மாம்பழம் சாப்பிடுபவர்களுக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் மாம்பழ சீசன் துவங்கியுள்ளது. சாலை ஓரக்கடைகளிலும், பழக்கடைகளிலும், பழுத்த மாம்பழங்கள் விற்பனைக்கு வரத் துவங்கியுள்ளன. குவியல் குவியலாக அடுக்கி வைக்கபட்டிருக்கும் மஞ்சள் நிறத்தில் உள்ள இந்த பழுத்த மாம்பழங்களால் சாப்பிடுவோருக்கு ஒரு பெரும் ஆபத்து காத்திருக்கிறது.



விவசாயத்தை பிரதானமாக கொண்ட சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோட்ட பணப்பயிர்களில் அதிக அளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதிகளில் மொத்தம் ஒரு இலட்சம் ஹெக்டேரில் “மா” சாகுபடி செய்யப்படுகிறது.
“மா” உற்பத்தியை பொறுத்த வரையில் ஓராண்டில் விளைச்சல் நன்றாக உள்ளது என்றால், அடுத்தாண்டு சுமார் மகசூல் என்ற நிலையில் தான் இருக்கும். கடந்தாண்டு நல்ல உற்பத்தி கிடைத்த நிலையில், இந்தாண்டு “மா”  விவசாயிகள் எதிர்பார்த்த அளவுக்கு மகசூல் “கை” கொடுக்காத நிலை ஏற்பட்டுள்ளது

மேலும், இந்தாண்டு ஏற்பட்ட பருவ நிலை மாற்றம் கோடை காலத்தில் பெய்ய வேண்டிய மழை தவறியது உள்ளிட்ட காரணங்களால் எதிர்பார்த்த அளவுக்கு மகசூல் கைகொடுக்காத நிலை ஏற்பட்டுள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தற்போது, முன் பருவ ரகங்களான செந்தூரா, பெங்களூரா உள்ளிட்ட சில இரகங்கள் இப்போது விற்பனைக்கு வரத்துவங்கியுள்ளது

உற்பத்தி குறைவு காரணமாக சந்தையில் முன் பருவ ரக மாம்பழங்களுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. செந்தூரா, ருமானி ஆகிய ரக மாம்பழங்கள் தற்போது கிலோ 40 ரூபாய் முதல் 65,  ரூபாய் வரை விற்பனைக்கு செய்யப்படுகிறது.

ஆரம்பத்தில், நல்ல விலை இருப்பதால், விவசாயிகளின் தோப்புகளை குத்தகைக்கு எடுத்துள்ள வியாபாரிகள் நல்ல விலை கிடைக்கும் போதே விற்பனை செய்யவேண்டும் என்ற ஆர்வத்தில் சரியான பருவம் இல்லாத காய்களையும் பறித்து சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு கொண்டு வரப்படும் மாங்காய்கள் பழுக்க வைத்து விற்பனை செய்ய வியாபாரிகள்  கடந்த காலங்களில் காற்றுப்புகாத இருட்டறையில் காய்ந்த வைக்கோல் பரப்பி அவற்றில் மேல் மாங்காய்களை குவித்து வைத்து பழுக்க வைத்தனர். இப்படி முறையாக பழுக்க வைக்கும் போது மூன்று அல்லது நான்கு நாட்கள் ஆகும்.

ஆனால், இப்போது மாங்காய்களை உடனடியாக பழுக்க வைக்க  “கார்பைடு கல்”களை கொண்டு  மாங்காய்களை பழுக்க வைக்கின்றனர். இந்த வகையில் பழுக்க வைக்கப்படும் காய்கள் ஒரு இரவில் பழுத்து விடுவதோடு, குடோனில் வைத்திருக்கும் அத்துணை காய்களும் ஒரே மாதிரி மஞ்சள் நிறத்தில் பளுத்துவிடும்.

கண்ணில் பார்த்தவுடன் மாம்பழத்தை வாங்க வேண்டும் என்ற எண்ணம மக்களுக்கு வரும் வகையில் நிறம் மாறி விடுவதால், இந்த முறையை பயன்படுத்திதான் இப்போது  வியாபாரிகள் மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

செயற்கை முறையில் கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் சாப்பிட ருசியாக இருந்தாலும், உண்போருக்கு பல்வேறு வயிற்று தொல்லைகளை கொடுக்கும். அஜீரண கோளாறு, வயிற்று போக்கு, வயிற்று வலி உள்ளிட்டவைகள் வரும். காலப்போக்கில் வயிற்றில் அல்சர் ஏற்ப்படும், மேலும், பல்வேறு உடல் உபாதைகள் நாம் சாப்பிடும் மாம்பழத்தின் அளவை பொறுத்து பாதிப்பின் விளைவுகளும் இருக்கும்.

தற்போது, சந்தையில் விற்பனைக்கு வரும் மாம்பழங்கள் பெரும்பாலும் “கார்ஃபைடு கல்” மூலம் பழுக்க வைக்கபப்பட்ட மாம்பழங்கள் தான் விற்பனைக்கு வருகிறது. இவற்றை நகராட்சி மற்றும் மாநகராட்சி சுகாதார துறை அலுவலர்கள், உணவு ஆய்வாளர்கள் இது குறித்து முறையாக ஆய்வு செய்து, கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்படும் பழங்கள் விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும்.
இவர்கள் பழ வியாபாரிகள் பழங்களை பழுக்க வைக்கும் முறை குறித்து அடிக்கடி ஆய்வு செய்து செயற்கை முறையில் பழம் பழுக்க வைக்கப்பதை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கிறார்கள்..

நல்ல பழங்களை எப்படி கண்டுபிடிப்பது என்ற வேளாண்மைத்துறை அதிகாரிகளை கேட்டால், விளாம்பழம், கொய்யா, மாதுளை, பலா மற்றும் சீத்தா ஆகிய ஐந்து பழவகைகள் மட்டுமே கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்க முடியாது. மற்றபடி எல்லா பழங்களையும் இப்படித்தான் பழுக்க வைக்கின்றனர். இதை சாப்பிடும் போது நமது உடலுக்கு சத்து கிடைக்காது, வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளால் நமது உடலில் இருக்கும் சத்துக்களை குறைத்துவிடும் என்பதுதான் உண்மை. 

மேலே, சொல்லப்பட ஐந்து பழவகை தவிர வாழைப்பழம் உட்பட அனைத்து பழங்களையும் குறிப்பாக நன்றாக பழுத்த பழங்களை வாங்கவேண்டாம், காயாக வாங்கிகொண்டு போய் உங்கள் வீட்டில் பழுக்க வைத்து உண்பதுதான் நல்லது என்கின்றனர். 

கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கப்படும் பழங்களை ஈக்கள் மொய்க்காது. இயற்கையான முறையில் பழுத்த பழங்களை ஈக்கள் மொய்க்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: