மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக செக்ஸ் புகழ் நித்யானந்தா அண்மையில் நியமிக்கப்பட்டார். இதற்கு தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இந்து அமைப்புகள் எதிர்த்து வருகின்றன.
இந்த நிலையில் மதுரை ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டதற்கு ஜெயேந்திரர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இதனிடையே இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மதுரை ஆதீனம், ஜெயேந்திரருக்கு கண்டனம் தெரிவித்ததோடு, புதிய ஆதீனத்தை நியமிப்பது என்னுடைய உரிமை; இதை யாரும் விமர்சிக்க முடியாது, இது குறித்த ஜெயேந்திரரின் கருத்துக்கள் கண்டிக்கத்தக்கது என்றார்.
இதேபோல் நித்யானந்தாவும் ஜெயேந்திரருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். யாரோ சொல்வதைக் கேட்டு ஜெயேந்திரர் கருத்து கூறியிருக்கிறார். ரஞ்சிதா குறித்து தெரிவித்த கருத்துக்களை அவர் 10 நாட்களுக்குள் வாபஸ் பெற வேண்டும் என்று கூறியுள்ளார் நித்யானந்தா.
என்னைப் புரிந்து கொண்டவர்கள் என்னை ஆதரிக்கிறார்கள், காசு கொடுத்து ஆதரவாளர்களைத் திரட்டும் அவசியம் எனக்கில்லை என்று நித்யானந்தா கூறினார்.