விண்வெளியில் பூமியைப் போன்ற கிரகங்கள் கண்டுபிடிப்பு


விண்வெளியில் நட்சத்திரங்களை போன்று ஏராளமான கிரகங்கள் காணப்படுகின்றன. அந்த கிரகங்கள் பூமியை போன்ற அமைப்பும், தோற்றமும் கொண்டதாக இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விண்வெளி விஞ்ஞானி ஆதித்யா சோப்ரா தலைமையிலான குழுவினர் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அந்த ஆய்வில், பூமியை போன்றுள்ள கிரகங்கள் மனிதர்கள் வாழ தகுதியுள்ளவையாக இருக்கின்றன. அங்கு திரவ நிலையில் தண்ணீர் மற்றும் சீரான தட்பவெப்ப நிலை போன்றவை இருப்பது தெரியவந்துள்ளது.
பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இந்த கிரகங்களில் மனிதர்கள் மற்றும் உயிரினங்கள் வாழக்கூடிய தகுதி இருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: