தமிழகத்தின் செல்லக் குரலாக ஆஜித் தேர்வு: பாராட்டிய ஏ.ஆர். ரகுமான்

Vijay Tv Super Singer Junior 3 Grand Final
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 பட்டத்தை சிறுவன் ஆஜித் தட்டிச்சென்றுள்ளான். வெற்றி பெற்ற சிறுவனுக்கு 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டினை இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார்.
சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 பட்டத்தை வெல்வதற்காக ஒர் ஆண்டுக்கும் மேலாக தினந்தோறும் தங்களின் இனிய குரலால் பாடி பல்லாயிரக்காணவர்களை வசீகரித்த குழந்தைகள் காத்திருந்தது அந்த தருணத்திற்காகத்தான்.
இறுதிப்போட்டியில் சிறப்பாகப் பாடி எப்படியாவது பட்டத்தை வென்றுவிடவேண்டும் என்று போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் கனவும், லட்சியமும் இருந்தது. அதற்கான நாளும் வந்தது.
நேற்றைய தினம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் சுகன்யா, பிரகதி, கவுதம், ஆஜீத், யாழினி ஆகிய 5 போட்டியாளர்களும் தங்களின் மிகச்சிறந்த பங்களிப்பினை வெளிப்படுத்தினர். ஒவ்வொருவரும் பாடி முடித்த உடன் பார்வையாளர்களின் கரகோஷம் அரங்கத்தை எட்டியது.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வந்திருந்து குழந்தைகளின் குரலில் வெளிப்பட்ட பாடல்களை ரசித்து சிரித்தார்.
அனைவருமே நன்றாக பாடினர் என்றாலும் பரிசு ஒருவருக்குத்தானே தரமுடியும். நடுவர்களின் மதிப்பெண்களோடு, உலகம் முழுவதும் இருந்த ரசிகர்கள் எஸ்.எம்.எஸ் மூலம் ஓட்டளித்து தேர்ந்தெடுத்த தமிழகத்தின் செல்லக்குரலை இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் அறிவித்தார். சிறுவயதில் மைக்கேல் ஜாக்சனின் திறமை அந்த சிறுவனிடம் வெளிப்பட்டதாக தெரிவித்ததும் அரங்கமே ஊகித்துவிட்டது.
ஆஜித் பாடிய வந்தேமாதரம் பாடல் நடுவர் ஏ.ஆர். ரகுமானை மட்டுமல்ல ஒவ்வொரு ரசிகரையும் கவர்ந்துவிட்டதுபோல... ஆஜித் முதல் இடம் பெற்றுள்ளதாக பலத்த கரகோஷத்திற்கு இடையே அறிவித்தார் ஏ.ஆர்.ரகுமான். சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 பட்டத்துடன் 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டிற்கான சாவியை ஆஜித்திற்கு வழங்கினார் ஏ.ஆர்.ரஹ்மான்.
இரண்டாவது இடம் பெற்ற பிரகதிக்கு 5 லட்சம் ரூபாய் பரிசளிக்கப்பட்டது. மூன்றாவது இடம் பிடித்த யாழினிக்கு 3 லட்சம் ரூபாய் பரிசும், நான்கு, ஐந்தாம் இடம் பிடித்த சுகன்யா, கவுதமிற்கு தலா 2 லட்சம் ரூபாய் பரிசளிக்கப்பட்டது.
கிட்டத்தட்ட ஓர் ஆண்டுகாலம் பாடி ரசிகர்களை சந்தோசப்படுத்திய செல்லக்குரல்கள் சீசன் 3 நேற்றோடு முடிவுக்கு வந்தது இசை ரசிகர்களுக்கு வருத்தமான விசயம்தான்.
கவலைப்படாதீர்கள் சூப்பர் சிங்கர் சீசன் 4 இன்னும் சில தினங்களில் விஜய் டிவியில் தொடங்கப்போகிறது.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: