ஓமனில் அதிகரிக்கும் இந்தியர்கள் தற்கொலை எண்ணிக்கை

துபாய்: ஓமன் நாட்டில் பல்வேறு குடும்ப பிரச்னை, நிதி நெருக்கடி காரணமாக ஆறு நாட்களுக்கு ஒரு இந்தியர் தற்கொலை செய்து கொள்ளவதாக அந்நாட்டு அதிகாரப்பூர்வமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்நாட்டில் இந்தியர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருவதால் , இந்திய தூதரகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து தடுத்து உதவ வேண்டும் என அங்குள்ள மக்கள் நல அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. வளைகுடா நாடான ஓமன் நாட்டின் பல்வேறு மாகாணங்களில் இந்தியர்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இது தொடர்பாக தலைநகர் மஸ்கட் நகரில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 2010-ம் ஆண்டு 50 இந்தியர்களும், கடந்த 2011-ம் ஆண்டு 54 இந்தியர்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இதே போன்று கடந்த வாரம் ரூவி மாகாணத்தில் மூன்று குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அது மட்டுமின்றி இந்தாண்டு (2012) ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையி்ல் 23 இந்தியர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதன் மூலம் ஆறு நாட்களுக்கு ஒரு இந்தியர் தற்கொலை செய்து கொள்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

தற்‌கொலைக்கு காரணம்: இவர்களில் சிலர் தனிக்குடித்தனமாக வாழ்கின்றனர். இதனால் குடும்ப பிரச்னை , பணிச்சுமை மற்றும் நிதி நெருக்கடி போன்ற காரணங்களாலும் அதனை சமாளிக்க , அங்கு தனியாரிடம் கடன் வாங்குகின்றனர். கடனை திருப்பி கொடுக்க வேண்டும் என்பதால் நேரங்காலம் தெரியாமல் உழைக்கின்றனர். இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 

இதுகுறித்து ஓமனில் உள்ள இந்திய சமூக நல கிளப் அமைப்பின் செயலர் பி.எம். ஜபீர் கூறியதாவது: ஓமனில் பல்வேறு சமூக சேவை அமைப்புகள் உள்ளன. இவை இந்தியர்களின் தற்கொலை எண்ணிக்கையை தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. எனினும் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

குடும்பத்திலிருந்து பிரிந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்து வாழ்க்கையி்ல் நம்பிக்கையை இழந்து மன அழுத்தத்திற்கு ஆளானவர்கள் தான் பெருமளவு தற்கொலை செய்கின்றனர் என்றார். இதற்கிடையே இந்திய தூதரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், இது போன்று மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: