எங்களை தாக்கினால் அடுத்த நிமிடங்களில் 35 யுஎஸ் ராணுவ தளங்களும் அழிக்கப்படும்: ஈரான் எச்சரிக்கை

 Iran Will Destroy 35 Us Bases Region If Attacked டெஹ்ரான்: எங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அடுத்த சில நிமிடங்களிலேயே ஈரானை சுற்றியிருக்கும் 35 அமெரிக்க ராணுவ தளங்கள் ஏவுகணைத் தாக்குதல்கள் மூலம் நிர்மூலமாக்கப்படும் என்று ஈரான் விமானப்படை கமாண்டர் அமிர் அலி ஹாஜிஜதே எச்சரித்துள்ளார்.
ஈரான் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துகிற அடுத்த சில நிமிடங்களியே ஈரானைச் சுற்றி அமெரிக்கா அமைத்துள்ள 35 ராணுவ தளங்களையும் நிர்மூலமாக்கக் கூடிய வகையில் ஏவுகணை தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரானின் ஏவுகணைகள் இந்த தளங்களை சில நிமிடங்களில் சென்று தாக்கி அழித்து விடக் கூடியவை. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள எந்த ஒரு அமெரிக்க ராணுவ தளத்தையும் விட்டுவைக்கமாட்டோம்.
இதேபோல்தான் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்திருக்கும் இஸ்ரேலிய படைகளையும் இலக்கு வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும். இந்த பிராந்தியத்தில் அமெரிக்கா ராணுவ தளங்களை அமைத்திருப்பது எங்களுக்கு அச்சுறுத்தல் அல்ல..இன்னும் சொல்லப்போனால் ஈரான் படைகள் தாக்குவதற்கான ஒரு "சந்தர்ப்பத்தை" யே அவைகள் ஏற்படுத்தியிருக்கின்றன என்றே கூறலாம் என்றார் அவர்.
விவகாரம் எனன்?
ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கிறது ..இது பயங்கரவாதிகளின் கைகளுக்கு சென்றுவிடும் என்று கூறி அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்திருக்கின்றன. இந்தத் தடையை பின்பற்றுமாறு ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளையும் இவை நிர்பந்தித்து வருகின்றன. இந்நிலையில் உலகின் 40 விழுக்காடு எண்ணெய் போக்குவரத்து நடக்கக் கூடிய ஈரானுக்கு சொந்தமான ஹோர்முஸ் ஜலசந்தியை மூடப்போவதாக ஈரான் அறிவித்தது. இதற்கான சட்டம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.
ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுவதில் ஈரான் உறுதியாக இருப்பதைத் தொடர்ந்து கூடுதல் படைகளை வளைகுடா நாடுகளில் அமெரிக்கா குவிக்கத் தொடங்கியது. அமெரிக்காவின் நட்பு நாடான இஸ்ரேலும் ஈரான் மீது போருக்குத் தயாராகி வருகிறது.
இந்நிலையில் ஈரான் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.ஷகாப் 1,2,4 போன்ற ஏவுகணைகளை எதிரிகளின் இலக்குகளை துல்லியமாக சென்று தாக்கும் வகையில் தொடர்சியாக சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. பியாம்பர்- இ- ஆசாம் என்ற பெயரில் குறுகிய, நடுத்தர, நீண்ட தொலைவு ஏவுகணைகளை மத்திய ஈரான் பகுதியில் இருந்து நான்குபுறம் கற்பனையான எதிரி இலக்கை நிர்ணயித்து அதன் மீது ஏவி சோதனைகளை நடத்துவது அப்பிராந்தியத்தில் கூடுதல் பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: