சத்தான காய்கறி இட்லி!

Vegetable Dall Idly  அரிசி, உளுந்து சேர்த்து செய்யும் இட்லி பெரும்பாலான வீடுகளில் செய்வதுதான். ஆனால் பரும்பும், காய்கறிகளும் சேர்த்து ஊட்டச்சத்து மிக்க இட்லி செய்யலாம். சத்தோடு சுவையும் சூப்பராக இருக்கும்.

தேவையானப்பொருட்கள்:

பாசிப் பருப்பு - 1/2 கப்

உளுத்தம் பருப்பு - 1/2 கப்

ரவை - 1 கப்

இஞ்சி - ஒரு சிறிய துண்டு

பச்சை மிளகாய் - 3 அல்லது 4

பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்

நெய் - 1 டீஸ்பூன்

கேரட் – 1

வேகவைத்த பச்சை பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன்

உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

இட்லி செய்முறை

பாசிப் பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டையும் 4 அல்லது 5 மணி நேரம் ஊறவைக்கவும். பருப்பு ஊறியவுடன், தண்ணீரை வடித்து விட்டு, அத்துடன் பச்சைமிளகாய், இஞ்சி, பெருங்காயம் சேர்த்து நன்றாக அரைத்தெடுக்கவும் காரட்டை பொடியாக துருவிக்கொள்ளவும், ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவுடன் ரவை, துருவிய காரட், வேகவைத்த பட்டாணி ஆகியவற்றை ஒன்றாகப் போட்டு, உப்பையும் சேர்த்துக் கலக்கவும். இதோடு சிறிது தயிர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும். இட்லி தட்டில் சிறிது நெய்யைத் தடவி, அதில் இட்லி மாவை விட்டு, பத்து நிமிடங்கள் இட்லி பானையில் வைத்து வேக விடவும். கலர் கலராய், சத்துள்ள இட்லி தயார்.

இந்த மாவில் காளான் மற்றும் முந்திரியையும் சேர்க்கலாம். சிறிது சோடா உப்பைச் சேர்த்தால் இட்லி மிருதுவாக இருக்கும். குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவு.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: