அமெரிக்காவின் வடக்கு பகுதியில் இருக்கும் பொன்னிர் கவுண்டியில் இருக்கும் ஏரியில் மீனவர் ஒருவர் வலை வீசியதில் பெரிய மீன் சிக்கியது.
அந்த மீனை சமையல் செய்வதற்காக சுத்தம் செய்த போது மீன் வாயில் இருந்து மனித கைவிரல் வெளியே வந்தது.
இந்த மர்ம விரல் அதே பகுதியை சேர்ந்த ஹான்ஸ் கலாக்சி (31) என்பவரின் கைவிரல் என கண்டுபிடிக்கப்பட்டது.
3 மாதங்களுக்கு முன்பு ஏரியில் படகில் சென்ற போது ஏற்பட்ட விபத்தினால் இடது கையின் 4 விரல்கள் துண்டித்து தண்ணீரில் விழுந்துவிட்டது.
அதன் பின்பு அந்த விரல்களை கண்டுபிடிக்க முடியவில்லை. தற்போது மீன் விழுங்கிய விரல் ஒன்று மட்டுமே கிடைத்துள்ளது.
