கருணாநிதி பிறந்தநாள்: சென்னை செல்ல அனுமதி கோரி சிபிஐ நீதிமன்றத்தில் கனிமொழி மனு

 Kanimozhi Files Petition Seeking Permission Chennai  டெல்லி: திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த தினத்தையொட்டி சென்னை செல்ல அனுமதி கோரி அக் கட்சியின் எம்பி கனிமொழி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கனிமொழி, அந்த வழக்கு விசாரணைக்காக டெல்லியில் தங்கி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவருடைய தந்தை கருணாநிதியின் பிறந்தநாள் 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை செல்ல அனுமதி கோரி, டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் கனிமொழி மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

டெல்லியில் கனிமொழி-ராசாவுடன் துரைமுருகன் சந்திப்பு:

முன்னதாக முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசாவைத் தமிழக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் டெல்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.

ராசாவின் வீட்டில் சுமார் மூன்று மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி ஜாமீனில் விடுதலையான ராசா, நீதிமன்ற அனுமதியின்றி தமிழகத்துக்குச் செல்லக் கூடாது என்ற நிபந்தனை உள்ளது. இதையடுத்து அவரை தமிழகத்தில் இருந்து செல்லும் நூற்றுக்கணக்கான திமுகவினர் சந்தித்து வருகின்றனர்.

இந் நிலையில் அவரை துரைமுருகன் சந்தித்துப் பேசியுள்ளார். ராசா தமிழகத்துக்கு வர முடியாது என்பதால், அவரிடம் கட்சி விவகாரங்கள் குறித்து பேசுவதற்காக துரைமுருகனை கருணாநிதிஅனுப்பி வைத்ததாகத் தெரிகிறது.

ராசாவை சந்தித்த துரைமுருகன் பின்னர் கனிமொழியையும் சந்தித்துப் பேசினார்.

பெகுரா, பல்வா வெளிநாடு செல்ல அனுமதி:

இதற்கிடையே, 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலாளர் சித்தார்த்த பெகுரா, ஸ்வான் டெலிகாம் அதிபர் ஷாகித் உஸ்மான் பல்வா உள்பட 6 பேர் வெளிநாடு செல்ல டெல்லி சிபிஐ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தண்ணீரில் தரையிரங்கும் விமானம்


பொதுவாக விமானங்கள் அதற்கென்று பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்ட இடத்தில் தான் தரையிறங்கும். ஆனால் இந்த விமானம் சற்று வித்தியாசமாக தண்ணீரில் தரையிறங்குகின்றது.
அதாவது வான்வழி மற்றும் நீரவழி என இரண்டிற்கும் பயன்படும் வகையில் பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த விமானம்.

ஃபஸீஹ் மஹ்மூத் மர்ம காவல் குறித்த விபரங்களை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு !



Fasih Mahmoodபுதுடெல்லி:தீவிரவாத குற்றம் சுமத்தி சவூதி அரேபியாவில் வைத்து சவூதி-இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு மர்மமான முறையில் கஸ்டடியில் வைக்கப்பட்டிருக்கும் பீகாரைச் சார்ந்த இளம் முஸ்லிம் பொறியாளர் ஃபஸீஹ் மஹ்மூத் குறித்த விபரங்களை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக வெள்ளிக்கிழமைக்குள் விளக்கம் அளிக்கக்கோரி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும், வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சவூதி அரேபியாவில் உள்ள ஜுபைலில் தனது வசிப்பிடத்தில் வைத்து இம்மாதம் 13-ஆம் தேதி ஃபஸீஹ் கைது செய்யப்பட்டார். மர்மமான முறையில் கஸ்டடியில் வைக்கப்பட்டுள்ள ஃபஸீஹ் குறித்து எவ்வித தகவலும் இல்லை. இந்நிலையில் ஃபஸீஹ் குறித்த விபரங்களை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி அவரது மனைவி நிகத் பர்வீன் சமர்ப்பித்த மனுவில் நீதிபதிகளான கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஜெ.எஸ்.கெஹர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்தது.
மத்திய அரசுக்கு மட்டுமல்லாமல், டெல்லி, பீகார், கர்நாடகா, மஹாராஷ்ட்ரா ஆகிய மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இம்மனு மீதான விசாரணை நாளை மீண்டும் நடைபெறும். சவூதி அரேபியா அரசின் உதவியுடன் இந்திய உளவுத்துறை கைது செய்த ஃபஸீஹ் எங்கிருக்கிறார் என்பதை குறித்து விளக்கமளிக்க அரசுக்கு உத்தரவிடக்கோரி நிகத்தின் வழக்கறிஞர் நவ்ஷாத் அஹ்மத் கான் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
ஃபஸீஹ் குறித்து விபரங்களை கேட்டு பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளை அணுகிய பொழுதும் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என்று நவ்ஷாத் நீதிமன்றத்தில் கூறினார்.
ஃபஸீஹிற்கு எதிராக உடனடியாக இண்டர்போல் ரெட்கார்னர் நோட்டீஸ் வெளியிட்டு கைது செய்ய முயற்சி நடக்கும் வேளையில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ஃபஸீஹை குறித்து எவ்வித தகவலும் கிடைக்காத சூழலில் சட்ட நடவடிக்கைகளை அவரது உறவினர்கள் தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்து கைது செய்வதற்கான நடவடிக்கையை புலனாய்வுத்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர்.
ஃபஸீஹ் குறித்து விசாரித்து மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் மற்றும் சி.பி.ஐ தலைவர் ஆகியோரை கண்டபொழுதும் எவ்வித தகவலும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று அவர்கள் கூறியதாக நிகத் கூறுகிறார்.
கர்நாடகா மாநிலம் பட்கலில் உள்ள கல்லூரியில் இருந்து பொறியாளர் பட்டத்தை பெற்றதும், பீகாரின் ஒரு குறிப்பிட்ட கிராமத்தைச் சார்ந்தவர் என்பதும் ஒருவரை கைது செய்ய தக்க காரணங்கள் அல்ல. ஃபஸீஹ் மீது சுமத்திய குற்றச்சாட்டை வெளியிடவேண்டும் என்றும், எங்கே காவலில் வைத்துள்ளார்கள் என்பதை நாங்கள் அறிவது எங்களது உரிமை என்றும் நிகத் கூறினார்.
கடந்த சில மாதங்களாக பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் பர்ஸமைலா கிராமத்தில் இருந்து தீவிரவாத குற்றம் சுமத்தி கைது செய்யப்படும் 14-வது முஸ்லிம் இளைஞர் தாம் ஃபஸீஹ் என்று டெல்லியில் சட்ட உதவிகளை மேற்கொண்டுவரும் அவரது குடும்ப உறுப்பினர் தெரிவித்தார்.

