அரியானாவில் பெண்கள் ஜீன்ஸ் அணிய தடை

 சண்டிகர் : அலுவலகங்களில் பணியாற்றும் பெண்கள் நாகரீகமான உடைகளே மட்டுமே அணிய வேண்டும் எனவும், ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் போன்ற அநாகரீகமான உடைகளை அணிய கூடாது என அரியானா மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஏப்ரல் 18ம் தேதி பெண்கள் மற்றும் குழந்தைகள் நல இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அந்த அறிக்கையில், புடவை, துப்பட்டா உடனான சல்வார் கமீஸ் மட்டுமே பெண்களுக்கான உடை எனவும், பேன்ட் ஷர்ட் என்பது ஆண்களுக்கான உடை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் ஆகியன அநாகரீகமான உடை என அரியானா அரசு தெரிவித்துள்ளது அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சமூகநலத்துறை அமைச்சர் கீதா புக்கல், நீதிபதிகள்,டாக்டர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரை போன்று சராசரி பெண்களும் குறிப்பிட்ட ஆடைகளை மடடுமே அணி வேண்டும் என்பது சரியானதல்ல எனவும், இதை அநாகரீகம் என கூறுவது முறையானதல்ல எனவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாப்பதற்காகதானே தவிர அது அவர்களை கட்டுப்படுத்தி இயக்குவதற்கு அல்ல எனவும் தெரிவித்துள்ளார். 
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: