹனிமூன் ஸ்பெஷல் என்றும் இந்த ரயிலை கூறலாம். 1903ல் கட்டப்பட்ட இந்த மலை ரயில் பாதையில் 102 குகைகளும், 864 பாலங்களும் இருக்கின்றன. அதில், சில பாலங்கள் ரோமானிய கட்டிடக் கலையை அடிப்படையாக கொண்டது.

ஜல்பைகுரி-டார்ஜிலிங்

ஊட்டி மலை ரயில் போன்றே இதுவும் இந்தியாவின் பழமையான மலை ரயில். முக்கிய சுற்றுலாத் தலமாக திகழும் டார்ஜிலிங் செல்லும் பயணிகள் இந்த ரயிலில் செல்லும்போது புதிய பரவத்தை அடைவது உறுதி.

நேரல்-மாதேரேன் மலை ரயில்

மஹாராஷ்டிராவில், மாதேரேன் மலை ரயிலும் மிக பழமையான மலை ரயில்களில் ஒன்றுதான். எப்போதும் பிஸியாக ஓடிக் கொண்டிருக்கும் மும்பைவாசிகளுக்கு ரிலாக்ஸ் தேவையென்றால் மாதேரேனுக்கு இந்த ரயிலில் செல்வது வழக்கம். 1901ல் துவங்கி 1907ல் 20 கிமீ தூரத்துக்கு நேரல்-மாதேரேன் இடையில் இந்த வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. அப்துல் ஹூசேன் அடம்ஜி பீர்பாயால் ரூ.16 லட்சம் செலவில் இந்த குறுகிய ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டது.

சிலிகுரி-அலிபுர்துவார் 

சிக்கிம்-பூடானை இணைக்கும் சிலிகுரி-அலுபுர்துவார் இடையிலான ரயில் பாதையும் பயணம் செய்ய வேண்டிய இந்திய ரயில் தடங்களில் ஒன்று. சரணாலயங்கள், அடர்ந்த வனப் பகுதிகள், தேயிலைத் தோட்டங்களை கடந்து செல்லும் இந்த ரயில் பாதையும் பலருக்கு மறக்க முடியாத அனுபவத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கவுகாத்தி-சில்சார் 

அசாமின் ஹப்லாங் பள்ளத்தாக்கை கடக்கும் கவுகாத்தி-சில்ச்சார் ரயில் பாதையும் இயற்கை அழகை ரசிப்பதற்கான ஏற்ற வழித்தடம். சமவெளிகள், தேயிலைத் தோட்டங்கள் என பசுமை தாயகமாக திகழ்கிறது.

ஜெய்ப்பூர்-ஜெய்சால்மர்

ராஜஸ்தான் பாலைவனத்தில் அமைந்திருக்கும் ஜெய்சால்மர் நகர் ஒட்டக சவாரிக்கு பெயர் போனது. ஜெய்சால்மருக்கும், ஜெய்ப்பூருக்கும் இடையில் இருக்கும் ரயில் வழித்தடம் தார் பாலை வனத்தை கடந்து வருகிறது.

விசாகப்பட்டினம்-அரக்கு

இயற்கை ஆர்வலர்களின் சொர்க்கப்புரியாக திகழும் சட்டீஸ்கரில் உள்ள அரக்கு பள்ளத்தாக்கையும், ஆந்திராவின் கடற்கரை நகரான விசாகப்பட்டினத்தையும் இணைக்கும் இந்த ரயில் வழித்தட பயணமும் நிச்சயம் கண்களுக்கு விருந்தாக அமையும்.


ஹாசன்-மங்களூர் கர்நாடக மாநிலம், ஹாசன்-மங்களூர் இடையிலான ரயில் வழித்தடமும் ரயில் பயணிகளை உற்சாகப்படுத்தும். வயல் வெளிகள், அடர்ந்த வனப்பகுதி மற்றும் சக்லேஷ்பூர்-சுப்ரமண்யா ரயில் நிலையங்களுக்கு இடையில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைக்கப்பட்டுள்ள 57 குகைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளை கடந்து செல்கிறது.

பாம்பன் ரயில் பாலம் 

பொறியியல் துறையின் வலிமைக்கு சான்றாக திகழும் தமிழகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பாம்பன் ரயில் பாலமும் பயணத்தின்போது புதிய அனுபவத்தை ஏற்படுத்தும். ராமேஸ்வரம் தீவை இணைக்கும் இந்த பாலம்தான் இந்தியாவின் இரண்டாவது பெரிய கடல் வழி ரயில் பாதை.

கொல்லம்-செங்கோட்டை 

1907ம் ஆண்டு இந்த வழித்தடத்தில் முதல் ரயிலை திருவாங்கூர் மஹாராஜா துவங்கி வைத்தார். இயற்கை எழில் சூழ்ந்த வழித்தடங்களில் ஒன்று.

இனி வரப்போகும் புயலுக்கு 'மகேசன்' என்று பெயர்!!

 Next Cyclone Will Be Called As Magesan திருவண்ணாமலை: இதுவரை நீலம், லைலா, நர்கீஸ், தானே என்ற பெயர்களில் நம்மைத் தாக்கிவிட்டுப் போயின புயல்கள். இந் நிலையில் அடுத்து வரப் போகும் புயலுக்கு மகேசன் என்று பெயரிடப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

வங்கக் கடல், அரபிக் கடலில் உருவாகும் புயல்களுக்கான பெயர்களை இந்தியா, இலங்கை உள்ளிட்ட 8 நாடுகள் இணைந்து சூட்டுகின்றன. ஒவ்வொரு நாட்டின் சார்பிலும் தலா 8 பெயர்கள் அடங்கிய பட்டியலை ஜெனிவாவில் உள்ள உலக வானிலை கழகத்தில் தரப்படும். 

இந்தப் பெயர்கள் பதிவு செய்யப்பட்டு வங்கக் கடல், அரபிக் கடலில் ஏற்படும் புயலுக்கு ஒவ்வொரு நாடும் தந்த பெயர்கள் வரிசைப்படி சூட்டப்படும். இந்த வகையில் அடுத்து வரப் போகும் புயலுக்கு மகேசன் என்ற பெயர் சூட்டப்படவுள்ளதாம். இது இலங்கை சூட்டிய பெயராகும். 

இத்தகவலை சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார். திருவண்ணாமலையில் ஒரு பொறியியல் கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட அவர் நிருபர்களிடம் பேசுகையில், 

வானிலை ஆய்வுக்குப் பயன்படும் வகையில் இப்போது, தமிழ்நாட்டில் சென்னையில் மட்டுமே ரேடார் மையம் உள்ளது. கூடுதலாக காரைக்காலில் ரேடார் மையம் அமைக்கப்படும். கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டு, ரேடார் கருவியும் அமைக்கப்பட்டு வருகிறது. விரைவில் இந்த மையம் செயல்படத் தொடங்கும். 

அதேபோல, ராமநாதபுரம் மாவட்டம் புல்லாங்குடியில் ரேடார் மையம் அமைக்கவும் இடத்தை தமிழக அரசு ஒதுக்கித் தந்துள்ளது. இங்கு, எதிர்காலத்தில் ரேடார் மையம் அமைக்கப்படும். 

காரைக்காலில் அமைக்கப்படும் ரேடார் மையம் மூலம் மேலும் கூடுதலாக சுமார் 400 கி.மீ. தூரத்துக்கு வானிலை நிகழ்வுகளை ஆய்வு செய்ய முடியும். இனி வங்கக் கடல், அரபிக் கடலில் ஏற்படும் புயலுக்கு மகேசன் என்று பெயர் வைக்கப்படும். இது, இலங்கை வைத்த பெயர் என்றார் ரமணன். 

நாளைக்கு ஹோட்டல்கள் இருக்காது.. வேலைநிறுத்தம்!

 Hotels Over India Shut Down On Monday To Protest Tax சென்னை: ஏ.சி. உணவகங்கள் மீது மத்திய அரசு விதித்த சேவை வரியை எதிர்த்து நாடு முழுவதும் ஹோட்டல்கள் நாளை (ஏப்ரல் 29) வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன. 

ஏசி உணவகங்களுக்கு மத்திய அரசு பட்ஜெட்டில் கூடுதல் சேவை வரியை விதித்தது. 

இதை ரத்து செய்ய வேண்டும், உணவுத் தரம் மற்றும் பாதுகாப்புச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஒருநாள் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அகிய இந்திய ஹோட்டல் உரிமையாளர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 

இது குறித்து சென்னை ஹோட்டல்கள் சங்கத்தின் தலைவர் சீனிவாசராஜா, செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் ராமசாமி ஆகியோர் நிருபர்களிடம் கூறுகையில், 

குளிர்சாதன வசதி கொண்ட உணவகங்கள் 12.36 சதவீத சேவை வரியை செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி ஏப்ரல் 1ம் தேதி முதல் சேவை வரி நடைமுறைக்கு வந்துள்ளது. உணவகங்கள் சார்பில் ஏற்கனவே மாநில அரசுக்கு வாட் வரி செலுத்தி வருகிறோம். இந்நிலையில் மத்திய அரசு ஏசி வசதி ஹோட்டல்களுக்கு சேவை வரி விதித்துள்ளது கண்டனத்துக்குரியது. இதனை ரத்து செய்ய வேண்டும். 

மதுபான வசதி கொண்ட ஏசி உணவகங்களுக்கு மட்டுமே விதித்து வந்த இந்த சேவை வரி தற்போது உணவகங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 

சென்னையில் உள்ள சுமார் 5,000 ஹோட்டல்களில் 1,000 ஹோட்டல்கள் ஏசி வசதி உடையவை. 

சேவை வரி விதித்துள்ளதால், சென்னையில் உள்ள சுமார் 1,000 ஏசி ஹோட்டல்களுக்கு கடும் இழப்பு ஏற்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள ஹோட்டல்களில் மட்டும் சுமார் 2.5 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். சேவை வரியின் காரணமாக வர்த்தகத்தில் நிலவி வரும் சரிவு தொடர்ந்தால் சுமார் 20 சதவீத ஊழியர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்படும். 

ஏற்கனவே உணவு பண்டங்களின் விலை உயர்ந்து, நடுத்தர மக்களின் வர்த்தகத்தை நாங்கள் இழந்து வரும் நிலையில் சேவை வரி விதிக்கப்பட்டு உள்ளதால் அதை மேலும் இழக்க நேரிடும். 

இதனால், மத்திய அரசு விதித்துள்ள சேவை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி இந்தியா முழுவதும் ஏசி ஹோட்டல்கள் மட்டுமின்றி ஏசி வசதி இல்லாத ஹோட்டல்களும் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. அதன்படி சென்னையிலும் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஹோட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் என்றனர். 

பெங்களூர் குண்டுவெடிப்பு! கைதானவர்கள் நிரபராதிகள்! - செய்தியாளர்கள் சந்திப்பில் உறவினர்கள் !

பெங்களூரில் பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகம் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட நெல்லையைச் சேர்ந்த மூன்று பேரும் நிரபராதிகள் என்று அவர்களுடைய உறவினர்கள் பெங்களூரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.

பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் தமிழகத்தைச் சார்ந்த கிச்சான் புகாரி, பீர் மொய்தீன், பஷீர் ஆகியோரை பெங்களூர் போலீஸ், தமிழக போலீசின் உதவியுடன் கைது செய்துள்ளது. குண்டுவெடிப்பிற்கு தொடர்பில்லாத அப்பாவிகள் இவர்கள் என்று பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் மூன்று பேரின் உறவினர்களும் பெங்களூரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

செய்தியாளர்கள் சந்திப்பில் அவர்கள் கூறும்போது; “கோவை குண்டுவெடிப்பு வழக்கில் நிரபராதி என்று விடுவிக்கப்பட்ட புகாரி, இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்காக நடத்தி வரும் சட்டரீதியான போராட்டங்களை சீர்குலைக்கவே தமிழ போலீஸை பயன்படுத்தி கர்நாடகா போலீஸ் மூன்று பேரையும் கைது செய்துள்ளது.

சென்னை நீதிமன்றத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு சென்று வரும் வேளையில் இவர்களை திருநெல்வேலியில் வைத்து போலீஸ் கைது செய்தது. புகாரியும், அவரது தம்பி சதாம் ஹுஸைனும் முன்னர் சில வழக்குகளில் சம்பந்தப்பட்டிருந்தாலும் பெங்களூர் குண்டுவெடிப்பில் இவர்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை.

குண்டுவெடிப்பு நிகழ்ந்த ஏப்ரல் 18-ஆம் தேதி புகாரி சென்னையில் இருந்தார். 19-ஆம் தேதி கோவையில் இருந்தார். அவரது தம்பி சதாம் ஹுஸைன், வழக்கு தொடர்பாக வழக்கறிஞரை சந்திக்க கோவை சென்றிருந்தார். ஏப்ரல் 21-ஆம் தேதி புகாரி திருநெல்வேலி நீதிமன்றத்திலும், சில வழக்குகள் தொடர்பாக சென்றிருந்தார். அதற்கு பிறகு திருநெல்வேலிக்கு திரும்பிய பிறகு 22-ஆம் தேதி நண்பர்களான சுலைமான், ஸாலி ஆகியோரை போலீஸ் பேருந்து நிலையத்தில் வைத்து பிடித்தது. சுலைமானை பின்னர் போலீஸ் விடுவித்தது. ஸாலியை இன்னொரு வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

புகாரிக்காக உறவினர்கள் ஆள்கொணர்வு மனுவை(ஹேபியஸ் கார்பஸ்) மதுரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தபோது கர்நாடகா போலீஸ் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளது. ஹேபியஸ் கார்பஸ் மனுவில் அரசு, நீதிமன்றத்தில் கூடுதல் கால அவகாசம் கேட்டுள்ளது. தமிழகத்திலும், கர்நாடகாவிலும் பல்வேறு வழக்குகளில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு உதவுவதற்காக முயன்றதே புகாரியை பொய் வழக்கில் சிக்கவைக்க காரணமாகும்.

பஷீர் ரியல் எஸ்டேட் ப்ரோக்கராகவும், பீர் மொய்தீன் திருநெல்வேலியில் டீக்கடையும் நடத்தி வருகிறார். நிரபராதிகளான இவர்களை விடுதலைச் செய்யவேண்டும்.” இவ்வாறு உறவினர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.

செய்தியாளர்கள் சந்திப்பில் புகாரியின் தாயார் கவ்லத், பஷீரின் மனைவி ஷம்சுன்னிஸா, பீர் மொய்தீனின் மனைவி செய்யதலி ஃபாத்திமா, அசோசியேசன் ஃபார் ப்ரொடக்ஷன் ஆஃப் சிவில் ரைட்ஸ் கர்நாடகா கன்வீனர் இர்ஷாத் அஹ்மத் தேசாய், எஸ்.எ.ஹெச் ரிஸ்வி ஆகியோர் பங்கேற்றனர்

சிக்ஸ் பேக்ஸ் உடம்பு வேண்டுமா?

உடலை பேணுவது மிகவும் முக்கியம். மனிதனுக்கு உடம்பில் இருக்கும் உடல் பிரச்சனைகளில் ஒன்று உடல் பருமன் அல்லது மெலிவான உடல் அமைப்பு. சரியான அளவு கொண்ட உடல் அமைப்பை ஏற்படுத்த பல வழிகள் உண்டு. அப்படி உடலை ஒரு கட்டமைப்புக்கு கொண்டு வந்தால் அழகுடன் சேர்ந்து ஆரோக்கியமும் நம்மை தொற்றிக் கொள்ளும். 

ஆண்கள் 6-பேக் (6-pack) வயிற்று அமைப்பை கொண்டு வருவதற்கு, அதீத பயத்துடன் அல்பட்ரோஸ் பறவையை பிடிப்பதை போல் காத்திருக்கிறார்கள். அனைத்து ஆணும் நல்ல ஆரோக்கியமான உடல் கட்டமைப்புடன் இருந்து 6-பேக் வயிற்று அமைப்பை கொண்டு வந்து கொழுத்த உடலை கரைக்க வேண்டும். அதனை கீழ்கண்ட வழிகளால் எளிதில்அடையலாம்:

கொழுப்பைக் குறைத்தல் 

வீங்கிய வயிறு தொந்தியாக மாறுவதற்கு முன் அதனை குறைத்திட வேண்டும். அதற்கு கீழே சொல்லியிருக்கும் சில வழிகளை கடைப்பிடித்து, வயிற்றை கட்டுகோப்பாக வைத்திருங்கள்.

இதய பயிற்சிகள் 

சில தீவிர இதயப் பயிற்சிகளை மேற்கொள்வதை தவிர உடம்பில் உள்ள கொழுப்பின் அளவை வேகமாக குறைக்க வேறு வழி இல்லை. உயர்ந்த இதயத் துடிப்பு மற்றும் வியர்வை உடம்பை விட்டு வெளியேறுவதால், கொழுப்புத் திவலைகளை சிதைக்க உதவி புரியும். இது செல்லுலைட் என்ற தோளில் தேங்கியிருக்கும் கொழுப்பை வேகாமாக சிதைக்க உதவும். இதற்காக மிதிவண்டி ஓட்டுதல், ஓடுதல், நீந்துதல் மற்றும் நடனம் செய்தால் சில கிலோகிராம் எடை நம் உடலை விட்டு ஓடும்.

குறைந்த அளவு சாப்பாடு 

எடை குறைப்புக்கு வளர்ச்சிதை மாற்ற விகிதத்தை அதிகமாக வைத்திருப்பது முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் செய்யும் உடற்பயிற்சிக்கு பின்னரும் கூட, அதிகப்படியான வளர்ச்சிதை மாற்றமானது கொழுப்பை எரிக்கும். அதிக வளர்ச்சிதை மாற்ற வீதத்தை அடைய ஒருவர் அளவான உணவை போதிய இடைவெளியில் சாப்பிடவேண்டும்.

காலை உணவை தவறாமல் சாப்பிடுதல் 

காலை உணவென்பது மற்ற வேளைகளில் உண்ணும் உணவை விட மிகவும் முக்கியமான ஒன்று. அதனால் அதை தவிர்ப்பது நல்லதல்ல. காலை உணவு என்பது இரவு தூக்கத்தினால் ஏற்படும் நீண்ட விரதத்தை முடிக்க பயன்படுத்தும் உணவு. எனவே காலை எழுந்து ஒரு மணி நேரத்திற்குள் காலை உணவை எடுத்துக் கொண்டால், வளர்ச்சிதை மாற்ற விகிதத்தை நாள் முழுவதும் அதிகமாக வைக்க உதவும்.

பளு தூக்கும் பயிற்சி 

சில சமயங்களில் பளு தூக்குவதால், மீள்வரு தசைகளில் உண்டாகும் செல்லுலைட் என்ற தோள்களில் படியும் கொழுப்பை கரைக்க உதவும். பளு தூக்கும் பயிற்சி உடல் கட்டமைப்பை அதிகரிக்க மட்டுமல்லாமல் உடல் கட்டமைப்பை குறைக்கவும் உதவும்.

தசைகளை வளர்த்தல் 

உடம்பில் உள்ள கொழுப்பை நீக்கியதும், 6-பேக் வயிற்றுடன் உடலை கட்டமைக்க தசைகளை வலுப் பெறச் செய்ய வேண்டும். அதற்கு சில உடற்பயிற்சிகளை செய்தால் சரியான கட்டமைப்புடன் வயிறு அமையும்.

வயிற்றுக்கான உடற்பயிற்சி 

வயிற்றுக்கான உடற்பயிற்சி செய்தோமானால், வயிற்று தசைகளுக்கு சரியான அளவு இழுவிசை இளக்கத் தன்மையை கிடைக்கும். அதுவும் தரையில் படுத்து, முட்டியை மடக்கி கைகளை தலைக்குப் பின்னால் கட்டிக் கொண்டு, தலை, முட்டியை தொடும் அளவிற்கு உடம்பை தூக்க வேண்டும். இந்த உடற்பயிற்சி மேல் மற்றும் நடு வயிற்றை குறி வைக்கும். இந்த பயிற்சியை உடம்பின் இரு பக்கங்களாக செய்தால் சரிவுள்ள தசைகள் மேம்படுத்தும்.

கரூர் அருகே 600 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 7 வயது சிறுமி! மீட்புப் பணி தீவிரம்!!

7 year old girl fell into borewell, near Karurகரூர்: கரூர் மாவட்டம் சூரிப்பாளையத்தில் 600 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 7 வயது சிறுமியை மீட்க தீயணைப்பு வீரர்கள் தீவிரமான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

கரூர் மாவட்டம் பாதிரிப்பட்டியை அடுத்த சூரிப்பாளையத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டியன் தனது மகளுடன் முருங்கைக்காய் பறிக்க தோட்டத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த சிறுமி 600 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளார். 

இதைத் தொடர்ந்து முத்துப்பாண்டியன் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தார். அங்கு 3 பொக்லைன் இயந்திரங்களை வரவழைத்து குறுக்குவெட்டு பகுதியில் குழி தோண்டி சிறுமியை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 

பாறைகள் நிறைந்த பகுதியாக இருப்பதால் மீட்பு பணியில் சற்று காலதாமதம் ஏற்பட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளது. சிறுமிக்கு குழாய் மூலம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. 

மே 9ல் பிளஸ் 2 ரிசல்ட்- மே 31ல் 10ம் வகுப்பு ரிசல்ட்: தமிழக அரசு அறிவிப்பு

 Plus 2 Exam Results Will Declared On May 09 சென்னை: பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான ரிசல்ட் மே 9-ந் தேதியன்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான ரிசல்ட் மே 31-ந் தேதியன்றும் வெளியாகும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

தமிழக அரசு இன்று வெளிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் தேர்வு முடிவுகளின் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

தமிழகம், புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ந் தேதி தொடங்கி மார்ச் 27-ந் தேதி வரை நடைபெற்றது. இத் தேர்வில் 8 லட்சத்து 4 ஆயிரத்து 534 பேர் எழுதினர். 2,020 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ந் தேதியன்று வெளியிடப்படுகிறது. 

தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 27-ந் தேதியன்று தொடங்கி ஏப்ரல் 12-ந் தேதி வரை தமிழகம் முழுவதும் நடைபெற்றது. தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 11,359 பள்ளிகளை சேர்ந்த 10 லட்சத்து 69501 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதற்காக 3013 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 5 லட்சத்து 43 ஆயிரத்து 511 மாணவர்களும், 5 லட்சத்து 25 ஆயிரத்து 990 மாணவியரும் எழுதியிருந்தனர். இவர்களுக்கான தேர்வு முடிவு மே 31-ந் தேதியன்று வெளியிடப்படுகிறது. 

ஆதிகால 'யானைப் பறவையின்' முட்டை எதிர்பார்த்ததைவிட அதிகமாக 55 லட்சத்துக்கு ஏலம்

 Elephant Bird Egg Fetches Over  At Christie லண்டன்: ஆதிகால யானைப்பறவையின் முட்டை 55 லட்சத்துக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. 

இந்தியப்பெருங்கடலில் இருக்கும் மடகாஸ்கர் நாடு உலக ஆராய்ச்சியாளர்களின் சொர்க்க பூமியாக கருதப்படுகிறது. 

இந்த மதகாஸ்கர் நாட்டில், 17 நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக நம்பப்படும் யானை அளவுள்ள ஒரு பெரியபறவையின் முட்டை கண்டெடுக்கப்பட்டது. 

ஒரு சாதரண ஒரு கோழிமுட்டையின் அளவை காட்டிலும் 100 மடங்கு பெரிதான ஒரு அடி நீளமுள்ள இந்த பாதி படிமமான யானை முட்டை லண்டன் கிருஸ்டி ஏலம் மையத்தில் ஏலம் விடப்பட்டது. 30 ஆயிரம் பவுண்டுக்கு ஏலம் விட எதிர்பார்க்கப்பட்ட இந்த முட்டையானது 66,675 பவுண்டுக்கு ஏலம் விடப்பட்டது. 

11 அடி நீளத்தில் இறக்கையில்லா யானை அளவிலான ஒரு பறவையின் முட்டையாக இருக்க கருதப்படும் இந்த படிமமான முட்டை இந்திய மதிப்பில் 55 லட்சத்திற்கு மேல் விற்கப்பட்டுள்ளது. 

கோவை வணிக வளாக கட்டிடத்தில் தனியார் வங்கியில் தீ: 3 பெண்கள் உள்பட 4 பேர் பலி




கோவை:கோவையில் வணிக வளகாத்தில் உள்ள வங்கியில் ஏற்பட்ட தீவிபத்தில் 4 பேர் கருகி பலியாயினர். பலர் காயமடைந்தனர். கோவை அவினாசி சாலையில் வணிக வளாக கட்டடம் ஒன்று உள்ளது. இந்த கட்டடத்தின் 2-வது மாடியில் தனியார் வங்கி உள்ளது.இன்று காலை வழக்கம் போல் பணிகள் நடந்து கொண்டு இருந்தன. அப்போது திடீரென தீப்பிடித்தது. இதனால் பரபரப்பு ஏற்படவே வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்கள் ஓட்டம் எடுத்தனர்.தீ மளமளவென பரவியதும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த தீ விபத்தில் பலர் உள்ளே சிக்கினர். 

