சொகுசோ சொகுசு கண்முன் கொண்டு வந்த டிசி டிசைனின் புதிய பஸ்

கார்கள் மற்றும் வாகனங்களை ஆடம்பரமாக கஸ்டமைஸ் செய்து தருவதில் கேதேர்ந்த டிசி நிறுவனம் தற்போது மினி சொகுசு பஸ் ஒன்றை உருவாக்கியிருக்கிறது. இசூஸு 4500 டிரக்கின் சேஸ் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த நடமாடும் ஆடம்பர மினி பங்களாவில் சொர்க்கத்தை நினைவூட்டும் வசதிகளை கொடுத்து அசத்தியிருக்கிறது டிசி. லிவிங் ரூம், பெட்ரூம், கேண்டீன் மற்றும் டாய்லெட், பாத்ரூம் ஆகிய அனைத்து வசதிகளும் இந்த நடமாடும் ஆடம்பர பங்களாவில் இருக்கிறது. மேலும், உட்புறத்தில் அதிர்வுகள் தெரியாதவாறு இதில் பிரத்யேக சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டிருக்கிறது. முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட இந்த பஸ்சில் வெளியிலிருந்து அதிக சப்தம் வராத வகையில் விசேஷ சப்த தடுப்பு நுட்பத்துடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. மனதை மயக்கும் விளக்குகள், டிவி, கிங் சைஸ் நாற்காலிகள் என அனைத்து வசதிகளும் கொண்ட இந்த பஸ்சுக்கு தற்போது முன்பதிவு துவங்கப்பட்டிருக்கிறது.










மீண்டும் இதே நிலை ஏற்பட்டால், நாட்டைவிட்டு வெளியேறுவேன்- கமல் மீண்டும் பேச்சு

I M Not Doing These Publicity Says Kamal சென்னை: விஸ்வரூபம் விவகாரத்தை விளம்பரத்துக்காக நான் பெரிதுபடுத்துவதாகக் கூறுவது மோசமானது, என்று கமல்ஹாஸன் கூறியுள்ளார். 

மும்பையில் விஸ்வரூபம் சிறப்புக் காட்சிக்கு முன், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதிலிருந்து... 

எனக்கு வந்ததைப் போன்று யாருக்கும் பிரச்சனை வரக்கூடாது. கலைஞர்களை அவமதிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அவர்களை ஹாலிவுட், பாலிவுட் என வேறுபடுத்திப் பார்க்க வேண்டாம். பிரச்சனையை சந்தித்து வரும் நேரத்தில், ஊடகங்கள் எனக்கு ஆதரவாக நின்றது நெகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. 

யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. மதத்திலும் நம்பிக்கை இல்லை. 

விஸ்வரூபம் பிரச்சனையில் விளக்கம் அளித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி. சினிமா உலகமும் ரசிகர்கள் கொடுத்த ஆதரவும் எனக்கு உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. 

இப்போது இந்த விவகாரத்தில் முதல்வர் உதவ முன் வந்துள்ளதால் உச்ச நீதிமன்றம் போக வேண்டிய அவசியமில்லை. 

இந்தப் போராட்டத்தில் நான் தனி ஆள் இல்லை. ஆதரவு அளித்த ஊடகங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். 

நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று நான் சொன்னது வெறுமனே உணர்ச்சிவயப்பட்டோ, மிரட்டவோ அல்ல. உண்மையிலேயே இதுபோன்ற நிலை மீண்டும் ஏற்பட்டால், நாட்டைவிட்டு வெளியேறுவது பற்றி பரிசீலனை செய்வேன். 

எனக்கு ஆஸ்கர் விருது தேவையில்லை, இந்திய தேசிய விருதையே விரும்புகிறேன். 

நான் எதிர்கொள்ளும் எதிர்ப்பு மதரீதியானது அல்ல; அரசியல் ரீதியானது. மற்ற இடங்களில் படத்தைப் பார்த்தவர்கள் சிறப்பாக உள்ளதாக கூறுகின்றனர். 

விஸ்வரூபம் மூலம் விளம்பரம் தேட நான் முயற்சிப்பதாக கூறுவது மோசமானது. நான் கோபத்தில் பேசவில்லை, காயப்பட்டதால் பேசுகிறேன். அந்த அளவு புண்பட்டிருக்கிறேன். 

என் படங்களில் முஸ்லீம்களை நான் எப்போதுமே தவறாக காட்டியதில்லை. ஹே ராம் பார்த்தால் புரியும். இந்த சில தினங்களில் நம்ப முடியாத அளவுக்கு எனக்கு இஸ்லாமிய சமுதாயத்தினரிடம் இருந்து ஆதரவு கிடைத்துள்ளது. என்னைப் பொறுத்தவரை இஸ்லாம் மதம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை. அதை நானும் மீண்டும் சொல்கிறேன். 

ஆனால் அதே நேரத்தில் எந்த நிறத்தில் வந்தாலும் தீவிரவாதம் தீவிரவாதம்தான். 

விஸ்வரூபம் விவகாரத்தில் எந்த இஸ்லாமிய நண்பராவது கைது செய்யப்பட்டிருந்தால் உடனே விடுவிக்க வேண்டும். 

எனது படத்திற்கு விதிக்கப்பட்ட தடையால் ரூ.30 கோடி முதல் ரூ.60 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்கிறது. 

இந்தப் பிரச்சினையில் தென்னகத்தில் உள்ள என் திரைத்துறை நண்பர்கள் மட்டுமல்ல, சல்மான், ஷாருக், மகேஷ் பட், மதூர் பண்டார்கள் என இங்கே உள்ளவர்களும் ஆதரவு தந்தனர். அவர்களுக்கு நன்றி என்றார் கமல்.

கமல் படத்தை விட சட்டம் ஒழுங்குதான் எனக்கு முக்கியம்- ஜெயலலிதா


 Law Order Is Important The Govt Not Viswaroopam சென்னை: விஸ்வரூபம் படத்தை தடை செய்தது அரசியல் பிரச்சினை அல்ல. அது முற்றிலும் சட்டம் ஒழுங்கு சம்பந்தப்பட்ட பிரச்சினையாகும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

விஸ்வரூபம் தொடர்பாக உச்சநீதிமன்றத்திற்கு இப்போதைக்குப் போகப் போவதில்லை என்று கமல்ஹாசன் அறிவித்துள்ள நிலையில், முதல்வர் இதுதொடர்பாக ஆலோசனையில் இறங்கினார். 

தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில டிஜிபி ராமானுஜம், அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், உள்துறைச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் ஜெயலலிதா. அவர் கொடுத்த பேட்டியின் விவரம்... 

கடந்த சில நாட்களாக விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக டிவிகள், பத்திரிக்கைகள், இணையதளங்களில் காட்டுக்கத்தலாக இருக்கிறது.என்னைப் பறறியும், எனது அரசைப் பற்றியும் இரக்கமே இல்லாமல் குற்றச்சாட்டுக்கள், புகார்களை சுமத்தி வருகின்றனர். எனவே இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்தேன். இப்பட விவகாரம் தொடர்பான அனைத்து தவறான கருத்துக்களையும் மறுக்க வேண்டியது அவசியம் என்பதற்காகவே இந்த செய்தியாளர் சந்திப்பு. 

இந்தப் படத்தை அரசு தடை செய்திருக்கக் கூடாது என்பது முதல் குற்றச்சாட்டு, தியேட்டர்களுக்குப் பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும் என்பதும் ஒரு புகார். பலருக்கு சட்டம் ஒழுங்கை அரசு எப்படி பாதுகாக்கிறது என்பதே புரிவதில்லை. அரசின் நிர்வாக செயல்பாடுகள் குறித்து எதுவும் தெரிவதில்லை. இதுகுறித்து கருத்து தெரிவிப்போர் அரசின் சிரமங்கள், நிர்வாகப் பிரச்சினைகள் குறித்து புரிந்து கொள்வதே இல்லை. 

ஒரு முதல்வர் என்ற வகையில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதுதான் எனது முதல் முன்னுரிமையாகும். சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டியது எனது கடமையாகும். மக்கள் அமைதியாக, சுமூகமான முறையில், இணக்கமான முறையில் தினசரி வாழ்க்கையை நடத்த வேண்டியது அவசியமாகும். அதை உறுதி செய்ய வேண்டியது எனது கடமையாகும். 

விஸ்வரூபம் படத்தை 525 தியேட்டர்களில் வெளியிடுவதாக கூறியிருந்தனர். ஆனால் இந்தப் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று 24 முஸ்லீம் அமைப்புகள், தமிழ்நாடு தெளஹீத் ஜமாத் ஆகியவை சார்பில் அரசிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. உள்துறைச் செயலாளரிடம்இதைக் கொடுத்னர். அவர்களின் கோரிக்கைளை வலியுறுத்தி போராட்டங்களையும் அறிவித்தனர். இதனால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் நிலை உருவானது. 

சட்டம் ஒழுங்குசீர்குலைந்து, வன்முறை மூண்டால் அதை காவல்துறையினரால் சமாளிக்க முடியுமா என்பதை அரசு பரிசீலித்தது. தமிழக காவல்துறையின் மொத்த காவலர் பணியிடம் 1,13,780 பேராகும். இதில் காலியிடம் 21,911 ஆகும். எனவே இருப்பது 91,807 பேர்தான். இதில் கோர்ட் பணி, ரோந்து உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்குப் போன காவலர்களைத் தவிர்த்துப் பார்த்தால், மீதமிருப்பது வெறும் 9226 பேர்தான். 

ஆனால் விஸ்வரூபம் படம் திரையிடப்படும் 525 தியேட்டர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றால் குறைந்தது 56,440 போலீஸார் தேவைப்படுவார்கள். ஆனால் அது இயலாத காரியம். சில தியேட்டர்கள் என்றால் பரவாயில்லை, 525 தியேட்டர்களுக்குப் பாதுகாப்பு தருவது என்பது எப்படி முடியும். எனது அரசுக்கும், முதல்வராக எனக்கும், ஒருதிரைப்படத்தை விட மக்களின் சட்டம் ஒழுங்கு நிலைதான் முக்கியம் என்பதால் படத்தைத் தடை செய்யும் முடிவை அரசு எடுத்தது என்றார் ஜெயலலிதா.

எம்.ஜி.ஆருக்கு கமல் பற்றி ஜெ. எழுதிய கடித ஆதாரம் என்னிடம் இருக்கிறது: கருணாநிதி

 Ready Face Jaya S Defmation Case On Kamal Issue சென்னை: நடிகர் கமல்ஹாசனை ஒருமையில் விமர்சித்து முதல்வராக இருந்த எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியதற்கான ஆதாரம் தன்னிடம் இருக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். 

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது கமல்ஹாசனை விமர்சித்து ஜெயலலிதா கடிதம் எழுதியதாக கருணாநிதி முரசொலியில் எழுதியிருந்தார். இதனை இன்று செய்தியாளர்களிடம் மறுத்த ஜெயலலிதா, கருணாநிதி மீது அவதூறு வழக்கு போடப்படும் என்றும் அறிவித்தார். 

இதற்குப் பதிலளித்து கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், இன்றைய முரசொலி நாளிதழில் 'வெளியே வந்து விட்டது பூனைக் குட்டி' என்ற தலைப்பில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படத்தின் சிறப்புக் காட்சி ஒன்றில் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். கலந்து கொண்டபோது அம்மையார் ஜெயலலிதா, எம்.ஜி.ஆருக்கு தன் கைப்பட எழுதிய கடிதத்தில் கமல்ஹாசனைப் பற்றி ஒருமையில் கண்டனம் செய்து குறிப்பிட்டுத் தெரிவித்த சில வாசகங்களை எழுதியிருந்தேன். 

அப்படி நான் எழுதியது கற்பனையான குற்றச்சாட்டு என்றும் தான் தினமும் எம்.ஜி.ஆருடன் பேசுவதற்கான வாய்ப்பு அப்போது இருந்ததால் எதற்காக கடிதம் எழுத வேண்டும் என்றும் அதற்காக என் மீது வழக்கு தொடரப் போவதாகவும் ஜெயலலிதா தனது நீண்ட பேட்டியில் தெரிவித்திருக்கிறார். 

நான் எழுதியதற்கான போதுமான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. முதலமைச்சர் என் மீது வழக்குப் போடும்போது நீதிமன்றத்தில் ஆதாரத்தைக் காட்ட நான் தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

என்னைப் பற்றி அவதூறாகப் பேசிய கருணாநிதியை சும்மா விட மாட்டேன் -ஜெ.

 I Will Sue Karunanidhi His Comments சென்னை: விஸ்வரூபம் விவகாரம் தொடர்பாக நான் கமலுக்கு எதிராக நடந்து கொண்டதாகவும், எம்.ஜி.ஆரிடம் கமல்ஹாசன் குறித்து கடிதம் எழுதியதாகவும் கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. அவர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு அவரை அப்படியே விட்டு விட முடியாது. அவர் மீது உரிய வகையில் அவதூறு வழக்குகள் போடப்படும் என்று எச்சரித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. 

இதுதொடர்பாக அவர் இன்று அளித்த பேட்டியின்போது கூறுகையில், 

நடிகர் கமல்ஹாசன் மீது தனிப்பட்ட துவேஷம், முன்பகை காரணமாக நான் இப்படி நடந்து கொண்டதாக ஒரு புகாரைக் கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. வேட்டி கட்டி தமிழர் பிரதமராக வேண்டும் என்று கமல்ஹாசன் பேசியதற்காக அவர் மீது நான் நடவடிக்கை எடுத்ததாக கருணநிதி கூறியுள்ளார். 

வேட்டி கட்டிய தமிழர் பிரதமராக வேண்டும் என்று கமல்ஹாசன் கூறினால் நான் ஏன் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கமல்ஹாசனுக்குப் பேச்சு சுதந்திரம் உள்ளது. அவர் என்ன வேண்டுமானாலும் பேசலாம். அதை நான் எப்படித் தடுக்க முடியும். 

நான் பலவருடமாக அரசியலில் இருக்கிறேன். அரசியல் அனுபவம் எனக்கு நிறையவே உள்ளது. கமல்ஹாசன் பிரதமரைத் தேர்வு செய்வதில்லை என்பதை நான் நன்றாக அறிவேன்.100 கோடி மக்கள் உள்ளனர்.அவர்கள் வாக்களித்து ஒரு கட்சியை அல்லது கூட்டணியை ஆட்சிக்குக் கொண்டு வருகிறார்கள். பின்னர்தான் பிரதமர் தேர்வு செய்யப்படுகிறார். எனவே கமல் பேசியதால் நான் ஏன் கோபமடைய வேண்டும். 

ஆனால் கருணாநிதி கண்மூடித்தனமாக இப்படி புகார் கூறியுள்ளார். அது மட்டுமல்ல, 1980களில் நான் கமல்ஹாசன் குறித்து எம்.ஜி.ஆருக்குப் புகார் கூறி கடிதம் எழுதியதாகவும் கூறியுள்ளார். இது மிகவும் கேலிக்குரிய புகாராகும். பெரும் கோமாளித்தனமான புகாராகும். 

நான் எம்.ஜி.ஆரை தினசரி சந்திக்கும் வழக்கம் கொண்டவர். அப்போது நான் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தேன்,எம்.பியாக இருந்தேன். தினசரி கட்சிப் பணி தொடர்பாக எம்.ஜி.ஆரை சந்திப்பேன். பிற்பகலில் மாம்பலம் அலுவலகத்தில் சந்திப்போம், மணிக்கணக்கில் பேசுவோம், சேர்ந்து சாப்பிடுவோம். அரசியல், கட்சிப் பிரச்சினைகள் குறித்துப் பேசுவோம். அப்படி இருக்கையில் நான் ஏன் அவருக்குக் கடிதம் எழுத வேண்டும்.அதுவும் மிகச்சாதாரண விஷயத்திற்காக. 

கருணாநிதி கூறியிருப்பது அருமையான புகார். இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அவர் மீது சட்டப்படியான, அவதூறு வழக்குகள் தொடரப்படும். 

உண்மையில் நான் எதிரியாக கருத வேண்டிய நபர் ஒருவர் இருக்கிறார் என்றால் அது கருணாநிதி மட்டுமே. கமல்ஹாசன் அல்ல.அவர் எனக்கு எதிரியும் அல்ல, போட்டியாளரும் அல்ல. கருணாநிதி குடும்பத்தினர் பல படங்களை எடுக்கின்றனர், வெளியிடுகின்றனர். நான் அதைத் தடுக்கவில்லையே. அப்படி இருக்கும்போது எனது எதிரி இல்லாத கமல்ஹாசன் மீது நான் ஏன் பகைமை காட்டப்போகிறேன் என்றார் ஜெயலலிதா.

நான் நினைத்திருந்தால் விஸ்வரூபத்தை நிரந்தரமாக தடை செய்திருப்பேன்- ஜெ.

 I Would Have Banned Viswaroopam Permanently சென்னை: நான் நினைத்திருந்தால் விஸ்வரூபம் படத்தை தமிழக அரசின் சினிமா முறைப்படுத்தும் சட்டம் 1995ன் கீழ் நிரந்தரமாக தடை செய்திருக்க முடியும். ஆனால் எனக்கு எந்தவிதமான பகைமை உணர்வும் இல்லை என்பதால்தான் சிஆர்பிசி 144 சட்டத்தின் கீழ் தடை செய்தேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒரு திரைப்படத்தைத் தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று சிலர் கூறுகிறார்கள். இது முற்றிலும் தவறானது. தமிழ்நாடு சினிமா முறைப்படுத்தும் சட்டம் 1955 என்று ஒன்று உள்ளது. அச்சட்டத்தின் 7வது பிரிவி்ன் கீழ் மாநில அரசுக்கு ஒரு திரைப்படத்தைத் தடை செய்யும் முழு அதிகாரமும் உள்ளது. அந்த சட்டப் பிரிவின் கீழ்தான் டேம் 999 படம் தடை செய்யப்பட்டது. அதை உச்சநீதிமன்றமும் சமீபத்தில் உறுதி செய்தது. 

எனது அரசு நினைத்திருந்தால், நான் நினைத்திருந்தால், விஸ்வரூபம் படத்தை நான் நேரடியாக அந்த சட்டப் பிரிவின் கீழ் தடை செய்திருக்க முடியும். நான் அதை செய்யவில்லை. சிஆர்பிசி 144 சட்டப் பிரிவின் கீழ்தான் தடை செய்தேன்.அதுவும் கூட 15 நாட்களுக்குத்தான். 

இதன் மூலம் நான் எந்தவிதமான உள்நோக்கத்துடன் நான் செயல்படவில்லை என்பதை உணர முடியும். இந்தப் படத்துக்கு எதிராக அரசியல் ரீதியாக நானோ, எனது அரசோ செயல்படவில்லை என்பதையும் உணர முடியும் என்றார் ஜெயலலிதா.

அன்பு சகோதர் கமலுக்கு, ஒரு முஸ்லிம் சகோதரனின் மனம் திறந்த மடல்...


கோவை: விஸ்வரூபம் விவகாரம் குறித்து நடிகர் கமல் ஹாசனுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது, உங்கள் மீது அமைதியும் சமாதானமும் நிலவட்டுமாக. 

நீங்கள் உலகப் புகழ்பெற்ற தலை சிறந்த நடிகர் என்பது உண்மை; நீங்கள் ஒரு முற்போக்கு சிந்தனையாளர் என்பதும் உண்மை. திரை உலகத்தில் சம்பாதித்து அதை திரை உலகத்திலேயே முதலீடு செய்பவர் என்று உங்களை அனைவரும் பாராட்டுவதும் உண்மை. உங்களின் 'உன்னைப்போல் ஒருவன்' திரைப்படமும், தற்போது 'விஸ்வரூபம்' திரைப்படமும் முஸ்லிம்களுக்கு எதிராக அமைந்தது துரதிஷ்டவசமானது. இப்படங்கள் குறித்து உங்களோடு கலந்துரையாடி எங்கள் குமுறல்களை கொட்டினோம். நீங்கள் அதை எந்த அளவுக்குப் புரிந்து கொண்டீர்கள் எனத் தெரியவில்லை. 

நினைவிருக்கிறதா கமல் அவர்களே? முன்பு ஒரு முறை நீங்கள் அமெரிக்கா சென்றபோது உங்கள் பெயரில் ஹசன் என்ற பெயர் ஒட்டி இருப்பதைப் பார்த்து முஸ்லிம் எனக் கருதி உங்களை அமெரிக்க அதிகாரிகள் சோதனையிட்டு அவமானப்படுத்தியதை மறந்துவிட்டீர்களா? உங்களைப் போன்றே புகழ் பெற்ற நடிகர் ஷாருக்கானுக்கும், முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமுக்கும் இதே போன்ற அவமானங்கள் 'முஸ்லிம்' என்ற காரணத்திற்காக நடந்தது. 

முஸ்லிம் எப்படி எல்லாம் அவமானப்படுத்தப்படுகிறான், தனிமைப்படுத்தப்படுகிறான் என்பதற்கு இதுவெல்லாம் ஆதாரங்கள். 

இந்நிலையில் நேற்று காலை (30-01-2013) நீங்கள் அளித்த பேட்டியை கோவையில் இருந்தவாறு எமது கட்சியின் மாநாட்டுப் பணிகளுக்கு மத்தியில் பார்த்தேன். மிகவும் உருக்கமாக இருந்தது. உங்கள் மீது இரக்கம் ஏற்படும் வகையிலும் அனுதாபத்தை திருப்பும் வகையிலும் தங்கள் வார்த்தைகள் இருந்தது. உங்களை யார் தமிழ்நாட்டை விட்டு போகச் சொன்னது? உங்களை மிரட்டுவதும், உருட்டுவதும் யார்? பின்னணி என்ன? அது உங்கள் மனசாட்சிக்குத் தெரியும். 

தங்கள் மீது எங்களுக்கு இப்போதும் மரியாதை உண்டு. நீங்கள் எங்களின் சகோதரர். அநீதியாக நீங்கள் யாராலும் பாதிக்கப்பட்டால் நீதியின் பொருட்டு உங்களுக்கு அரணாக இருப்போம். கவலைப்படாதீர்கள். ஆனால் உண்மையான பிரச்சனை என்ன என்பதை திசை திருப்பி முஸ்லிம்களை தனிமைப்படுத்துவதற்கு துணை போய் விடாதீர்கள். எங்களின் கோரிக்கை எங்களையும், எங்கள் குர்ஆனையும், வணக்க வழிபாடுகளையும் தவறாக சித்தரிக்க வேண்டாம் என்பதே! 

நீங்கள் உலக நிகழ்வுகளைத் தான் படமாக எடுக்க வேண்டும் என விரும்பி இருந்தால் ஏன் முள்ளிவாய்க்காலில் ஒரே நாளில் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதை படமாக எடுக்கவில்லை? பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து மும்பையில் 2 ஆயிரம் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதை ஏன் படமாக எடுக்கவில்லை? ஈராக்கில் அமெரிக்காவினால் 6 லட்சம் ஈராக்கியர்கள் கொல்லப்பட்டது பற்றி ஏன் படம் எடுக்கவில்லை? 

இப்படி பல துயர நிகழ்வுகள் உலகமெங்கும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அதையெல்லாம் படமாக எடுக்காமல் அமெரிக்காவை திருப்திப்படுத்தி, இந்தியர்களை கேவலப்படுத்தி, அதில் தமிழ்நாட்டு முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தி ஒரு படம் எடுத்தது ஏன்? இது தேவையா? 

30-1-2013 அன்று உங்கள் படம் வெளியான சில தியேட்டர்களின் மீது சில விஷமிகள் தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள்; பெட்ரோல் குண்டுகளை வீசி இருக்கிறார்கள். இவற்றை வன்மையாகக் கண்டிக்கிறோம். 

இப்படி தமிழ்நாடு முழுக்க உங்களுக்கு எதிராக, வேறு ஏதோ காரணங்களுக்காக யார் யாரோ செய்யும் எதிர்ப்புகளுக்கு எங்கள் சமூகத்தை காரணமாக்கக் கூடாது. எங்களுக்கு அதில் எல்லாம் உடன்பாடு இல்லை. உங்களை சரிப்படுத்துவது தான் எங்களுக்கு நோக்கம்; எதிர்ப்பது அல்ல. 

தமிழ்நாடு எங்கும் விஸ்வரூபத்தை முன் வைத்து ஒரு பதற்றம் உருவாக்கப்படுகிறது. இதற்குப் பின்னணியில் இருப்பது யார் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். 

உங்களுக்கும், அந்த பெரிய இடத்து தொலைக்காட்சிக்கும் இடையே நடந்த வணிக மோதல்கள் மற்றும் ப.சிதம்பரம் பிரதமராக வேண்டும் என்று நீங்கள் பேசியது போன்றவையெல்லாம் இப்பொழுது உங்களுக்கு எதிராக அரசியல் வடிவம் பெறுகிறது. இதற்கும் முஸ்லிம்களுக்கும் சம்பந்தம் இல்லை.

நல்லவேலையாக 30-01-2013 மறுபடியும் விதிக்கப்பட்ட தடைக்குப் பிறகு உங்களை ஹாருண் எம்.பி., தேசிய லீக் பசீர், முஸ்லிம் லீக் ஜைனுல் ஆபுதீன் ஆகியோர் சந்தித்திருக்கிறார்கள். என்ன பேசினீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் சில காட்சிகளையும், வசனங்களையும் அவர்களின் வேண்டுகோளை ஏற்று நீக்கப்போவதாகவும், முஸ்லிம்களுக்கும், எனக்கும் உள்ள பிரச்சனை இதன் மூலம் தீர்ந்துவிட்டதாகவும். நீங்கள் பேட்டியளித்துள்ளீர்கள். இதை கூட்டமைப்பு எப்படி அணுகப்போகிறது என்று தெரியவில்லை. எது எப்படி ஆயினும் இப்பிரச்சனை சுமூகமான முறையில் முடிக்கப்பட வேண்டும். 

எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்த பின்னால் கூட நாங்கள் அமைதி வழியிலேயே அனைத்தையும் சந்திக்கிறோம். இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்; இதை உங்கள் ரசிகர்களுக்கும் சொல்ல வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். 

இப்பிரச்சனையைக் காரணம் காட்டி பதற்றம் உருவாவதை யாரும் விரும்பவில்லை. அதே சமயம் உங்கள் மீது எங்களுக்கு தனிப்பட்ட முறையில் எந்தக் கோபமும் இல்லை. நீங்கள் எங்களையும் புரிந்து கொண்டு எங்களோடு சகோதரனாக வாழ வேண்டும் என்று விரும்புகிறோம். உங்களுக்கு இறைவன் நேர்வழி (ஹிதாயத்) காட்ட வேண்டும் என பிரார்த்திக்கிறோம். உங்கள் கடன் தீரவும், நீங்கள் அமைதியைப் பெறவும், இம்மண்ணிலேயே வாழவும் ஆண்டவன் உங்களை ஆசீர்வதிப்பானாக. 

நாம் எல்லோரும் இந்தியர்கள்; தமிழர்கள். ஒருவரை ஒருவர் மதிக்கும் சகோதரர்கள் என்பதை உணர்ந்து அன்பையும், நேசத்தையும் கட்டிக் காப்போம். 

இப்படிக்கு, 

உங்கள் முஸ்லிம் சகோதரன் தமிமுன் அன்சாரி, 
பொதுச் செயலாளர், 
மனிதநேய மக்கள் கட்சி என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

தஞ்சை(ப்) பூங்கா !



அதிரை – இது சேது பெருவழிச் சாலையில் அமையப் பெற்றிருக்கும் கடற்கரையோர ஊர். இங்கிருந்து சுமார் அறுபது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள தஞ்சாவூர், இவை வரலாற்று நகர், சுற்றுலா நகர், தொழில் நகர் போன்ற பல்வேறு சிறப்புகளைக் கூடுதலாக பெற்றிருந்தாலும் 'தமிழகத்தின் நெற்களஞ்சியம்' என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. 
இந்நகரின் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளப் பகுதியில்  'சிவகங்கைப் பூங்கா' ஒன்று உள்ளது. இவை தஞ்சை நகராட்சியின் நிர்வாகத்திற்கு உட்பட்டவையாகும். கோடை கால விடுமுறை தினங்களில் நாள் ஒன்றுக்கு சுமார் ஆயிரம் பேர் வரை இங்கு வந்து செல்வது கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.


இப்பூங்காவில்....
சிறுவர் சிறுமிகளை மகிழ்விக்க மான், வான்கோழி, பச்சைக்கிளி, வாத்து போன்ற பறவை இனங்களும், நரி, முயல், புறா, சீமை எலி, யானை போன்ற விலங்கு இனங்களும் உள்ளது.
சிறுவர் சிறுமிகளுக்கென்று இருக்கும் சிறுவர் பூங்காவில் சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல் விளையாட்டு, குடை ஊஞ்சல் போன்றவற்றில் குழந்தைகள் பலர் விளையாடி மகிழ்கின்றனர்.


கோடை வெயிலின் உஸ்ணத்தைப் போக்குவதற்கென்றே அங்கு காணப்படுகின்ற செயற்கை ஊற்று குளத்தில் பெரும்பாலும் சிறுவர் சிறுமிகள் பலர் குளித்து மகிழ்கின்றனர். 

நீந்துவதற்கென்று கண் கவர் நீச்சல் குளமும் அங்கு இடம் பெற்றுள்ளதோடு மட்டுமல்லாமல் அந்தரத்தில் தொங்கியபடிச் செல்லும் 'தொங்கு பாலம்' நம் அனைவரையும் சுண்டி இழுக்கும் !


இப்பூங்காவில் அமைந்துள்ள மிகப்பெரிய குளத்தை சுற்றிப் பார்ப்பதற்கென்றே மிதி படகு சவாரி, துடுப்பு படகு சவாரி போன்றவற்றோடு அனைத்து பகுதிகளையும் ஒரு முறைச் சுற்றிவர ரயில் சவாரியும் உள்ளது. 


முதியோர்கள் இல்லைப்பாறுவதற்கென்று படர்ந்த புல்வெளி, அரச மரம், ஆழ மரம், அசோகா மரம், யானைக்கால் மரம் ( ? ! ) போன்ற வயது முதிர்ந்த பெரிய மரங்களும், அழகிய செடி வகைகளும் பார்ப்பதற்கு அழகுறக் காட்சியளிக்கின்றன.
பூங்காவிற்கு வருகை தரும் பல குடும்பங்கள் தங்களின் வீட்டிலிருந்து கட்டிச்சோறு, புளிச்சோறு, தயிர்ச்சோறு போன்றவற்றை எடுத்துவந்து ஆங்காங்கே இருக்கின்ற நிழற்கூடத்தில் ஒன்றாக அமர்ந்து உணவருந்துவது நம்மை நெகிழ வைக்கும்.



 நன்றி: சேக்கனா M. நிஜாம் 

நீருக்குள் இருந்து வந்து பரபரப்பை ஏற்படுத்திய மாயக் கார்


நீருக்குள் இருந்து வந்து பரபரப்பை ஏற்படுத்திய மாயக் கார்ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளிலும் காணப்படும் வெள்ள நீர் காரணமாக போக்குவரத்துக்கள் பாதிப்படைந்துள்ளன.

அவ்வாறே சன்சைன்கோஸ்ட் பகுதியில் தேங்கியுள்ள வெள்ள நீரில்  பயணம் செய்த கார் ஒன்று திடீரென மக்களின் கண்களில் தென்பட்டதால்  பரபரப்பு ஏற்பட்டது.

பூனை முடியை ருசித்து சாப்பிடும் வினோத பெண்


அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலம் டெட்ராய்ட் நகரை சேர்ந்தவர் லிசா(வயது 43). இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு செல்ல பிராணியான பூனையை கொஞ்சி கொண்டிருந்த போது, அதன் முடியை தின்றாராம்.

ருசியாக இருந்ததால், தினமும் சாப்பிட தொடங்கியுள்ளார், பிற்காலத்தில் அதற்கு அடிமையாக மாறிவிட்டாராம்.
ஆயிரக்கணக்கான பூனை முடி உருண்டைகளை வாயில் வைத்து மெதுவாக மென்று சுவைத்துள்ளார். இதுவரை எந்த பிரச்னையும் வரவில்லை என்பதுதான் ஆச்சரியம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தினமும் காலை நான் தங்கியிருக்கும் அபார்ட்மென்ட் முழுவதும் பூனை முடியை தேடி சேகரிப்பேன்.
ஏறக்குறைய பஞ்சு மிட்டாய் போல இதன் டேஸ்ட் இருக்கும். சிறிது நேரம் வாயில் வைத்து சுவைப்பேன். பின்பு எடுத்து விடுவேன் என்கிறார்.

விஸ்வரூபம் மீதான தடை நீட்டிப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் போகும் கமல்

Kamal Move Sc சென்னை: விஸ்வரூபம் படத்தின் மீதான தடை நீட்டிப்பை எதிர்த்து கமல் ஹாசன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளார்.

விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு 2 வார தடை விதித்தது. இதை எதிர்த்து கமல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதித்து நேற்று இரவு உத்தரவிட்டார். 

இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. அந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் எலிப்பி தர்மாராவ், அருணா ஜெகதீசன் அடங்கிய பெஞ்ச் தனி நீதிபதியின் தீர்ப்புக்கு தடை விதித்து உத்தரவிட்டது. 

மேலும் இது குறித்து வரும் பிப்ரவரி மாதம் 4ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் பிப்ரவரி 6ம் தேதி இறுதி விசாரணை நடத்த நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர். 

தீர்ப்பு வருவதற்கு சற்று நேரத்திற்கு முன்பு பேட்டியளித்த கமல் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக தெரிவித்தார்.

இந்நிலையில் தடை நீட்டிப்பு செய்யப்பட்டதால் இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவிருக்கிறார் என்று தகவல் கிடைத்துள்ளது.

ஆல்கஹால் அருந்துவதால் ஏற்படும் 9 அபாயங்கள்!!!


இன்றைய காலத்தில் மார்டன் என்ற பெயரில் ஆல்கஹால் பருகுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதுவரை ஆண்கள் தான் அதிக அளவில் ஆல்கஹால் அருந்திக்கொண்டிருந்தனர். தற்போது பெண்களும் குடிக்க ஆரம்பித்துவிட்டனர். சொல்லப்போனால் ஆண்களை விட பெண்களே அதிகம் குடிக்கின்றனர். அத்தகையவர்களிடம் மது அருந்துவீர்களா என்று கேட்டால், அவர்கள் இல்லை, அது ஃபேஷன் நான் அவ்வளவாக அருந்தமாட்டேன் என்று சொல்வார்கள். ஆனால் என்ன தான் ஃபேஷனாக இருந்தாலும். அவற்றை குடிப்பதால், உடலில் ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையைச் சொன்னால், நம்பவேமாட்டீர்கள். அந்த அளவு நோயானது ஏற்படும். இந்த பழக்கத்தை உடனே நிறுத்த முடியாது. ஆனால் வயதுக்கு ஏற்றவாறு குறைத்துக் கொண்டு வந்தால், நல்லது. ஒரு வேளை அவ்வாறு செய்யாவிட்டால், பின் ஆல்கஹால் அதன் உண்மையான சுயரூபத்தை வெளிக்காட்டும். அதாவது உயர் இரத்த அழுத்தம், இதய நோய் போன்றவை உடலில் ஏற்படும். அதுவும் குறைந்த வயதிலேயே அளவுக்கு அதிகமான அளவில் ஆல்கஹால் பருகினால், அவை இளம் வயதிலேயே உடலில் நோய்களை அதிகமாக்கிவிடும். உண்மையில் நிறைய நோய்கள் ஆல்கஹால் பருகுவதால், ஏற்படுகிறது. இப்போது அவ்வாறு ஆல்கஹால் பருகுபவர்களின் உடலில் சாதாரணமாக எந்த நோய்கள் வரும் என்பதை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கல்லீரல் இழைநார் வளர்ச்சி: இந்த நோய் குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு ஏற்படும். இந்த நோயால் கல்லீரலில் உள்ள செல்களில் டாக்ஸின்கள் தங்கி, அந்த செல்களை அழிக்கும். இவை தொடர்ந்தால், இறுதியில் கல்லீரலின் செயல்பாடு முற்றிலும் குறைந்து, இறப்பு ஏற்படும்.

அதிக இரத்த அழுத்தம்: பொதுவாக மதுபானங்கள் பருகினால், இரத்த அழுத்தம் அதிகரிக்கும். அவையே அளவுக்கு அதிகமானால், இரத்த அழுத்தமானது உடனே அதிகரித்து, பின் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.

அதிக எடை: வோட்கா, பீர் மற்றும் ஜின் போன்றவற்றில் கொழுப்புகள் அதிகம் உள்ளன. பொதுவாக இவற்றை இந்த ஆல்கஹாலில் உணவுகளை விட, அதிகமான அளவில் கலோரிகள் இருக்கும். எனவே இதனை பருகினால், உடல் எடை அளவுக்கு அதிகமாக அதிகரித்துவிடும். பின் உடல் பாதிப்பின் ஆரம்ப நிலையான தொப்பை வந்து, பின் பல்வேறு கொடிய நோய்களும் உடலில் வந்துவிடும்.

இதய நோய்: இரத்த அழுத்தம் உடலில் அதிகரித்தால், இவை இதயத்திற்கு அழுத்தத்தை கொடுத்துவிடும். பின் மாரடைப்பு ஏற்படும். அதுமட்டுமின்றி, ஆல்கஹால், இரத்தத்தை உறைய வைத்து, இதயத்திற்கு போதிய இரத்த ஓட்டத்தையும் தடுத்துவிடும்.

அனீமியா: அனீமியா எனப்படும் இரத்தக்குறைவு, ஆல்கஹால் பருகுவதால், ஏற்படும். ஏனெனில் ஆல்கஹால் பருகும் போது, ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் கொள்ளவானது குறைந்து, உடலில் இரத்த ஓட்டம் குறைந்துவிடும். இதனால் எந்த வேலை செய்யாமல் இருக்கும்போதும், அதிகமான சோர்வு ஏற்பட்டு, மூச்சுவிடுவதே கஷ்டமாக இருக்கும்.

மன அழுத்தம்: மன அழுத்தம் குறைய வேண்டும் என்பதற்காக ஆல்கஹால் பருகுவார்கள். ஆனால் உண்மையில் ஆல்கஹால் பருகினால், தான் விரைவில் மன அழுத்தம் மற்றும் மன இறுக்கம் ஏற்படும்.

மூட்டு வலி: மூட்டுகளில் யூரிக் ஆசிட் அதிகமாக இருப்பதால், மூட்டு வலியானது ஏற்படுகிறது. அதிலும் ஆல்கஹால் அதிகமாக பருகினால், மூட்டுகளில் இன்னும் அதிகமான வலி ஏற்படும்.

கணைய பாதிப்பு: ஆல்கஹால் குடித்தால், கணையத்தில் காயங்கள் ஏற்பட்டு, சாதாரணமாக நடைபெறும் செரிமானத்தையும் பாதிக்கும். இத்தகைய பிரச்சனை ஏற்பட்டால், அது குணமாவது மிகவும் கடினம். இதனால் இறப்பு கூட ஏற்படலாம்.

நரம்பு பாதிப்பு: ஆல்கஹால் நரம்பு செல்களுக்கு விஷம் போன்றது. எனவே ஆல்கஹாலை அதிகம் பருகும் போது, அது உடலில் உள்ள நரம்புகளில் ஆங்காங்கு ஊசியை வைத்து குத்துவது போன்று இருக்கும் அல்லது உடலின் ஒரு பகுதி மட்டும் ஒரு மணிநேரத்திற்கு உணர்ச்சியில்லாமல் இருக்கும்.




அஸ்ஸாமில் 9ம் வகுப்பு மாணவியை கற்பழித்த எய்ட்ஸ் நோயாளி

குவாஹாத்தி: அஸ்ஸாமில் ஒன்பதாம் வகுப்பு மாணவி எய்ட்ஸ் நோயாளி ஒருவரால் கற்பழிக்கப்பட்டுள்ளார். 

அஸ்ஸாம் மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ள சில்சார் நகர் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் கடந்த 20ம் தேதி காலை 4 மணிக்கு தனது வீட்டுக்கு வெளியே உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். கழிவறைக்கு சென்றவர் வெகுநேரமாகியும் வராததால் பெற்றோர் அவரை தேடிச் சென்றனர்.

ஆனால் அவரைக் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. சில மணி நேரம் கழித்து அம்மாணவி வீட்டில் இருந்து 18 கிமீ தொலைவில் உள்ள ரயில் நிலையத்திற்கு வெளியே மயங்கிய நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். 

அங்கு மயக்கம் தெளிந்த பிறகு அவர் போலீசாரிடம் கூறுகையில், கழிவறைக்கு சென்றபோது 5 பேர் கொண்ட கும்பல் தன்னை கடத்தியதாகவும். அதில் ஒருவர் தனது முகத்தில் ஸ்ப்ரே அடித்தவுடன் மயங்கிவிட்டேன். அதில் ஒருவர் எங்கள் பகுதியைச் சேர்ந்த ராஜிப் போர்லஸ்கார் என்றார். 

மாணவியை பரிசோதித்ததில் அவர் கற்பழிக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் ராஜிபை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். இதையடுத்து ராஜிப் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அதில், தான் ஒரு ஹெச்.ஐ.வி. நோயாளி என்றும், சிகிச்சை பெற வேண்டி இருப்பதால் தனக்கு ஜாமீன் அளிக்குமாறும் தெரிவித்திருந்தார். ஆனால் அவருக்கு ஜாமீன் அளிக்க மறுத்த நீதிமன்றம் அவரை சிறையில் தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்குமாறு தெரிவித்துள்ளது.

விஸ்வரூபம்: அப்பீல் செய்த ஜெ. அரசுக்கு இந்திய தேசிய முஸ்லிம் லீக் நன்றி

சென்னை: விஸ்வரூபம் தடை நீக்கத்தை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளதன் மூலம் தமிழக அரசின் பொறுப்புணர்ச்சிக்கு முஸ்லிம்கள் நன்றிக்கடன் படுவார்கள் என்று இந்திய தேசிய முஸ்லிம் லீக் மாநில தலைவர் ஜவகர் அலி தெரிவித்துள்ளார்.

 இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

தமிழக அரசு மேல் முறையீடு செய்வதன் மூலம் தமிழக அரசின் பொறுப்புணர்ச்சிக்கு முஸ்லீம்கள் நன்றி கடன் படுவார்கள். நீதிமன்ற தீர்ப்பை மதித்து சட்டம் ஒழுங்கை பேணி காப்பவர்கள் முஸ்லிம்கள். இப்படத்தை எதிர்த்து சட்டப்படியான நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார். 

தீர்ப்பு வரும் வரை அமைதி காக்க கோரிக்கை:

விஸ்வரூபம் தடை நீக்கத்தை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது குறித்து மனித நேயமக்கள் கட்சியின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.வுமான எம்.ஹெச். ஜவாஹிருல்லா கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,

 விஸ்வரூபம் பற்றிய தீர்ப்பு இடைக்கால தீர்ப்பு தான். இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தமிழக அரசின் மனு குறித்த தீர்ப்பு வரும் வரை அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.


விண்வெளிக்​கு குரங்கை அனுப்பி உயிருடன் பத்திரமாக தரையிறக்கி​ய ஈரான் !






டெஹ்ரான்:அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் கடும் பொருளாதாரத் தடைகளையும் மீறி அணுசக்தி, செயற்கைக் கோள் தயாரிப்பு, ஏவுகணை சோதனை மற்றும் விண்வெளி திட்டங்களை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் உயிருள்ள குரங்கு ஒன்றை வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பி, மீண்டும் அதை பத்திரமாக பூமிக்குக் கொண்டு வந்து சாதனை படைத்துள்ளனர் ஈரான் விஞ்ஞானிகள். இதன்மூலம் ராக்கெட், விண்கலத் தொழில்நுட்பத்தில்
அந்த நாடு பெரும் முன்னேற்றத்தைக் கண்டுள்ளது உறுதியாகியுள்ளது. இது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கான நேரடியான சவாலாகக் கருதப்படுகிறது.
ஒரு குரங்குடன் கூடிய விண்கலத்துடன் பிஸ்காம் என்ற ராக்கெட் விண்வெளிக்கு ஏவப்பட்டது. சுமார் 120 கி.மீ. தூரத்தை எட்டிய இந்த ராக்கெட்டிலிருந்து பிரிந்த விண்கலம் பூமிக்குத் திரும்பியது. அதில் இருந்த குரங்கும் உயிருடன் பூமிக்குத் திரும்பி வந்தது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் எங்களது முயற்சியில் இது ஒரு மைல் கல்லாக இருக்கும் என்று ஈரான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 “சில நாடுகளிடம் மட்டுமே உள்ள இந்தத் தொழில்நுட்பத்தை எங்களது ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிக் காட்டியுள்ளனர்.” என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.
ரீ எண்ட்ரி(re entry) தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த ராக்கெட்டை மாற்றி வடிவமைத்தால் அதை ஏவுகணைகளாக மாற்ற முடியும். இந்த ஏவுகணை பூமியிலிருந்து சில நூறு கி.மீ. உயரே சென்று அங்கிருந்து திரும்பி தாக்க வேண்டிய நாட்டின் இலக்கு நோக்கி திரும்பி பல ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து தாக்குதலை நடத்த முடியும். ஏற்கனவே அணு ஆயுத ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ஈரானால் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் ஏவுகணை தயாரிப்பும் சாத்தியம் என்பதையே இந்த ராக்கெட் சோதனை உறுதிப்படுத்துகிறது.
ஈரானின் இந்த சாதனை இஸ்ரேல், அமெரிக்காவுக்கான எச்சரிக்கையாகக் கருதப்படுகிறது. ஆனால், அணு குண்டு தயாரிக்கவில்லை என்றும், மின்சார உற்பத்திக்காகவும், கேன்சர் ட்ரீட்மென்ட் உள்ளிட்ட மருத்துவ காரணங்களுக்காகவுமே அணு சக்தி ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் ஈரான் கூறி வருகிறது.
இது குறித்து பிரான்சின் பாதுகாப்பு ஆராய்ச்சியாளரான புருனோ குருசெல்லே கூறுகையில்; “ஈரானின் இந்த ரீ எண்ட்ரி தொழில்நுட்ப ராக்கெட் மிகப் பெரிய சாதனையாகும். பூமிக்கு வெளியே ராக்கெட்டை ஏவி அதில் பொறுத்தப்பட்ட விண்கலத்தை குறிப்பிட்ட இடத்தை நோக்கி திரும்பி வரச் செய்யும் தொழில்நுட்பத்தை ஈரான் பெற்றுவிட்டதாகவே தெரிகிறது. விண்வெளிக்கு ராக்கெட்டையோ, விண்கலத்தையோ ஏவி அதை பத்திரமாக திரும்பி வரச் செய்ய உயர் அழுத்தத்தைத் தாங்கும், உயர் வெப்ப நிலையைத் தாங்கும் தொழில்நுட்பம் தேவை. இதை ஈரான் பெற்றுவிட்டது. இதனால் இந்த ராக்கெட்டை ஏவுகணையாக மாற்றி அதனால் அணு ஆயுதங்களைக் கூட நெடுந்தொலைவுக்கு ஏவ முடியும்.” என்றார்.
2011ம் ஆண்டிலேயே விண்வெளிக்கு குரங்கை அனுப்புவோம் என்று ஈரான் கூறி வந்தது. ஆனால், அந்த ஆராய்ச்சிகளில் தேக்கம் ஏற்பட்டதால் சுமார் ஓராண்டு தாமதத்துக்குப் பின் தனது முயற்சியில் வென்றுள்ளது ஈரான்.

கொடூர செயலினால் நடுவர்களை நடுங்க வைத்த மனிதன்


கொடூர செயலினால் நடுவர்களை நடுங்க வைத்த மனிதன்கொடூர செயலினால் நடுவர்களை நடுங்க வைத்த மனிதன்



இவ்வளவு போராடியும் கடைசியில உயிரைத் தியாகம் செய்ய வேண்டியதாயிருச்சே!....


இவ்வளவு போராடியும் கடைசியில உயிரைத் தியாகம் செய்ய வேண்டியதாயிருச்சே!....இவ்வளவு போராடியும் கடைசியில உயிரைத் தியாகம் செய்ய வேண்டியதாயிருச்சே!....



உடலுக்கு வெளியே துடிக்கும் இதயத்துடன் பிறந்த அதிசய குழந்தை


உடலுக்கு வெளியே துடிக்கும் இதயத்துடன் பிறந்த அதிசய குழந்தை



புத்தகத்திலும் கொடிகட்டி பறக்கும் கங்ணம் ஸ்டைல்....

புத்தகத்திலும் கொடிகட்டி பறக்கும் கங்ணம் ஸ்டைல்....புத்தகத்திலும் கொடிகட்டி பறக்கும் கங்ணம் ஸ்டைல்....


அம்மாவின் சமையலை வெறுத்த சிறுவன் இன்றைக்கு தலைமை சமையல்காரராம்!...


அமெரிக்கா கலிபோர்னியாவில் San Fernando Valley பகுதியைச் சேர்ந்த Flynn McGarry என்ற 14 வயது சிறுவன் Beverly Hills என்னும் ரெஸ்டாரண்டில் தலைமை சமையல்காரர் பொறுப்பினை விரைவில் ஏற்கவுள்ளான்.
இச்சிறுவன் தனது அம்மாவின் சமையல் பிடிக்காத காரணத்தினால் தனியாக சமைக்க ஆரம்பித்து, தனது 11 வயதில் pop-up எனும் ரெஸ்டாரண்ட் தொடங்கி அதில் 18 வகையான உணவுகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறான்.
மேலும் இந்தச் சிறுவனின் திறமையினைக் கண்டு Beverly Hills எனும் ரெஸ்டாரண்ட் தலைமை சமையல்காரர் பொறுப்பினைக் கொடுத்து, 140 பேருக்கு 12 வகையான உணவுகளை சமைத்துக் கொடுக்கவும் முடிவு செய்துள்ளது.
இந்தச் சிறுவனின் சமையலுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு காணப்படுவதோடு, இவனது சமையலை சாப்பிட நபர் ஒருவருக்கு 160 பவுண்ட் வசூலிக்கப்படுகிறதாம்.