திருமண நிகழ்ச்சியில் நடனமாடிய பெண்களுக்கு பாகிஸ்தானில் மரண தண்டனை .பூ போ போ போ 

திருமண நிகழ்ச்சியில் ஆடிப் பாடியதற்காக 4 பெண்கள், 2 ஆண்களுக்கு வடக்கு பாகிஸ்தானில் உள்ள பழங்குடியின கவுன்சில் ஒன்று மரண தண்டனை விதித்துள்ளது.
கைபர்- பக்துன்குவா மாகாணத்தில் உள்ள ஹசாரா பகுதியில் 2 மாதங்களுக்கு முன்பு நடந்த திருமணம் ஒன்றில் அவர்கள் ஆடிப்பாடியுள்ளனர். அதை விருந்தினர் ஒருவர் கைபேசியில் வீடியோ பதிவு செய்துள்ளார். பிறகு அந்த வீடியோ அந்தப் பெண்களின் குடும்பத்தினருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதையடுத்து ஒரு மாதத்துக்கு முன்பாக கிராமப் பெரியவர்களை உள்ளடக்கிய கவுன்சில் கூட்டப்பட்டது. இருபாலரையும் பிரித்து வைத்தே பார்க்கும் இஸ்லாமிய மற்றும் பழங்குடியின விதிகளுக்கு இது முரணானதாக உள்ளதால் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
4 பெண்களில் இருவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளன. பழங்குடியின கவுன்சில் கூடுவதற்கு முன்பாகவே சம்பந்தப்பட்ட 2 ஆண்களும் ஊரிலிருந்து தப்பி விட்டனர்.
எனவே அந்த 4 பெண்களை சீர்டெய் கிராமத்தில் அறை ஒன்றில் கட்டி வைத்து பட்டினி போட்டு வருகின்றனர்.
அவர்களை துஷ்டர்களாக கவுன்சில் அறிவித்துள்ளது. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் கொல்லப்படுவார்கள் என்று தப்பியோடிய சம்பந்தப்பட்ட ஆண்களின் அண்ணன் முகமது அப்சல் தெரிவித்துள்ளார்.
6 பேரையும் கொல்வதற்கு கவுன்சில் 40 பேரை நியமித்துள்ளது. கவுன்சிலின் தீர்ப்புப்படி ஆண்கள்தான் முதலில் கொல்லப்பட வேண்டும்.
அந்த வீடியோ போலியானது என்று அப்சல் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக பழங்குடியின பெரியோர்களுடன் பேசியுள்ளதாகவும், அனைத்து வகையிலும் போராடி மரண தண்டனையை தடுப்பதாகவும் மாவட்ட  போலிஸ் தலைவர் அப்துல் மஜீத் அஃப்ரிதி தெரிவித்தார்.

வாலுடன் கூடிய கோழி முட்டை


சீனாவின் ஹோக்கு பகுதியில் கோழி ஒன்று இட்ட முட்டையின் தோற்றத்தில் வால் போன்ற பகுதி ஒன்று காணப்படுகின்றது.
எனினும் கோழிகளின் உடலினுள் இருக்கும் முட்டையானது மிருதுவான மென்சவ்வுடன் காணப்படுகின்றது. வெளிச்சூழலுக்கு வரும் போது காற்றின் தொடுகையினாலேயே அது வன்மை அடைகின்றது.
இவ்வாறு வெளிச்சூழுலுக்கு வரும் போது முட்டை மென்சவ்வின் மீது ஏற்பட்ட நீள்ச்சி காரணமாகவும் இவ்வாறு தோற்றம் பெற்றிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

டிரைவர்களின் தலையெழுத்தை மாற்ற வரும் டெய்ம்லர் டிரக்குகள்!

Bharat Benz Launch 18 Trucks Models Soon ஸ்டீயரிங் வீலுடன் போராடி கைகள் ஓய்ந்து போன டிரக் டிரைவர்களின் தலையெழுத்தை மாற்றும் வகையில், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய 18 புதிய டிரக் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர உள்ளதாக டெய்ம்லர் தெரிவித்துள்ளது. வரும் அக்டோபர் மாதம் முதல் டிரக்குகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த டெய்ம்லர் நிறுவனம் டெய்ம்லர் பிராண்டில் வர்த்தக வாகனங்களையும், மெர்டிசிஸ் பென்ஸ் பிராண்டில் கார்களையும் விற்பனை செய்து வருகிறது. அந்தந்த மார்க்கெட்டுக்கு தக்கவாறு வடிவமைப்பை மாற்றி டிரக்குகளை தயாரிப்பதால், டெய்ம்லர் நிறுவனம் டிரக் விற்பனையில் உலக அளவில் முன்னிலை வகிக்கிறது.

இந்தநிலையில், இந்தியாவில் டெய்ம்லர் நிறுவனம் டிரக் தயாரிப்பில் இறங்கியுள்ளது. மஹாராஷ்டிராவிலுள்ள ஆலையில் இருந்து பஸ்களை தயாரித்து வந்த நிலையில், தற்போது 'பாரத் பென்ஸ்' என்ற புதிய பிராண்டில் டிரக்குகளை விற்பனைக்கு கொண்டு வருகிறது டெய்ம்லர். 

இதற்காக, ரூ.4,500 கோடி முதலீட்டில் சென்னை அருகே பிரம்மாண்ட ஆலையையும் கட்டியுள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த புதிய ஆலையை சமீபத்தில் திறந்து வைத்தார். தற்போது 1,400 பணியாளர்களுடன் உற்பத்தியை துவங்க இருக்கும் ஆலையை, விற்பனையை பொருத்து விரிவாக்கம் செய்யவும் டெய்ம்லர் திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், அடுத்த 18 மாதங்களில் 18 புதிய உலகத் தரம் வாய்ந்த டிரக் மாடல்களை பாரத் பென்ஸ் பிராண்டில் விற்பனைக்கு கொண்டு வர உள்ளதாக டெய்ம்லர் தெரிவித்துள்ளது. 7முதல் 16 டன் எடை சுமக்கும் திறன் கொண்ட இலகு ரக டிரக்குகள் மற்றும் 25 முதல் 49 டன் எடை சுமக்கும் திறன் கொண்ட கனரக டிரக்குகளை அந்த நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது.

ஆண்டுக்கு 36,000 டிரக்குகள் தயாரிக்கும் திறன் கொண்ட சென்னை ஆலையில் ஆண்டுக்கு 12,000 இலகு ரக டிரக்குகளும், 24,000 கனரக டிரக்குகளும் தயாரிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட தனது டிரக்குகள் மூலம் இந்திய டிரைவர்களின் தலையெழுத்து மாறு்ம் என்று டெய்ம்லர் குறிப்பிட்டுள்ளது.

இத்தாலியில் கடும் நிலநடுக்கம்: 8 பேர் பலி



இத்தாலியின் வடகிழக்குப் பகுதியில் இன்று வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பயந்து போன மக்கள் வீடுகளை விட்டு தெருக்களை நோக்கி ஓடினர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆகப் பதிவாகியுள்ளது. கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்கனவே சேதமடைந்திருந்த பல கட்டிடங்கள் இன்றைய நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்தன.
இத்தாலியின் சான் பெல்சி பனாரோ நகர் மற்றும் மிரண்டாலோ பகுதிகளில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர். இத்தாலியின் வடக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் ஏற்கனவே இம்மாதம் 20-ம் தேதி 6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் 6 பேர் பலியாயினர். அன்றைய நிலநடுக்கத்தால் 7 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளை இழந்தனர். இத்தாலியில் கடந்த 2 வாரங்களாக தொடந்து ஏற்பட்டு வரும் நிலநடுக்கம் அங்குள்ள மக்களை பீதி அடையச் செய்துள்ளது.

வேலைக்குப் போகும் ஜோடியா நீங்க..

புதிதாக திருமணம் முடிந்த தம்பதியர்ளுக்கு ஹனிமூன், விருந்து என சில நாட்கள் ஜாலியாக கழியும். இன்பச்சுற்றுலா முடிந்து அவரவர் வேலையில் சேர்ந்த பின்னர்தான் எதையோ இழப்பது போல இருக்கும். வேலைக்கு சென்றாலும் குடும்பத்தையும் கவனிக்க வேண்டும் அப்பொழுதுதான் தம்பதியர் இடையே எந்த இடைவெளியும் ஏற்படாமல் இருக்கும்.

எப்ப பார்த்தாலும் பிஸி

வாழ்க்கைக்கு வேலை அவசியம்தான் அதற்காக இருவரும் வேலையை கட்டிக்கொண்டே அழுதால் வாழ்க்கையை யார் வாழ்வது. அப்புறம் வாழ்க்கை மீது இருவருக்கும் வெறுப்புதான் ஏற்படும். ரொட்டீன் வாழ்க்கை இருந்தாலும் அரைமணி நேரத்திற்கு ஒருமுறையாவது போன் செய்து பேசுங்கள். பேச நேரமில்லையா அட்லீஸ்ட் ரொமான்ஸ் மெசேஜ் தட்டிவிடுங்கள். அடிக்கடி ஐ லவ் யூ மெசேஜ்களால் துணையின் இன்பாக்ஸ் நிரம்பட்டும். வேலை நேரங்களில் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைத்தால் உணவு இடைவேளை நேரத்திலாவது பேசுங்களேன்.

சமையலறை ரொமான்ஸ்

காலையில் அலுவலகம் செல்லும் பிஸியில் இருந்தாலும் சமையல் அறையிலேயே உங்களின் காதலை தொடங்கலாம். அது இருவருக்குமே உற்சாகத்தை தரும். சமையலின் ருசியும் கூடுதலாகும். அவசரமாய் சமைக்கிறேன் என்று உங்கள் துணைவியின் வாய் கூறினாலும் மனமானது கணவரின் சின்ன சின்ன ரொமான்ஸ் செயல்களை விரும்பும் என்கின்றனர் நிபுணர்கள்.

ரொமான்ஸ் கிப்ட்

அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வரும்போது காதலை வெளிப்படுத்தும் சின்ன சின்ன பரிசுப்பொருட்களை வாங்கி வரலாம். பூக்கள், மனம் மயக்கும் பெர்ப்யூம், லிப்ஸ்டிக் என எதையாவது வாங்கி வந்து சின்ன முத்தங்களுடன் உங்கள் துணைவிக்கு பரிசளிக்கலாம். இது இருவருக்கும் இடையேயான அலுவலக டென்சனை மறக்கடிக்கும்.

ரொமான்ஸ் வேண்டும்

அலுவலகம் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை என்றால் கவலையில்லை தம்பதிகளுக்கு கொஞ்சமாவது வீட்டில் நேரமிருக்கும். ஆனால் ஷிப்ட் வாழ்க்கை என்றால் கேட்கவே வேண்டாம். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளக்கூட நேரமிருக்காது. எனவே கிடைக்கும் நேரத்தை சந்தோசமாக செலவழியுங்கள். இருவரும் சேர்ந்தே உணவருந்துங்கள். அந்த நேரத்தில் செல்போன், தொலைக்காட்சி என தேவையற்ற இடைஞ்சல்களை சுவிட்ச் ஆஃப் செய்து விடுங்கள். சின்ன சின்ன ரொமான்ஸ் விளையாட்டுக்களை உங்கள் டைனிங் ஹாலில் இருந்தே தொடங்கலாம். இதனால் உங்களுக்கு இடையே இடைவெளி ஏற்படுவது குறையும்.

சீரியஸா பேசாதீங்க

வேலைக்கு செல்லும் தம்பதியர்கள் கிடைக்கும் கொஞ்ச நேரத்தையும் உபயோகமாக செலவழியுங்கள். அந்த நேரத்தில் சீரியஸ் பேச்சுக்கள் வேண்டாமே. அது உங்களின் சந்தோசத்தை பறித்துவிடும். வார விடுமுறை நாட்களை உங்கள் இருவருக்காக மட்டுமே ஒதுக்குங்கள் அந்த நாட்களில் கூட பார்ட்டி நண்பர்கள் வீடு என பொழுதை கழிக்க வேண்டாம். நன்றாக இருவரும் சேர்ந்து ஓய்வெடுங்கள் அது அடுத்த வாரத்திற்கான உற்சாகத்தை அளிக்கும். என்னென்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை இருவரும் சேர்ந்து திட்டமிடுங்கள்.

புதிதாக யோசியுங்கள்


படுக்கையறையில் உங்களின் காதல் செயல்பாடுகளை புதிது புதிதாக செயல்படுத்துங்கள். நடனம், உடற்பயிற்சி என எதுவென்றாலும் அதில் ரொமான்ஸ் செயல்பாடுகள் இருக்கட்டும். அப்பொழுதுதான் உங்கள் காதல் வாழ்க்கை போர் அடிக்காமல் புத்துணர்ச்சியோடு இருக்கும்.

சீனாவில் காணப்படும் இராட்சத சலமண்டர்கள்

பல்லியின் தோற்றத்தைக் கொண்ட சலமண்டர்கள் எனப்படுவது பொதுவாக நீர் நிலைகளில் வாழும் ஊர்வன இனத்தைச் சார்ந்த விலங்கு ஆகும்.

சிறிய இனத்தைச் சேர்ந்த சலமண்டர்கள் வாலின் நீளம் உள்ளடங்கலாக 2.7 சென்டிமீட்டர்கள் வரை வளரக்கூடியன. ஆனால் சீனாவில் காணப்படும் சலமண்டர்கள் சுமார் 1.8 மீட்டர்கள் நீளமானதாக வளரக்கூடியவை.
அதாவது இவை ஒரு நாயின் தோற்றத்தை விடவும் அளவில் பெரியவையாகும். இவற்றின் நிறையானது 65 கிலோகிராம்களாக காணப்படுகின்றது.

விபத்தில் சிக்கி சுக்குநூறான 20 கோடி ரூபாய் அஸ்டன் மார்ட்டின் கார்

சீனாவில் அதிவேகத்தில் சென்ற அஸ்டன் மார்ட்டின் சூப்பர் கார் விபத்தில் சிக்கி சுக்குநூறான தகவல் அந்நாட்டு  இணையதளம் ஒன்றில் வெளியாகியுள்ளது.

பிரிட்டனை சேர்ந்த அஸ்டன் மார்ட்டின் கார்கள் உலக அளவில் புகழ்பெற்றதாக திகழ்கிறது. ஜேம்ஸ்பாண்ட் சினிமாவில் அதிகம் பயன்படுத்தப்படும் கார்கள் என்பதால் இந்த கார்களுக்கு வாடிக்கையாளர் மத்தியில் தனி மதிப்பு இருக்கிறது.

இந்த நிலையில், அஸ்டன் மார்ட்டின் ஒன்-77 என்ற கார் மாடலை ஸ்பெஷல் எடிசனாக அஸ்டன் மார்ட்டின் கடந்த 2009ம் ஆண்டு அறிமுகம் செய்தது. வெறும் 77 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் இந்த காரை அஸ்டன் மார்ட்டின் டெலிவிரி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில், சீனாவில் சமீபத்தில் டெலிவிரி கொடுக்கப்பட்ட அஸ்டன் மார்ட்டின் ஒன் 77 கார் ஒன்று அதிவேகத்தில் சென்று விபத்தில் சிக்கி சின்னாபின்னமாகியுள்ளது. அதில் இருந்தவர் நிலை குறித்த விபரங்கள் முழுமையாக கிடைக்கவில்லை.

ஒரு லாரியில் பின்னால் ஏற்றப்பட்ட அந்த காரின் முன்பக்கம் முற்றிலும் உருக்குலைந்து இருந்தது. அதை ஒருவர் படமெடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், அந்த கார் டெலிவிரி கொடுக்கப்பட்டு வெறும் ஒரு வாரமே ஆகியிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த லிமிடேட் எடிசன் அஸ்டன் மார்ட்டின்  ஒன் 77 காரில் 7.0 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் 522 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. அதிவேகத்தில் செல்லும் திறன் வாய்ந்த இந்த காரை ஓட்டியவர் கட்டுப்படுத்த தெரியாமல் ஓட்டியதால் விபத்தில் சிக்கியிருக்கலாம் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்ட அஸ்டன் மார்ட்டின் கார் விபத்தில் சிக்கி சுக்குநூறாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேஸ் புக் காதலரை மணக்க கணவர்-மகளை பிரிந்து ஓடிய எம்.எல்.ஏ!

சில்சார்: அஸ்ஸாமைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ டாக்டர் ருமி நாத் என்பவர் பேஸ்புக் மூலம் தனக்குக் கிடைத்த காதலரை மணப்பதற்காக தனது கணவரையும் குழந்தையையும் பிரிந்து விட்டு காதலனுடன் ஓடிவிட்டார். மேலும் காதலர் சார்ந்த இஸ்லாம் மதத்திற்கும் அவர் மாறியுள்ளார். அவருக்கும், அவரது காதலருக்கும் திருமணமும் நடந்து விட்டது.

அஸ்ஸாமில் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போர்க்கோலா தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏதான் ருமி. இவரது கணவர் பெயர் ராகேஷ் குமார் சிங். இவர்களுக்கு 2 வயதில் மகள் உள்ளாள்.

இந்த நிலையில், பேஸ்புக் மூலம் ஜாக்கி ஜாகிர் என்பவர் அறிமுகமானார். இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தீவிரமாக பழகி வந்தனர். இந்த நிலையில் தனது கணவரையும் குழந்தையையும் விட்டுவிட்டு வீட்டை விட்டு ஓடிய ருமி, ஜாகிரையே மணந்து கொண்டு விட்டார்.

முன்னதாக இதுகுறித்து ராகேஷ் குமார் சிங் போலீஸில் புகார் கொடுத்திருந்தார். அதில், மருத்துவப் பரிசோதனைக்காக ருமி சில்சார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் போயிருந்தபோது அவரை கடத்தி விட்டதாக கூறியிருந்தார். ஆனால் விசாரணையில் இவரது மனைவி, பேஸ்புக் காதலரை மணந்து கொண்ட செய்தி தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதக் கலவரம் வெடித்து விடாமல் தடுப்பதற்காக சில்சார் பகுதியில் சிஆர்பிஎப் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

32 வயதான ருமி, தனது காதலருடன் வங்கதேசத்துக்குப் போய் விட்டார். ஒரு மாதத்திற்கு முன்பே ஜாகிரை அவர் மணந்து விட்டார். அவரது திருமண புகைப்படமும் கூட ஏற்கனவே உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. ஆனால் அதை அப்போது ருமி மறுத்திருந்தார். ஆனால் தற்போது காதலருடன் தலைமறைவாகி விட்ட நிலையில் தனக்கு காதலருடன் கல்யாணம் ஆகி விட்டதை சில நாட்களுக்கு முன்பு அவர் ஒத்துக் கொண்டார்.

இந்தக் கல்யாணத்தை நடத்தி வைத்தது மாநில அமைச்சர் சித்திக் அகமதுதான் என்றும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து முதல்வர் தருண் கோகாயிடம் முறையிட்டுள்ளார் ராகேஷ் சிங்

தனது இரண்டாவது கல்யாண் குறித்து ருமி கூறுகையில், ஜாகிர்தான் எனது சட்டப்பூர்வமான கணவர். எனக்கும், ராகேஷ் சிங்குக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. விரைவில் நான் விவாகரத்து கோரவுள்ளேன்.

அரசியல் காரணங்களுக்காகத்தான் எனது 2வது கல்யாணத்தை நான் முன்பு மறுத்தேன். சுய விருப்பத்தின் பேரில்தான் நான் மதம் மாறினேன். எனவே இந்து திருமணச் சட்டம் எனக்குப் பொருந்தாது. விரைவில் எனது மகளை நான் எனது பொறுப்பில் சட்டப்படி எடுப்பேன் என்றார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ராஜ்யசபா தேர்தலின்போது பாஜக சார்பில் எம்.எல்.ஏவாக இருந்தவர் ருமி. அப்போது அவர் காங்கிரஸ் வேட்பாளருக்கு மாற்றி வாக்களித்தார். இதையடுத்து அவரை பாஜக கட்சியிலிருந்து நீக்கியது. இதையடுத்து அவர் காங்கிரஸில் இணைந்தார் என்பது நினைவிருக்கலாம்.

சிபிஎஸ்இ +2 தேர்வில் சென்னை மாணவர் சஞ்சய் கணபதி மாநிலத்திலேயே முதல் இடம்

சென்னை: சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. இதில் சென்னையைச் சேர்ந்த மாணவர் சஞ்சய் கணபதி 500க்கு 490 மதிப்பெண்கள் பெற்று தமிழகத்தில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றுள்ளார்.

இந்தியாவில் 8 லட்சத்து 15 ஆயிரத்து 749 மாணவ-மாணவியர் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில் 80.19 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 5.94 சதவீதம் பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 86.21 சதவீதம் மாணவிகளும், 75.80 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

10 மாநிலங்கள் அடங்கிய சென்னை மண்டலத்தில் 67,707 மாணவ-மாணவியர் தேர்வு எழுதினர். அதில் 61,339 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கீழ்ப்பாக்கம் ராஜாஜி வித்யாஸ்ரம் பள்ளி மாணவர் சஞ்சய் கணபதி 500க்கு 490 மதிப்பெண்கள் பெற்று தமிழகத்தில் முதல் மாணவராகவும், சென்னை மண்டலத்தில் 2வது மாணவராகவும் தேர்ச்சி பெற்றுள்ளார்.

இது குறித்து சென்னை மண்டல அதிகாரி சுதர்சன் ராவ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

சென்னை மண்டலத்தில் 90.59 சதவீதம் மாணவ-மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் 3,275 மாணவிகள், 4, 534 மாணவர்கள் என மொத்தம் 7, 809 பேர் தேர்வு எழுதினர். இதில் 3,315 மாணவிகளும், 4,324 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 95.85 சதவீரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

புதுவையில் 249 பேர் தேர்வு எழுதினர். அதில் 239 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒரு பாடத்தில் மட்டும் தோல்வி அடைந்தவர்கள் உடனடி தேர்வு எழுத வரும் ஜூன் மாதம் 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த உடனடி தேர்வு வரும் ஜூலை மாதம் 16ம் தேதி நடைபெறும். 

விடைத்தாள்களை சரிபார்க்க விரும்புபவர்கள் இன்று முதல் 5 நாட்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஒரு பாடத்திற்கு ரூ. 300 கட்டணம் வசூலிக்கப்படும் என்றார். 

கடந்த ஆண்டை போன்றே இந்த ஆண்டும் நாட்டிலேயே சென்னை மண்டலத்தில் தான் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நியூட்டன் போட்ட கணக்குக்கு தீர்வு கண்டு சாதனை படைத்த இந்திய மாணவன் !



 Indian Boy Solves 350 Year Old Math Problem By Newton
 லண்டன்: கடந்த 350 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்வு காணப்படாமல் இருந்து வந்த ஒரு கணிதப் புதிருக்கு விடை கண்டு அனைவரையும் வியக்க வைத்துள்ளார் 16 வயதேயான இந்திய மாணவன். இந்தக் கணிதப் புதிரைப் போடட்வர் மறைந்த சர் ஐசக் நியூட்டன் ஆவர். கடந்த 350 ஆண்டுகளாக உலக கணிதவியலாளர்களை குழப்பி வந்த புதிராகும் இது. கணித மேதைகள் பலரும் கூடஇந்தப் புதிருக்கு விடை காண முடியாமல் திணறி வந்தனர். ஆனால் 'ஜஸ்ட் லைக் தட்' இதற்கு விடை கண்டுள்ளார் செளரியா ராய் என்ற இந்திய வம்சாவளி மாணவன்.

ஜெர்மனியின் டிரட்சென் பகுதியில் வசித்து வருகிறார் ராய். இவர் விடை கண்டுள்ள கணிதப் புதிர், டைனமிக்ஸ் தியரியில் வருகிறது. டிரட்சென் பல்கலைக்கழகத்திற்கு ராய் பள்ளிச் சுற்றுலாவாக சென்றபோதுதான் இந்தக் கணிதப் புதிர் குறித்து ராய்க்குத் தெரிய வந்தது. அப்போது அங்குள்ள பேராசிரியர்கள் இதுகுறித்து கூறியபோது, இதற்கு விடை காணவே முடியாது என்று கூறினர்.

ஆனால் அதை சவாலாக எடுத்துக் கொண்டார் ராய். பின்னர் அதற்கு விடை காணும் முயற்சியில்இறங்கினார், வெற்றியும் பெற்றார்.

இது மட்டுமல்லாமல் மிகக் கடினமான கணிதப் புதிர்களைக் கூட எளிதாக அவிழ்க்கும் வித்தை இவரிடம் உள்ளது. 6ம் வயதிலிருந்தே இதே வேலையாகத்தான் திரிகிறாராம் இவர்.

அதேசமயம், தன்னை மேதை என்று யாரும் அழைக்க வேண்டாம் என்றும், அந்த அளவுக்கு தான் இன்னும் வளரவில்லை என்றும் அடக்கத்துடன் கூறுகிறார்.

4வயதாகஇருந்தபோது கொல்கத்தாவிலிருந்து ஜெர்மனிக்கு வந்து செட்டிலானவர் ராய். தற்போது தனது தாய் மொழியான பெங்காலியை விட ஜெர்மனியை மிக லாவகமாக பேசுகிறார் ராய்.

நாம் முன்னர் கண்டிராத பூமியின் படங்கள்


உலகில் எவரும் இதற்கு முன் கண்டிராத வகையில் பூமியை ரஷ்ய நாட்டு செய்மதியொன்று மிக அழகாகப் படம்பிடித்துள்ளது.இரவு, பகல் மாற்றம், சூரிய ஒளி ,சமுத்திரங்களின் மீதுபட்டுத்தெறிக்கும் காட்சியென்பன இதில் பதிவாகியுள்ளன.

ரஷ்யா கடைசியாக அனுப்பிய இலக்ட்ரோ எல் என்ற வானிலை, காலநிலை செய்மதியினாலேயே இக்காட்சி படம் பிடிக்கப்பட்டுள்ளது.

இது 121 மில்லியன் மெகாபிக்ஸல் கெமராவினைக் கொண்டுள்ளது.

பூமிக்கு சுமார் 40,000 கிலோமீற்றர் தொலைவில் இச் செய்மதி பயணித்து வருகின்றது.

இது 30 நிமிடங்களுக்கு ஒரு தடவை பூமியைப் புகைப்படம் எடுத்து ஆய்வு மையத்திற்கு அனுப்பிவைக்கின்றது.

காலநிலை மாற்றங்கள் தொடர்பில் அவதானிக்கும் இச்செய்மதி ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒரு தடவையும் பூமியின் புகைப்படங்களைப் எடுக்கிறது.

தற்போது இணையத்தில் வெளியாகிய இக்காணொளி பெரும் வரவேற்பினைப்பெற்றுள்ளது.

அதனை நீங்களும் கண்டு இரசியுங்களேன்!

புகைப்படத்திற்கு சவால்விடும் பென்சில் வரைபடம்


பொதுவாக புகைப்படம் என்றால் அது அழகாக தோற்றமளிப்பது அனைவருக்கும் தெரிந்த  விசயமே.  அப்படிப்பட்ட புகைப்படத்திற்கே சவால் விடுகின்றன இங்கு பென்சிலால் வரையப்பட்ட ஓவியம்.


உலகின் மிக நீளமான மீசையுடையவரின் ஆலோசனை


உலகின் மிக நீண்ட மீசையைக் கொண்டவர் என்ற உலக சாதனைக்கு சொந்தக்காரர், சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த Ram Singh Chauhan என்பவரே உலகின் மிக நீண்ட மீசைக்கு சொந்தக்காரர். இவரது மீசையின் நீளம் 14 அடிகளாகும். 54 வயதான Ram Singh Chauhan, ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் ஒன்றிலும், சில பாலிவுட் திரைப்படங்களிலும் தோன்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
1983 ஆம் ஆண்டில் வெளியான Octopussy என்ற ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார். மீசை வளர்க்க வேண்டுமாயின் இள வயதிலேயே அதனை ஆரம்பிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
இள வயதில் அதிகளவில் ஹோர்மோன் சுரக்கும் என்றும், காலப் போக்கில் ஹோர்மோன் சுரக்கும் அளவில் வீழ்ச்சி ஏற்படும் என்றும் அவர் கூறினார். தேங்காய் எண்ணெய் கொண்டு மீசையை பராமரிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அடிக்கடி எண்ணெய் தடவி, பத்து நாட்களுக்கு ஒரு தடவையேனும் மீசையை நன்கு கழுவ வேண்டுமென ராம் குறிப்பிட்டுள்ளார்.

பாராசூட் இல்லாமல் 2,400 அடி உயரத்தில் இருந்து குதித்து சாதனை


இங்கிலாந்தின் தேம்ஸ் ஆற்றங்கரைப் பகுதியில் உள்ள ஹென்லே என்ற இடத்தில் கேரி கானரி(வயது 41) என்ற நபர் ஹெலிகொப்டரில் இருந்து பாராசூட் இல்லாமல் குதித்து சாதனை படைத்துள்ளார்.
குதிக்கும் போது இவர், காற்றின் வேகத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் விசேஷ உடை அணிந்து இருந்தார். கீழே விழுந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க தரையில் 18,000 அட்டை பெட்டிகளை அடுக்கி வைத்து இருந்தனர்.
ஹெலிகொப்டரில் சென்ற கேரி கானரி மணிக்கு 130 கி.மீ வேகத்தில் பறந்த போது, 2,400 அடி உயரத்தில் இருந்து பாராசூட் இல்லாமல் கீழே குதித்தார். இதன் பின் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அட்டைப் பெட்டிகளில் துல்லியமாக விழுந்ததால், உலக சாதனை படைத்தார்.
இந்த சாதனையை பார்க்க ஏராளமான மக்கள் கூடி இருந்தனர். கேரி கானரி குதித்ததும் அவர்கள் கை தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். சாதனையை நேரில் பார்க்க மனைவி விவென்னியும் வந்திருந்தார்.
இதுகுறித்து கேரி கானரி கூறுகையில், ஆகாயத்தில் இருந்து பாராசூட்டில் குதிப்பது என்பது நான் நினைத்துப் பார்க்காத சாதனை. தரையில் குதிக்கும் போது புதுவித அனுபவமாக இருந்தது. எனது கணிப்புகள் துல்லியமாக இருந்தது என்றார்.
இந்த சாதனைக்காக கேரி கானரி சுவிட்சர்லாந்தில் ஒரு வாரம் பாராசூட்டுக்கு பதில் ஸ்விங் சூட் என்ற நவீன ஆடையை பயன்படுத்தி மலைகளில் பயிற்சியில் ஈடுபட்டார். ஏற்கனவே இவர் தனது 23 வயதில் பாரிஸ் ஈபிள் டவர், லண்டன் ஐ ஆகிய கட்டிடங்களில் இருந்து பாராசூட்டில் குதித்து சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.