தீயணை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.இந்நிலையில் மீட்புப்பணிகளுக்காக கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு மீட்புப்பணிகள் நடந்தன. 
3 பெண்கள் உள்பட 4 பேர் பலி

இந்த தீ விபத்தில் 4பேர் உடல் கருகி இறந்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. இறந்தவர்கள் கீர்த்தனா (23), மகாலெட்சுமி , மெக்‌னா என மூன்று பெண்களும், ஒரு ஆண் என நான்கு பேர் இறந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் தீயில் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து குதித்த இரு பெண்கள் ,தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்திற்கான காரணம் குறி்த்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கண்களிலும் நாடா புழுக்கள் தாக்குமாம்!!!

is there worm your eye நாடா புழு என்று சொல்லும் போது அது வயிற்றில் மட்டும் தான் வரும் என்று அனைவரும் நினைக்கிறோம். அதிலும் அதிகப்படியான இனிப்புக்களை சாப்பிட்டால் மட்டுமே நாடா புழுக்கள் வயிற்றில் வரும். ஆகவே அவற்றை வயிற்றில் இருந்து வெளியேற்றுவதற்கு பூச்சி மாத்திரைகளை போட்டு, அவ்வளவு தான் என்று நினைப்போம். ஆனால் இவற்றை சாதாரணமாக எண்ண வேண்டாம். ஏனெனில் இந்த நாடா புழு வயிற்றில் மட்டும் வருவதில்லை, மூளை மற்றும் நரம்பு மண்டலத்தையும் தாக்கும். அதைக் கூட நம்பலாம். ஆனால் கண்களிலும் நாடா புழு தொற்றும் என்று சொன்னால் நம்புவீர்களா?

is there worm your eye

ஆம், உண்மையில் கண்களிலும் நாடா புழு தாக்கும் அபாயம் உள்ளது. அவ்வாறு கண்களில் ஒருவருக்கு 20 செ.மீ நீளமுள்ள நாடா புழுவானது தாக்கி, அவற்றை டாக்டர். ஆஷ்லே தாமஸ் முலமுட்டில் என்பவர், அறுவை சிகிச்சையின் மூலம் வெளியேற்றியுள்ளார். மேலும் டாக்டர். தாமஸ் கண்களில் இருக்கும் நாடா புழுவை சிகிச்சை செய்து எடுத்ததில், இது ஏழாவது சிகிச்சை என்றும், இதுவரை இவர் எடுத்த புழுக்களிலேயே இது தான் மிகவும் நீளமான புழுவும் கூட என்றும் கூறியுள்ளார்.

பரவும் நோய் 

டாக்டர். முலமுட்டில் "பொதுவாக இந்த மாதிரியான நாடா புழு ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்போது அது ஆசியாவை அடைந்துள்ளது. மேலும் இந்த மாதிரியான புழுக்களின் முட்டைகளை, சதுப்புநிலக் காட்டு ஈ என்னும் பூச்சிகளால் கடத்தப்படுவதாகவும் நம்பப்படுகிறது. அதுவும் இந்த புழுக்களின் முட்டைகள், தூசிகள் போன்றோ அல்லது உடலில் உள்ள சிறு காயங்களினாலோ, மனிதர்களின் உடலுக்குள்ளே சென்று, கண்களை அடைகிறது" என்றும் சொல்கிறார். 

சிகிச்சை 

இந்த பரவும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹீமோதெரபி அல்லது அறுவை சிகிச்சையின் மூலம் கண்களில் இருந்து வெளிப்படுத்த முடியும். துரதிர்ஷ்டவசமாக, இந்த நோய் தாக்குதலுக்கு எந்த ஒரு தடுப்பு மருந்துகளும் இல்லை. இருப்பினும், அதனை சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டால், குணமாக்கிவிடலாம்.

கலாச்சாரத்தை சீர்குலைக்கிறார்கள்: கமல், கவுதமி, பிரகாஷ்ராஜ், விஜய் டிவி மீது போலீசில் புகார்

Complaint against Vijay TV, Kamal, Gouthami, Prakashrajசென்னை: நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது போன்று நடந்து கொண்டதாக கமல், கவுதமி, பிரகாஷ்ராஜ், திவ்யதர்ஷினி மீது இந்து மக்கள் கட்சி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது. 

இந்து மக்கள் கட்சியின் சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ் குமார் இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் விஜய் டிவி மீது புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது, 

தமிழகத்தில் மக்கள் அதிகம் பார்க்கக் கூடிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் தொலைக்காட்சியில் நடிகர் பிரகாஷ்ராஜ் தொகுத்து வழங்கும் "நீங்களும் வெல்லலாம்' என்ற பொது அறிவு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. 

complaint against vijay tv kamal gouthami prakashraj

கடந்த 15,16,17ம் தேதிகளில் ஒளிப்பரப்பட்ட இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமலஹாசன், நடிகைகள் கவுதமி, திவ்யதர்ஷினி மற்றும் குடும்ப பெண்களும் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குடும்ப பெண்களிடம் நடிகர் கமலஹாசன் பற்றி பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் நடிகர் பிரகாஷ்ராஜ், ஒரு நடுத்தர வயது பெண்மணியை பார்த்து, உங்களுக்கு நடிகர் கமலஹாசனை பிடிக்குமா என்று கேட்கிறார். அதற்கு அந்த நடுத்தர வயது பெண்மணி, எனக்கு வெறித்தனமாக பிடிக்கும் என்கிறார். மீண்டும் உங்களுக்கு நிறைவேறாத ஆசைகள் என்ற கேள்விக்கு பதிலளித்த அந்த பெண்மணி, கமலை கட்டிப்பிடித்து முத்தமிட வேண்டும் என்கிறார் 

அதுபோலும், லட்சக்கணக்கான மக்கள், குழந்தைகள் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகர் கமலஹாசனை கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கிறார். 

அதுபோல் நடிகை திவ்யதர்ஷினியும், எனக்கும் அந்த ஆசை இருக்கிறது என தெரிவித்து, கமலை கட்டிப்பிடித்து முத்தமிடுகிறார். அந்த நிகழ்ச்சியில் திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தினால் என்ன தவறு இருக்கிறது என்றெல்லாம் விவாதிக்கப்பட்டது.


பொது அறிவு நிகழ்ச்சி என்று அறிவிக்கப்பட்டு ஒளிபரப்படும் நிகழ்ச்சியில் ஒரு ஆணை அடுத்தவர் வீட்டு மனைவி அல்லது பெண்கள் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது தான் இந்திய நாட்டு கலாச்சாரமா? 

நாட்டில் பெருகி வரும் பாலியல் பலாத்காரத்திற்கு இதுபோன்ற நிகழ்ச்சிகள் தூண்டுகோளாக இருந்து வருகின்றன. எனவே அன்றைய நிகழ்ச்சிகளில் இந்திய நாட்டு கலாச்சாரத்தை சீரழித்த குற்றத்திற்காக நடிகர்கள் கமலஹாசன், பிரகாஷ்ராஜ், நடிகைகள் கவுதமி, திவ்யதர்ஷினி, மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கமலுக்கு முத்தமிட்ட நடுத்தர வயது பெண் மற்றும் இந்நிகழ்ச்சியை ஒளிபரப்பிய விஜய் டி.வி. நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார். 

எய்ட்ஸ்சினை விட கொடிய நோய் கொணோரியா... ஓர் எச்சரிக்கை

மனிதர்களை மிரட்டும் எய்ட்ஸ் நோய்க்கே இன்னும் சரியான அளவில் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நிலையில் மற்றொரு பால்வினை நோய் மக்களை அதிகபட்சமாக அச்சுறுத்தி வருகிறது.

தமிழில் வெட்டை நோய் என்றும் ஆங்கிலத்தில் கொணோரியா(Gonorrhea) என்றும் அழைக்கப்படும் இந்த நோய்தான் இப்போது பீதியை கிளப்ப ஆரம்பித்துள்ளது.

உலக அளவில் பார்க்கையில் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக பத்து கோடிப் பேருக்கும் அதிகமானோருக்கு இந்த நோய்த் தொற்று ஏற்பட்டு வருவதாக ஐநா தெரிவித்துள்ளது. இது பாக்டீரியாவால் பரவும் நோயாகும்.

இந்த வெட்டை நோய் ஆண்டிபயாடிக் மருந்துகளுக்கு கட்டுப்படுவதில்லையாம். இந்தநோய் விரைவில் குணப்படுத்த முடியாத ஒரு நோயாக மாறி வருவதை கவனத்தில் கொள்ள வேண்டும் என இங்கிலாந்தில் நடக்கின்ற ஒரு மைக்ரோ பயாலஜிஸ்டு மாநாட்டில் எச்சரிக்க உள்ளனர் நிபுணர்கள்.

வெட்டை நோயை எதிர்க்கவல்ல புதிய அண்டிபயாடிக் மருந்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பார்கள் என்ற நம்பிக்கையோடு நோயாளிகளுக்கு மற்ற சிகிச்சைகளைத் தந்து காலம் தாழ்த்துவதைத் தவிர சுகாதாரத்துறை நிர்வாகிக்களுக்கு வேறு வழியில்லாமல் போகலாம் என இந்த மாநாட்டில் எச்சரிக்கப்படவுள்ளது.

இந்த நோய் தொற்று ஏற்பட்டால் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். ஆண் உறுப்புக்களில் இருந்து மஞ்சள் நிற திரவம் வெளிப்படும். அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்று உணர்வு ஏற்படும்.

பெண்களின் கருப்பைக் கழுத்துப் பிரதேசம் தொற்று ஏற்படும். அதனால்தான் நோய் அறிகுறிகள் வெளியில் தெரிவதில்லை. அடிவயிற்றில் வலி ஏற்படும், ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படும். பெண் உறுப்பில் இருந்து துர்நாற்றத்துடன் கூடிய மஞ்சள் நிற திரவம் சுரக்கும்.  

இந்த நோய் தாக்குதல் இருக்கும் போது வாய் வழி உறவில் ஈடுபட்டால் தொண்டையில் கரகரப்பு, தொண்டையில் தொற்றுநோயும் ஏற்படும். அதேசமயம் மற்ற முறையிலான உறவின் மூலம் நோய் தொற்று அதிகமாக சீல் வடியவும் வாய்ப்புள்ளது என்கின்றனர் நிபுணர்கள்.  

இம்மாநாட்டில் பாலுறவு நோய்கள் சம்பந்தப்பட்ட இங்கிலாந்தின் முன்னணி நிபுணரான பேராசிரியை கேத்தி ஐசன் குரலெழுப்பவுள்ளார். அதே சமயம் பாதுகாப்பான உடலுறவுப் பழக்கங்கள், மேம்பட்ட நோய்க் கண்டுபிடிப்பு பரிசோதனைகள் போன்றவை அவசியம் எனவும் அவர் வலியுறுத்துகிறார்.

கர்ப்பகாலத்தில் தாய்க்கு கொணோரியா தொற்று இருக்கும் பட்சத்தில் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம். இல்லையென்றால் பிரசவத்தின் பொழுது குழந்தையின் கண்களில் பாதிப்பினை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

'மிஸ் கூவாகமாக' சாயா சிங் தேர்வு.. 2வது இடம் அனுஷ்காவுக்கு!

Miss Koovagam 2013விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. 


இதையொட்டி விழுப்புரம் மாவட்ட அரவாணிகள் நல சங்கம், தர்ம ரக்ஷன சமிதி சார்பில் மிஸ் கூவாகம் என்ற அழகிப் போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.


நேற்றிரவு விழுப்புரத்தில் நடந்த இந்தப் போட்டியில் 60 பேர் கலந்து கொண்டனர். அரவாணிகள் நலச் சங்கத் தலைவி ராதா தலைமை தாங்கினார். கலெக்டர் சம்பத் மிஸ் கூவாகம் போட்டியைத் தொடங்கி வைத்தார்.


உடை அலங்காரப் போட்டி, நடைப் போட்டி என பல்வேறு போட்டிகள் அவர்களுக்கு நடத்தப்பட்டன. இறுதிச் சுற்றுக்கு 10 பேர் தேர்வாயினர். அவர்களிடம் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து பொது அறிவுக் கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு சிறப்பாகப் பதில் கூறிய 3 பேர் தேர்வு செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.  


இதில் தர்மபுரியைச் சேர்ந்த சாயாசிங் முதலிடத்தை பிடித்து மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு பிரபல பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம் கிரீடம் சூட்டி பரிசு வழங்கினார்.


ஆந்திராவைச் சேர்ந்த அனுஷ்கா 2-வது இடத்தையும் இடத்தையும் பிடித்தார்.



சென்னையைச் சேர்ந்த தீபிகா 3-வது இடத்தைப் பிடித்தார். இவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சம்பத், எஸ்.பி மனோகரன், நகரசபை தலைவர் பாஸ்கரன் ஆகியோர் கிரீடம் சூட்டி பரிசுகள் வழங்கினர்.


மிஸ் கூவாகம் பட்டம் வென்ற சாயாசிங் கூறுகையில், சினிமாவில் கதாநாயகியாக நடிக்கின்ற வாய்ப்பை திருநங்கைகளுக்கு கொடுக்க வேண்டும். எங்களுக்கும் திறமை இருக்கின்றது. வேலை வாய்ப்புகளை அரசு உருவாக்கித் தர வேண்டும் என்றார்.

நா உயிரோடதான் இருக்கேன்: மதுரையில் நடந்த அதிசய சம்பவம்

மதுரை: இறந்து விட்டதாக கருதப்பட்டவர், இறுதிச் சடங்கின் போது உயிருடன் எழுந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இறந்ததாக கருதப்பட்டவரின் மனைவி மகிழ்ச்சி அடைந்தார். 

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள தும்மக்குண்டை சேர்ந்தவர் அசோகன் (வயது 45). இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். அசோகன் தி.மு.க. கிளைச் செயலாளராக இருந்து வருகிறார். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு அசோகனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே உறவினர்கள் அவரை மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அசோகன் நேற்று மதியம் இறந்து விட்டதாக அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் கூறினர். 

இதையடுத்து உறவினர்கள் அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு சென்று இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்தனர் அசோகனின் உடல் ஊர்வலமாக மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதில் உறவினர்கள், கட்சியினர் கலந்து கொண்டு அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். 

மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்ட அவரது உடலை தகனம் செய்வதற்கு முன்பு அசோகனின் உடல் மீது தண்ணீர் ஊற்றப்பட்டது. அப்போது அவரது உடல் அசைந்தது. சிறிது நேரத்தில் அவர் எழுந்து அமர்ந்தார். இதைப்பார்த்த அவரது உறவினர்கள் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். 

ஆனாலும் அவரது மனைவி கணவர் உயிரோடு தான் இருக்கிறார் என்று மிகவும் சந்தோஷப்பட்டு ஆனந்த கண்ணீர் வடித்தார். பின்னர் அவர் அசோகனுக்கு பழச்சாறு கொடுத்தார். அதைக் குடித்த அவர் தான் நன்றாக இருப்பதாக கூறினார். இதையடுத்து உறவினர்கள் அசோகனை வீட்டுக்கு அழைத்து சென்றனர். 

டாக்டர்களால் இறந்து விட்டவர் என்று கூறப்பட்டவர் உயிரோடு எழுந்து உட்கார்ந்த அதிசயம் அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே போல் டி.கல்லுப்பட்டி, மீனாட்சி புரத்தை சேர்ந்த நடராஜன் மாரடைப்பால் இறந்து விட்டதாக அதே தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் கூறினார்கள். ஆனால் அவருக்கும் இறுதி சடங்குகள் செய்த போது, மீண்டும் உயிர் பிழைத்தார். 

சென்னை- பெங்களூர் 'டபுள் டெக்கர்' ரயில்.. நாளை மறுநாள் முதல் இயக்கம்!

சென்னை: சென்னை- பெங்களூர் இடையேயான டபுள் டெக்கர் ரயில் நாளை மறுநாள் முதல் இயக்கப்படவுள்ளது. 

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முழுவதும் குளிரூட்டப்பட்ட பெட்டிகளைக் கொண்ட சென்னை சென்ட்ரல்- பெங்களூர் இடையேயான டபுள் டெக்கர் ரயில் சேவை வியாழக்கிழமை முதல் இரு மார்க்கத்தில் இருந்தும் தொடங்கவுள்ள.

சென்னை சென்ட்ரலில் இருந்து தினமும் காலை 7.25 மணிக்கு புறப்படும் இந்த ரயில் பிற்பகல் 1.30 மணிக்கு பெங்களூர் சென்றடையும். மறுமார்க்கத்தில் பெங்களூரில் இருந்து பிற்பகல் 2.40 மணிக்குப் புறப்பட்டு சென்னை சென்ட்ரலுக்கு இரவு 8.45 மணிக்கு வந்தடையும்.


அதாவது இரு நகரங்களுக்கும் இடையே உள்ள சுமார் 360 கி.மீ. தூரத்தை இந்த ரயில் 6 மணி நேரத்தில் கடக்கவுள்ளது. சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் மட்டும் தான் 5 மணி நேரத்தில் இந்த தூரத்தைக் கடக்கிறது.

இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, பங்கார்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் மற்றும் பெங்களூர் கன்டோன்மன்ட்டில் நின்று செல்லும். பெங்களூரில் இருந்து சென்னை செல்லும்போது மட்டும் இந்த ரயில் ஆம்பூரிலும் நிற்கும். இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுவிட்டது.

சென்னை சென்ட்ரல்- பெங்களூர் ஏசி சேர் கார் டிக்கெட் கட்டணம் ரூ. 470 ஆகும். சென்னை-பெங்களூர் இடையே இயங்கும் பிருந்தாவன், லால்பாக், பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேர் கார் கட்டணமும் ரூ. 470 தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரயில் அதிகபட்சம் 110 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும்.


ஜிபிஎஸ் வசதி கொண்ட இந்த ரயிலின் அனைத்துப் பெட்டிகளிலும் ரயில் எங்கே சென்று கொண்டிருக்கிறது, எவ்வளவு வேகத்தில் செல்கிறது, அடுத்த ஸ்டேசன் எது போன்ற விவரங்கள் டிஜிட்டல் போர்டுகளில் லைவ் ஆக ரிலே ஆகும்.


செளதி அரேபிய கருவூலத்தில் கேரள குடும்பத்துக்கு சொந்தமான ரூ. 5,000 கோடி!

 kerala family may come into 900 million saudi bonanza திருவனந்தபுரம்: கேரள குடும்பத்துக்குச் சொந்தமான செளதி அரேபிய கரூவூலத்தில் உள்ள ரூ. 5,000 கோடியை மீட்க கேரள அரசு சிறப்பு அதிகாரியை நியமித்துள்ளது. 

இது குறித்து கேரள மாநில சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் நசீகர் கூறியதாவது: 

கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தைச் சேர்ந்த கெயி குடும்பத்தினர் 136 ஆண்டுகளுக்கு முன் புனித மெக்கா நகரில் ஒரு இடத்தை வாங்கினர். அங்கு ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் பயணிகளுக்காக ஒரு இருப்பிடத்தைக் கட்டினர்.

 1950ம் ஆண்டு மெக்கா நகரை மேம்படுத்தவும், புனித யாத்ரீகர்களுக்கான தங்குமிடங்களை விரிவாக்கவும் கெயி குடும்பத்தினரின் இடத்தை செளதி அரசு கையகப்படுத்தியது. இதற்காக அந்தக் குடும்பத்தினருக்கு ரூ. 1.98 கோடியை (1.4 million Saudi riyals) நிவாரணமாக வழங்கியது. 

இந்தப் பணம் செளதி அரேபிய கரூவூலத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தப் பணத்தை கெயி குடும்பத்தினரால் பெற முடியவில்லை. இப்போது அந்தப் பணத்தின் மதிப்பு ரூ. 5,000 கோடியாகிவிட்டது. 

செளதி சட்டப்படி இந்தக் குடும்பத்தினர் இந்தப் பணத்தைப் பெற்றால் அதை செளதியிலேயே தான் செலவு செய்ய முடியும். இந்தப் பணத்தை வைத்து புனிதப் பயணிகளுக்காக பெரிய அளவில் தங்குமிடம் கட்டித் தர முடியும். 

2001ம் ஆண்டு முதல் கெயி குடும்பத்தினர் இந்தப் பணத்தை செளதி கருவூலத்தில் இருந்து பெற முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். ஆனால், அதைப் பெற முடியவில்லை. இதையடுத்து இது குறித்து கெயி குடும்பத்தினருக்கு உதவ அப்போதைய கேரள முதல்வராக இருந்த ஏ.கே.ஆண்டனி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

இப்போதைய உம்மன் சாண்டி அரசும் இந்த விஷயத்தில் மத்திய அரசு- செளதி அரசுடன் பேச ஒரு சிறப்பு அதிகாரியையும் நியமித்துள்ளது. 

இவ்வாறு நசீர் கூறினார். 

இந்த விவகாரத்தையே நசீர் தனது பி.எச்டி படிப்புக்கான கருவாக வைத்து ஆய்வறிக்கையும் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மனித கம்ப்யூட்டர், கணித மேதை சகுந்தலா தேவி மரணம்

 Human Computer Shakuntala Devi No More பெங்களூர்: மனித கம்ப்யூட்டர் என்று அழைக்கப்படும் கணித மேதை சகுந்தலா தேவி உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரில் காலமானார். அவருக்கு வயது 80. 

கணித மேதை சகுந்தலா தேவிக்கு சுவாசப் பிரச்சனை ஏற்பட்டதன் காரணமாக அவர் கடந்த 2 வாரங்களாக பெங்களூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை 8.15 மணிக்கு இறந்ததாக சகுந்தலா தேவி கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் டிசி சிவதேவ் தெரிவித்தார். 

சுவாசப் பிரச்சனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதயம் மற்றும் சிறுநீரகப் பிரச்சனைகளும் ஏற்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். சகுந்தலா தேவியின் மறைவுக்கு கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், ஆளுநர் பரத்வாஜ், முன்னாள் பிரதமர் தேவ கௌடா உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். 

சகுந்தலா தேவி கர்நாடக மாநிலத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். அவர் 3 வயதில் தனது தந்தையுடன் சீட்டாட்டம் விளையாடியபோது தான் அவரது கணிதத் திறமை வெளிச்சத்திற்கு வந்தது. அதன் பிறகு அவர் தனது 6வது வயதில் மைசூர் பல்கலைக்கழகத்தில் பொதுமக்கள் முன்னிலையில் தனது கணித ஆற்றலை வெளிப்படுத்தினார். பின்னர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியிலும் தனது கணிதத் திறமையை காட்டி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். 

அவர் கடந்த 1971ம் ஆண்டில் 201 இலக்கங்கள் கொண்ட எண்ணின் 23வது வர்க்கமூலத்தை மனக்கணக்குப் போட்டு தெரிவித்தார். பின்னர் 1980ம் ஆண்டு ஜூன் மாதம் லண்டன் இம்பீரியல் கல்லூரியின் கம்ப்யூட்டர் துறையில் தலா 13 இலக்கம் கொண்ட 7,686,369,774,870 x 2,465,099,745,779 ஆகிய எண்களை வெறும் 28 நொடியில் பெருக்கி விடை அளித்தார். 

எண் விளையாட்டு, எண் ஜோதிடம், திகைக்க வைக்கும் கணித உள்ளிட்ட ஏராளமான நூல்களை எழுதியவர் சகுந்தலா தேவி. அவரது கணித திறமைக்காக அவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

புனேவில் மனநலம் பாதித்த பெண்ணை கற்பழித்த வார்டு பாய், லஞ்சம் கொடுக்க முயன்ற டாக்டர் தம்பதி கைது

புனே: புனேவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த 22 வயது மனநலம் சரியில்லாத பெண்ணை கற்பழித்த மருத்துவமனை ஊழியரை போலீசார் கைது செய்தனர். 

மகராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் சின்ச்வாட் நகர் அருகே உள்ள வால்ஹெகர்வாடியில் டாக்டர் விஷால் சோனாவானே(34) மற்றும் அவரது மனைவி டாக்டர் வர்ஷா(31) ஆகியோர் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த மருத்துவமனையில் 22 வயது மனநலம் பாதித்த பெண் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அந்த பெண்ணை மருத்துவமனையில் பணிபுரியும் சுபாஷ் மொதாத்(22) என்பவர் கற்பழித்துள்ளார். 

இந்த விவகாரத்தை போலீசில் தெரிவிக்காமல் இருக்க டாக்டர் தம்பதி அப்பெண்ணின் தந்தைக்கு லஞ்சம் கொடுக்க முயன்றுள்ளனர். இதையடுத்து அப்பெண்ணின் தந்தை போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்போரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சுபாஷை கைது செய்தனர். மேலும் லஞ்சம் கொடுக்க முயன்ற டாக்டர் தம்பதியும் கைது செய்யப்பட்டனர். 

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் போலீசில் காவலில் வைக்கப்பட்டனர். 

9 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசர்.. புதிய படிமங்கள் மடகாஸ்கரில் கண்டுபிடிப்பு

வாஷிங்டன்: 9 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் படிமங்கள் மடகாஸ்கரில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. 

இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்கா கண்டத்துக்கு தென் கிழக்கே அமைந்துள்ள மாபெரும் தீவு மடகாஸ்கர். 

பண்டைய ஆய்வுகள், படிமங்கள் பற்றி ஆராய்பவர்களுக்கு மடகாஸ்கர் நாடு ஒரு பொக்கிஷமாகவே கருதப்படுகிறது. இங்கு பதிந்திருந்த டைனோசரின் படிமங்களை சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். 

இந்த டைனோசர், சுமார் 9 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இங்கு உளாவியதாக கருதப்படுகிறது.

மாமிசம் தின்னும் இந்த இரு கால்கள் உடைய டைனோசர் ஒரு பெரிய பசு மாட்டின் அளவிற்கு இருந்ததாக கூறப்படுகிறது.

கடந்த பத்து வருடங்களில் கிடைத்த டைனோசர் படிமங்களிலேயே இது புதிய வகை டைனோசராக இருக்க கருதப்படுகிறது.


'லோன்லி ஸ்மால் பண்டிட்' என்று பெயரிடப்பட்டுள்ளதாம் இதற்கு. இது 2.7 முதல் 4.2 மீட்டர் நீளமுள்ளதாக உருவ அமைப்பை பெற்றிருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.


கண்டங்களாக பிரிவதற்கு முன் இந்தியாவுடன் மடகாஸ்கர் ஒன்றாக இணைந்து இருந்த காலக்கட்டத்தில் அந்த டைனோசர் வாழ்ந்ததாக அமெரிக்க படிம ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.