பாராசூட் இல்லாமல் 2,400 அடி உயரத்தில் இருந்து குதித்து சாதனை


இங்கிலாந்தின் தேம்ஸ் ஆற்றங்கரைப் பகுதியில் உள்ள ஹென்லே என்ற இடத்தில் கேரி கானரி(வயது 41) என்ற நபர் ஹெலிகொப்டரில் இருந்து பாராசூட் இல்லாமல் குதித்து சாதனை படைத்துள்ளார்.
குதிக்கும் போது இவர், காற்றின் வேகத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் விசேஷ உடை அணிந்து இருந்தார். கீழே விழுந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க தரையில் 18,000 அட்டை பெட்டிகளை அடுக்கி வைத்து இருந்தனர்.
ஹெலிகொப்டரில் சென்ற கேரி கானரி மணிக்கு 130 கி.மீ வேகத்தில் பறந்த போது, 2,400 அடி உயரத்தில் இருந்து பாராசூட் இல்லாமல் கீழே குதித்தார். இதன் பின் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அட்டைப் பெட்டிகளில் துல்லியமாக விழுந்ததால், உலக சாதனை படைத்தார்.
இந்த சாதனையை பார்க்க ஏராளமான மக்கள் கூடி இருந்தனர். கேரி கானரி குதித்ததும் அவர்கள் கை தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். சாதனையை நேரில் பார்க்க மனைவி விவென்னியும் வந்திருந்தார்.
இதுகுறித்து கேரி கானரி கூறுகையில், ஆகாயத்தில் இருந்து பாராசூட்டில் குதிப்பது என்பது நான் நினைத்துப் பார்க்காத சாதனை. தரையில் குதிக்கும் போது புதுவித அனுபவமாக இருந்தது. எனது கணிப்புகள் துல்லியமாக இருந்தது என்றார்.
இந்த சாதனைக்காக கேரி கானரி சுவிட்சர்லாந்தில் ஒரு வாரம் பாராசூட்டுக்கு பதில் ஸ்விங் சூட் என்ற நவீன ஆடையை பயன்படுத்தி மலைகளில் பயிற்சியில் ஈடுபட்டார். ஏற்கனவே இவர் தனது 23 வயதில் பாரிஸ் ஈபிள் டவர், லண்டன் ஐ ஆகிய கட்டிடங்களில் இருந்து பாராசூட்டில் குதித்து சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: