உலகில் மிகப்பெரிய பெயரைக் கொண்ட பெண்


உலகில் மிக நீளமான பெயரைக் கொண்டமைக்கான உலக சாதனையை இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் முறியடித்துள்ளார். அறக்கட்டளையொன்றை நடாத்திவரும் இங்கிலாந்தின் ஹார்ட்டில்பூல் என்ற பிரதேசத்தைச் சேர்ந்த பெண்மணியே இந்தச் சாதனையைப் படைத்துள்ளார். 41 வயதான இந்தப் பெண்மணி முன்னர் டோண் மக்மனஸ் என அழைக்கப்பட்ட போதிலும், அறக்கட்டளையொன்றிற்காக தனது பெயரை மாற்றிக் கொண்டுள்ளார். அவ்வாறு மாற்றிக்கொள்ளும் போது உலக சாதனையும் அவர் வசம் கிடைத்துள்ளது.

மரணமடைந்த தனது மகன் கைல் என்பவரின் ஞாபகார்த்தமாக சிறுவர்களுக்கான அறக்கட்டளையான "ரெட் றீம்ஸ்" என்ற அறக்கட்டளையை நிறுவிய அவர், அவ்வறக்கட்டளைக்காகவே தனது பெயரை மாற்றிக்கொண்டுள்ளார்.

தங்களின் இலக்கை குறித்த அறக்கட்டளை அடைய ஏனையவர்களை தங்களுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்த அப்பெண்மணி, தங்கள் இலக்கை அடைந்தால் 2008ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை அவ்வறக்கட்டளை உதவியுள்ள அனைவரினதும் பெயரை தனது பெயராக மாற்றிக்கொள்வதாக அறிவித்துள்ளார். இதன்படி ரெட் - வக்கி லீக் - அன்ட்லெஸ் - புறோக் த ஸ்ட்ரீயோ - நியோன் ரைட் - பிறிங் பக் ஹொணஸ்ரி - கோலிஷன் - ஃபீட்பக் - ஹான்ட் ஒஃவ் ஏசஸ் - கீப் கோயிங் கப்டன் - லெற்ஸ் பிறிட்டென்ட் - லொஸ்ட் ஸ்ரேட் ஒஃவ் டான்ஸ் - பேப்பர் ரக்ஸிஸ் - லூனர் ரோட் - அப் டளெண் ஸ்ரேஞ் - ஓல் அன்ட் ஐ - நியோன் ஸீப் - ஈவ் ஹோர்ண்பி - ஃபயே பிரட்லே - ஏ.ஜே.வில்ட்டே - மைக்கல் ரைஸ் - டியன் வற்ஸ் - மத்தியூ அப்பிள்யார்ட் - ஜோன் அஷர்ஸ்ட் - லோரன் ஸ்வேல்ஸ் - ஷோ அங்கஸ் - ஜஸ்பிறீட் சிங் - எம்மா மத்தியூஸ் - நிக்கொலோ பிறௌண் - லியன்னே பிக்கரிங் - விக்டோரியா டேவிஸ் - ராச்சல் பேர்ண்சைட் - கில் பார்க்கர் - ஃபிறேயா வொற்சன் - அலிஸ்ஸா வற்ஸ் - ஜேம்ஸ் பியர்சன் - ஜேக்கப் சொதேர்ண் - டார்லி - பெத் லோவ்றி - ஜஸ்மின் ஹெவிற் - குலோ கிப்ஸன் - மொல்லி ஃபார்குவர் - லூயிஸ் மேர்ப்பி - அபி கோல்ஸன் - நிக் டேவிஸ் - ஹார்வே பாக்கர் - கிறயன் வில்லியம்ஸன் - மைக்கல் அன்டர்சன் - பெத்தனி முர்ரே - சோஃபி ஹமில்ட்டன் - அமி வில்க்கின்ஸ் - எம்மா சிம்ப்ஸன் - லியம் வேல்ஸ் - ஜேக்கப் பர்ட்ரம் - அலெக்ஸ் ஹூக்ஸ் - ரொபெக்கா மில்லர் - கய்ட்லின் மில்லர் - சியன் மக்குளொஸ்கி - டொமினிக் பார்க்கர் - அபே ஷார்ப்பே - எலினா லார்க்கின் - ரொபெக்கா சிம்ப்ஸன் - நிக் டிக்ஸன் - அப்பி ஃபரல்லி - லியம் கிறீவ்ஸ் - காசே ஸ்மித் - லியம் டௌணிங் - பென் விக்னல் - எலிஸபெத் ஹன் - டானியல்லே வோர்க்கர் - லோரன் கிளென் - ஜேம்ஸ் ஜோன்சன் - பென் ஏர்வின் - கேற் பேர்ட்டன் - ஜேம்ஸ் ஹட்சன் - டானியல் மேயெஸ் - மத்தியூ கிற்சிங் - ஜோஸ் பென்னட் - எவாலுஸன் - ட்ரீம்ஸ் என்ற பெயரையே அவர் தனது பெயராகக் கொண்டுள்ளார்
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: