ஏலத்திற்கு வரும் பேய் கிராமம்

அரியவகை புராதன பொருட்கள், அரசு கையகப்படுத்திய சொத்துகள் ஏலத்துக்கு விடப்படுவது வழக்கம். இத்தாலி நாட்டில் இருக்கும் ஒரு கிராமம் 2 மில்லியன் பவுண்டு விலைக்கு ஏலம் விட நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
25 பழமையான வீடுகளை கொண்ட அந்த சிறிய கிராமத்தின் பெயர் பராதரிசிகா என்பதாகும். கடல் மட்டத்திற்கு மேல் 2,400 அடி உயரத்தில் மலைத்தொடரில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் இந்த கிராமத்தில் வசித்த மக்கள் கடந்த 1960-ம் ஆண்டில் அங்கிருந்து வெளியேறி விட்டார்கள்.
அதன்பிறகு அங்கு யாரும் குடியேறாததால் அதை பேய் கிராமம் என்றும் சிலர் கூறி வருகிறார்கள். வீடுகளை சுற்றி விவசாயம் செய்ய ஏற்ற வயல்வெளியும் இருக்கிறது.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: