ஒசாமா கொல்லப்பட்ட இடத்தில் அதிசய நீரூற்று?

 Osama Keeps An Eye On Earth From Hell  இஸ்லாமாபாத்: அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்ட அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் நரகத்தில் இருந்து டுவிட்டரில் செய்தி மேல் செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா... எல்லாம் ஒசாமா பெயரில் வெளியிடப்படும் டுவிட்டர்கள்தான்.

அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டு ஓராண்டு ஆகி விட்டது. அவர் கொல்லப்பட்ட உடனேயே பல டுவிட்டர் அக்கௌண்டுகள் அவரது பெயரில் போலியாக துவங்கப்பட்டன. அவற்றில் இருந்து ஒசாமா பேசுவது போன்ற பல தகவல் வெளி வந்து கொண்டிருக்கின்றன.

ஒசாமா பெயரில் வலம் வரும் டுவிட்டர் கூத்துகளிலிருந்து சில துளிகள்...

- என் மனைவி ஏபிசி நியூஸிடம் பேசுகிறார். அவர் ஜன்னல் வழியாக வெளியே பார்க்கலாமா என்று என்னிடம் அனுமதி கேட்டதைவிட இது அவமதிக்கும் செயலாகும்.

- ஹாட் சாக்கலேட் குடிப்பது ஹராமாகும்.

- நான் இறந்தது போன்று பொய்யான தகவல் பரப்பியுள்ளேன். ஆனால் நான் இன்னும் உயிருடன் தான் இருக்கிறேன். தற்போது உலகை சுற்றிப்பார்த்துக் கொண்டிருக்கிறேன். யார் கண்டது நான் உங்கள் ஊருக்கு கூட வரலாம். அருகில் உள்ள அல் கொய்தா கிளையைத் தொடர்பு கொண்டு தகவல் பெற்றுக் கொள்ளுங்கள்.

- நான் அல் கொய்தா தலைவராக இருந்தேன். தற்போது உயிருடன் இல்லை. என்னை நரகத்தில் வந்து பார்க்கலாம். நான் தான் தலைசிறந்த தீவிரவாதியாக இருந்தேன். கண்ணாமூச்சி ஆட்டத்தில் நான் தான் பெஸ்ட்.

- நான் இறந்திருக்கலாம் ஆனால் வாழ்க்கை தொடரத் தான் செய்யும். உலகில் 71 சதவீதம் கடல். அதனால் நான் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்.

- இதென்ன மே 1ல் ஒபாமா சர்பிரைஸ் விசிட்?

இதற்கெல்லாம் மேலாக ஒரு டுபாக்கூர் வெப்சைட் ஒசாமாவின் பேட்டியை வெளியிட்டுள்ளது. அதில் ஒசாமா அளித்த பேட்டி வருமாறு,

சொர்க்கத்தில் மட்டன் டிக்கா மசாலா கூட கிடைக்காததால் அங்குள்ளவர்கள் நரகத்திற்கு வர விரும்புகிறார்கள். நரகம் ரொம்ப ஜாலியாக இருக்கிறது. இங்கு உள்ள ஸ்டாலின், ஹிட்லர் எனது நண்பர்கள்.

நான் பூமியில் இருக்கும்போதே ஸ்டாலினை சந்தித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அடால்ப் ஹிட்லரும் நல்லவர் தான் ஆனால் கொஞ்சம் வளைந்து கொடுக்காதவர் என்றார்.

பின் லேடனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மக்கள் அவர் கொல்லப்பட்ட அப்போத்தாபாத் வீட்டிற்கு விசிட் அடித்தனர். மேலும் அந்த இடத்தில் மோட்டார் இன்றி நீரூற்று போல் தண்ணீர் வருகிறது என்றும் தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது.

நீரூற்றுக்கு உடைந்த பைப் காரணமாக இருக்கலாம். ஆனால் அந்த இடத்தில் அப்பாவிகள் கொல்லப்பட்டதால் தான் ஊற்று வந்துள்ளது என்று பலர் நம்புகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: