கர்ப்பிணிகளுக்கு ஆபத்தாகும் எக்ளாம்ப்சியா நோய்!


பிரசவம் என்பது பெண்களுக்கு மறுபிறப்பு. எனவேதான் கர்ப்பகாலத்தில் எந்த வித நோயும் தாக்காத வகையில் ஆரோக்கியமாக உடல்நிலையை கவனித்துக் கொள்ளவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகளுக்கு ‘எக்ளாம்ப்சியா'எனப்படும் கடுமையான நோய் தாக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
நோயின் அறிகுறிகள்
‘எக்ளாம்ப்சியா' எனப்படும் கொடிய நோய் பிரசவத்திற்கு முன்னரோ அல்லது பிரசவ நேரத்திலோ அல்லது பிரசவத்திற்குப் பின்னரோ ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அதிக இரத்த அழுத்தம், சிறுநீரில் புரதப்போக்கு, உடல் வீக்கம், தலைவலி, கிறுகிறுப்பு, பார்வைக் கோளாறுகள், மேல்வயிற்று வலி, வலிப்பு மற்றும் நினைவு இழத்தல் போன்றவை இந்நோயின் அறிகுறிகளாம். பளிச்சிடும் வெளிச்சம் தெரிவது, வெளிச்சத்தைப் பார்த்தால் கண் கூசுவது அல்லது முழுமையாகக் கண்¤தெரியாமல் இருப்பது போன்ற பார்வைக் கோளாறுகள் இந்நோயாளிகளுக்கு ஏற்படும். சிலருக்கு வாந்திகூட இருக்கும்.
வலிப்பு முதலில் உடலெல்லாம் மிகவும் விறைப்பாக இருப்பதுபோல ஆரம்பிக்கும். கைகள் மடங்கி விரல்கள் எல்லாம் மடிக்கப்பட்டு கெட்டியாக எதையோ பிடித்திருப்பதைப்போல இருக்கும். பின்னர், உடலில் உள்ள தசைகள் எல்லாம் வெட்டி வெட்டி இழுக்கும். முதலில் தாடை கடிக்கப்பட்டு, நாக்கு கடிபட்டு, தசைகளின் துடிப்புகள் முகத்தில் ஆரம்பித்து வாயைச் சுறித் தோன்றி, பின்னர் கைகள் மற்றும் கால்களில் உடலின் ஒரு பக்கத்தில் தோன்றும். பின்னர், உடல் முழுவதுமே வெட்டிவெட்டி இழுக்கும். முகம் நீலம் பூத்து விடும்.
வலிப்பு ஏற்பட்டவர்களை சரியாகப் கவனிக்கவில்லையெனில் அவர்கள் படுக்கையிலிருந்து கீழே விழுந்து மோசமான காயங்கள் ஏற்பட்டு விடவும் வாய்ப்புகள் உண்டு. இவ்வலிப்பு வரும்போது நாக்கு வெளியே தள்ளப்பட்டு அது கடிபடவும் வாய்ப்புகள் உண்டு. மேலும் வாயிலிருந்து நுரை தள்ளுவதோடு சுவாசம் மிகவும் வேகமாக இருக்கும்.
இந்த நிலை ஓரிரு நிமிடங்கள் நீடித்துவிட்டு முழுமையான மயக்க நிலைக்கு தாய்மார்கள் சென்றுவிடுவார்கள். மயக்க நிலைக்குச் சென்று விட்ட தாய்மார்களுக்கு வேகமான சுவாசம் வருவதோடு சிறிது காய்ச்சலும் ஏற்படலாம். ஒரு சிலருக்கு அடிக்கடி வலிப்பு வரலாம். ஆனால், ஒரு சிலரோ மயக்க நிலையிலேயே நீடித்து இருப்பர் பிரசவத்திற்குப்பின் ஏற்படும் எக்ளாம்ப்சியா நோய் பிரசவம் ஆன முதல் இருபத்து நான்கு மணி நேரத்திலேயே ஏற்படும்.
தலைப்பிரசவம் ஜாக்கிரதை
எக்ளாம்ப்சியா நோய் எழுபத்தைந்து சதவீதம், முதல் பிரசவத்தில்தான் ஏற்படும் இந்நோயினால் மூளையில் இரத்தப் போக்கு, அதிகக் காய்ச்சல், நுரையீரல் நீர்கோர்த்தல், சிறுநீரக செயலிழப்பு, கர்ப்ப காலத் தொற்றுநோய், நரம்பியல் சிக்கல்களாம் பக்கவாதங்கள் போன்றவை எல்லாம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு..
இந்நோய் பிரசவத்திற்கு முன்னரே ஏற்பட்டால், அதிகபட்சமான தாய்மார்களின் இறப்பு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அடிக்கடி வலிப்பு ஏற்பட்டாலோ, வலிப்புகளுக்கு இடையே குறைந்த இடைவெளி மட்டுமே இருந்தாலோ மோசமான விளைவுகள் ஏற்படலாம்.இந்த எக்ளாம்ப்சியா நோயிலிருந்து உடல்நலம் தேறிய தாய்மார்களில் முப்பதிலிருந்து நாற்பது சதவீத பெண்களுக்கு பின்தங்கிவிட்ட உயர் இரத்த அழுத நோயிருக்கும்.
கருவிற்கு ஆபத்து
எக்ளாம்ப்சியா நோய் தாக்கிய தாய்மார்களுக்கு குறைப் பிரசவமாகக் குழந்தை பிறப்பது சாதாரணமாக நிகழக் கூடியதே. மேலும் கர்ப்பிணியின் வயிற்றில் உள்ள கருவிற்கு போதிய ஆக்ஸிஜன் கிடைக்காமல் கர்ப்பப் பையினுள்ளேயே குழந்தை இறந்துவிடலாம். வலிப்பினைக் கட்டுபடுத்த உபயோகிக்கும் மருந்துகளால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுவது சகஜம்.
இந்நோய்க்கு முறையான சிகிச்சை செய்ய வலிப்புக் கட்டுப்பாடு மருந்துகளையும், பிராணவாயுவையும், இரத்த அழுத்தக் குறைப்பு மாத்திரைகளையும் கொடுக்கவேண்டியிருக்கும். இந்நோய் கண்ட தாய்மார்க்குப் பிறக்கும் குழந்தைகள் முப்பதிலிருந்து அறுபது சதவிதம் வரை இறந்துவிட வாய்ப்புகள் உண்டு என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: