தமிழகத்தில் ரூ.55,740 ஆரம்ப விலையில்ஸ புதிய டிஸ்கவர் எஸ்டி மோட்டார்சைக்கிளை பஜாஜ் ஆட்டோ அறிமுகம் செய்துள்ளது.ஸ்போர்ட்ஸ் டூரர் என்ற புதிய ரகத்தில் இந்த பைக் வந்துள்ளது. பஜாஜ் ஆட்டோவின் 125சிசி டிடிஎஸ்ஐ எஞ்சின் பொருத்தப்பட்டுள்ள புதிய டிஸ்கவர் எஸ்டி அதிக மைலேஜையும் கொடுக்கும்.
இந்த புதிய டிஸ்கவர் பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் எஞ்சின் 13 பிஎச்பி ஆற்றலையும், 10.8 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 125 சிசி செக்மென்ட்டில் மோனோ சஸ்பென்ஷனுடன் வந்துள்ள இந்த பைக்கில் பெட்டல் டிஸ்க் பிரேக்கை கொண்டிருக்கிறது.
புதிய டிஸ்கவர் எஸ்டி அறிமுகம் குறித்து மோட்டார்சைக்கிள் வர்த்தகப் பிரிவு தலைவர் ஸ்ரீனிவாஸ் கூறுகையில்,"டிஸ்கவர் பெயரில் வந்திருந்தாலும் இது முற்றிலும் புதிய பைக் மாடல். பி செக்மென்ட்டில் 17 சதவீத மார்க்கெட் பங்களிப்பை டிஸ்கவர் மாடல்கள் பெற்றிருக்கின்றன.
இதை புதிய பைக் மூலம் 30 சதவீதமாக அதிகரித்துக் கொள்ள திட்டமிட்டுள்ளோம். இந்த புதிய பைக் 100சிசி செக்மென்ட்டில் உள்ள வாடிக்கையாளர்களை 125சிசி செக்மென்ட்டிற்கு மாற்றும் அம்சங்களுடன் அறிமுகம் செய்துள்ளோம்," என்றார்.