புதுடில்லி: ராஜிவ் கொலையாளிகள் 3 பேர் தாக்கல் செய்துள்ள மனு சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டுள்ளது. கொலையாளிகள் 3 பேர் தங்களுக்குரிய தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு தொடர்பான இறுதி முடிவை இனி சுப்ரீம் கோர்ட்தான் அறிவிக்கும். இதனால் தூக்கு நிறைவேற்றுவதா வேண்டாமா என்பதில் விரைவில் தீர்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.கட்ந்த 1991 ல் ராஜிவ் சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூர் அருகே புலிகளால் மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார். இந்த கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு இவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் புலி ஆதரவு அமைப்புகள் இதற்கு கண்டனம் தெரிவித்தன. மேலும் தூக்கு தண்டனையை குறைக்க கூடாது என்று ஒரு தரப்பினரும் வேண்டினர். இதற்கிடையில் நாங்கள் சிறையில் கூடுதல் காலம் அனுபவித்து விட்டோம். எனவே எங்களின் தூக்கு தண்டøனையை குறைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு தற்போது விசாரணையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் இவர்களின் தண்டனையை குறைக்க கூடாது என்றும், இந்த வழக்கு நடத்தும் சூழலுக்கு தமிழகம் ஏற்றதல்ல. இதனால் தமிழகத்தில் இல்லாமல் வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் காங்., கட்சியில் மூப்பனார் பேரவையை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சிங்வி மற்றும், முகோபாத்யாய நீதிபதிகளை கொண்ட பெஞ்ச்., இன்று முக்கிய உத்தரவை பிறப்பித்தது. இதன்படி இந்த கொலையாளிகள் மனுவை இனி சுப்ரீம் கோர்ட்டே விசாரிக்கும். இந்த மனுவை வரும் ஜூலை 10 ம்தேதி விசாரணை துவங்கும் என்றும் நீதிபதிகள் கூறினர்.
1991 ல் நடந்த ராஜிவ் கொலை வழக்கில் 1999 ல் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி ஆகியோருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. பின்னர் இந்த தூக்கு சுப்ரீம் கோர்ட்டில் உறுதி செய்யப்பட்டது. நளினியி்ன் தூக்கு ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. ஜனாதிபதி கருணை மனுவும் தள்ளுபடி செய்தது.