வடக்கு தாய்வான் நாட்டில் உள்ள தாயுவான் சர்வதேச விமான நிலையத்திலும் அந்நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இவா ஏர்லைன்ஸ் விமானத்திலும் ஜப்பான் காமிக்ஸ் நிறுவனமான சான்ரியோவின் ஒத்துழைப்புடன் Hello kitty கார்டூன்கள் வரையப்பட்டுள்ளன. ![]() அதாவது விமானத்தின் முகப்பு, அமர்ந்து செல்லும் இருக்கைகள், உணவு வகைகள் என அனைத்திலும் Hello kitty-ன் கார்டூன்களின் வடிவமைப்பாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் தாய்வான் சர்வதேச விமான நிலையத்தில் விமான பயணச்சீட்டு பரிசோதனை செய்யும் கவுண்டர்கள், விமான பயணச்சீட்டு என அனைத்தும் Hello kitty வடிவமைப்பையும், நிறத்தையும் பெற்று காட்சி அளிக்கிறது. தற்போது Hello kitty கார்டூன்கள் வரையப்பட்ட மூன்று விமானங்கள் உள்ளூர் நகரங்களில் பயணம் செய்கின்றன. ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |









