திருமண நிகழ்ச்சியில் நடனமாடிய பெண்களுக்கு பாகிஸ்தானில் மரண தண்டனை .பூ போ போ போ 

திருமண நிகழ்ச்சியில் ஆடிப் பாடியதற்காக 4 பெண்கள், 2 ஆண்களுக்கு வடக்கு பாகிஸ்தானில் உள்ள பழங்குடியின கவுன்சில் ஒன்று மரண தண்டனை விதித்துள்ளது.
கைபர்- பக்துன்குவா மாகாணத்தில் உள்ள ஹசாரா பகுதியில் 2 மாதங்களுக்கு முன்பு நடந்த திருமணம் ஒன்றில் அவர்கள் ஆடிப்பாடியுள்ளனர். அதை விருந்தினர் ஒருவர் கைபேசியில் வீடியோ பதிவு செய்துள்ளார். பிறகு அந்த வீடியோ அந்தப் பெண்களின் குடும்பத்தினருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதையடுத்து ஒரு மாதத்துக்கு முன்பாக கிராமப் பெரியவர்களை உள்ளடக்கிய கவுன்சில் கூட்டப்பட்டது. இருபாலரையும் பிரித்து வைத்தே பார்க்கும் இஸ்லாமிய மற்றும் பழங்குடியின விதிகளுக்கு இது முரணானதாக உள்ளதால் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
4 பெண்களில் இருவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளன. பழங்குடியின கவுன்சில் கூடுவதற்கு முன்பாகவே சம்பந்தப்பட்ட 2 ஆண்களும் ஊரிலிருந்து தப்பி விட்டனர்.
எனவே அந்த 4 பெண்களை சீர்டெய் கிராமத்தில் அறை ஒன்றில் கட்டி வைத்து பட்டினி போட்டு வருகின்றனர்.
அவர்களை துஷ்டர்களாக கவுன்சில் அறிவித்துள்ளது. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் கொல்லப்படுவார்கள் என்று தப்பியோடிய சம்பந்தப்பட்ட ஆண்களின் அண்ணன் முகமது அப்சல் தெரிவித்துள்ளார்.
6 பேரையும் கொல்வதற்கு கவுன்சில் 40 பேரை நியமித்துள்ளது. கவுன்சிலின் தீர்ப்புப்படி ஆண்கள்தான் முதலில் கொல்லப்பட வேண்டும்.
அந்த வீடியோ போலியானது என்று அப்சல் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக பழங்குடியின பெரியோர்களுடன் பேசியுள்ளதாகவும், அனைத்து வகையிலும் போராடி மரண தண்டனையை தடுப்பதாகவும் மாவட்ட  போலிஸ் தலைவர் அப்துல் மஜீத் அஃப்ரிதி தெரிவித்தார்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: