3வது முறையாக அதிபரானார் புடின்- ஸ்டாலின் சாதனையை முறியடிப்பாரா?

 For Third Time Putin Returns As Russia Resident  மாஸ்கோ: ரஷ்யாவின் அதிபராக 3வது முறையாக பதவியேற்றுக் கொண்டார் விலாடிமிர் புடின்.

ஏற்கனவே இரண்டு முறை தொடர்ச்சியாக அதிபராக இருந்த அவர், பின்னர் சட்ட விதிப்படி தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவிக்கு வர முடியாது என்பதால் இடையில் சில காலம் பிரதமராக இருந்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற புடின் நேற்று அதிபராக பதவியேற்றுக் கொண்டார்.

கிரம்ளின் நகரில் உள்ள புனித ஆண்ட்ரூ அரங்கில் பதவியேற்பு விழாவை எளிமையாக நடத்தி அதில் புடின் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

அவருக்கு பதவியிலிருந்து ஓய்வு பெற்ற அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

அதிபர் பதவியை ஏற்றுக் கொண்ட பின்னர் பேசிய புடின் வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே பேசினார். புடின் உரையாற்றுகையில், புதிய திட்டங்களை வகுத்து தேசிய அளவிலான முன்னேற்றத்துக்கு வழிவகுக்க வேண்டிய நேரமிது. கடந்த காலங்களில் நீடித்து வந்த ரஷியாவின் மோசமான சூழ்நிலை இனி மாற்றியமைக்கப்படும்.

நவீனமயமாக்கலின் மூலம் ரஷியாவின் மாற்றத்துக்கு ஒரு தூண்டுதலை மெத்வதேவ் ஏற்படுத்தியுள்ளார். அந்த மாறுதல் இனிமேலும் தொடரும். எனது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் எனது வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்துள்ளதாகவே நான் கருதுகிறேன். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து ரஷியாவின் ஜனநாயகம் மற்றும் அரசியல் உரிமைகளை மேலும் வலிமைப்படுத்த வேண்டும் என்றார்.

புடின் பதவியேற்பு விழாவில் சோவியத் யூனியனின் கடைசி அதிபரான மிகயீல் கார்ப்பசேவ், செக்ஸ் கோல்மால்களில் சிக்கிப் பதவியிழந்தவரான முன்னாள் இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

புடினின் நம்பிக்கையைப் பெற்று கடந்த நான்கு ஆண்டுகளாக அதிபராக செயல்பட்டு வந்த மெத்வதேவ், பிரதமர் பதவியில் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக ரஷ்ய அதிபர் தேர்தலில் நடந்த முறைகேடுகளைக் கண்டித்து ஆயிரக்கணக்கானோர் மாஸ்கோ நகரில் போராட்டம் நடத்தி பேரணி நடத்தினர்.

6 ஆண்டு பதவிக்காலம்

ரஷ்ய அதிபர் பதவிக்காலம் தற்போது ஆறு ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே 2018ம் ஆண்டு வரை புடின் இப்பதவியில் இருப்பார். அதற்குப் பிறகும் கூட அவர் மீண்டும் அதிபர் பதவிக்குப் போட்டியிடுவார் என்று கருதப்படுகிறது.

அப்படிச் செய்தால் கிட்டத்தட்ட 20 ஆண்டு காலம் (ஏற்கனவே 8 வருடம் பதவியில் இருந்துள்ளார் புடின். தற்போது 6 வருடம் இருக்கப் போகிறார், அடுத்த ஆறு வருடத்தையும் சேர்த்தால், 20 ஆண்டுகளாக வரும்) அதிபர் பதவியில் இருந்த பெருமை புடினுக்குக் கிடைக்கும். இதன் மூலம் ரஷ்ய அதிபர் பதவியில் நீண்டகாலம் இருந்தவர் என்ற பெயரும் புடினுக்குக் கிடைக்கும். இதற்கு முன்பு ஸடாலின்தான் அதிக காலம் அதிபர் பதவியில் இருந்துள்ளார். அதை புடின் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: