இதனால் தலைவலி, சிறுநீரக கோளாறு உள்ளிட்ட உடல் பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே மது வகைகளை குடிக்காமல் ஸ்பிரே மூலம் போதை ஏற்படுத்தும் திரவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆல்கஹாலினால் தயாரிக்கப்பட்டுள்ள இதற்கு டபிள்யூ.ஏ.-எச்.எச். என பெயரிடப்பட்டுள்ளது. இதை ஸ்பிரே மூலம் மூக்கில் செலுத்தினால் போதும் சில வினாடிகளில் போதை தலைக்கேறும். மது குடித்தது போன்று கிறு கிறுப்பு மற்றும் போதை ஏற்படும். இதில் மது வகைகளை விட மிக குறைந்த அளவில் ஆல்கஹால் கலக்கப்பட்டுள்ளது. எனவே இது உடல் நலத்துக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாது என ஆய்வு மேற்கொண்ட டேவிட் எட்வர்ட்ஸ் மற்றும் பிலிப் ஸ்டார்க் தெரிவித்துள்ளனர். ![]() ![]() ![]() |



