இந்தியாவைச் சேர்ந்த Ram Singh Chauhan என்பவரே உலகின் மிக நீண்ட மீசைக்கு சொந்தக்காரர். இவரது மீசையின் நீளம் 14 அடிகளாகும். 54 வயதான Ram Singh Chauhan, ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் ஒன்றிலும், சில பாலிவுட் திரைப்படங்களிலும் தோன்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 1983 ஆம் ஆண்டில் வெளியான Octopussy என்ற ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார். மீசை வளர்க்க வேண்டுமாயின் இள வயதிலேயே அதனை ஆரம்பிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். இள வயதில் அதிகளவில் ஹோர்மோன் சுரக்கும் என்றும், காலப் போக்கில் ஹோர்மோன் சுரக்கும் அளவில் வீழ்ச்சி ஏற்படும் என்றும் அவர் கூறினார். தேங்காய் எண்ணெய் கொண்டு மீசையை பராமரிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அடிக்கடி எண்ணெய் தடவி, பத்து நாட்களுக்கு ஒரு தடவையேனும் மீசையை நன்கு கழுவ வேண்டுமென ராம் குறிப்பிட்டுள்ளார். ![]() ![]() |
உலகின் மிக நீளமான மீசையுடையவரின் ஆலோசனை
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail

